நற்சிந்தனை தமிழ் – Natsinthanai In Tamil

Natsinthanai In Tamil

இந்த பதிவில் “நற்சிந்தனை தமிழ் – Natsinthanai In Tamil” பார்க்கலாம்.

நற்சிந்தனை தமிழ் – Natsinthanai In Tamil

தன்னால் ஒன்றை செய்ய இயலாவிட்டால் அவன் கையில் எடுக்கும் இறுதி ஆயுதம் விமர்சனம்.. இயன்றவன் அதை தடுக்க எடுக்க எடுக்கும் ஆயுதம் புன்னகை.!

உருவத்துக்குத்தான் முக்கியத்துவம் என்றால் யானை தான் காட்டுக்கு ராஜாவாகி இருக்கும்.

நாளை எல்லாம் மாறும் என்று உனக்குள்ளே ஆறுதல் சொல்லுவதையும் வீண் கனவு காண்பதையும் விடுத்து இன்று என்ற இந்த நிஜ உலகினில் உன் முயற்சியை கையாள பழகிக் கொள்.!

யார் ஒருவர் நம் கஷ்டமான நேரங்களில் கூட இருக்கிறர்களோ அவர்களே நம் சந்தோஷமான நேரங்களிலும் கூட இருக்க தகுதியானவர்கள்..!

அன்பை அன்பால் தான் வெல்ல முடியும்.. ஆணவத்தால் அல்ல.

பல வலிகளை தாங்கியவர்கள் புன்னகைத்து கொண்டே சொல்லும் ஒரு வார்த்தை தான் “பழகிருசு”.

நீ எதை சொல்கிறாய் என்பதை விட யாரிடம் சொல்கிறாய் என்பதே முக்கியம்.. மிகவும் கவனமாக இருங்கள்.

எதுவாக இருந்தாலும் கடந்து பழகு எல்லாம் சிறிது காலம் தான்.!

அதிர்ச்சியை அலட்ச்சியமாக கடக்க பேரதிர்ச்சியை அனுபவித்தவர்களால் தான் முடியும்.

தோல்வியே வேண்டாம் என்பவர்களுக்கு வெற்றியே கிடைப்பதில்லை.

அறிவை விட கற்பனை முக்கியமானது.. அறிவுக்கு எல்லை உண்டு.. கற்பனைக்கு எல்லையே கிடையாது.

பக்குவம் என்பது யாதெனில் அடுத்தவர் கூறுவது பொய் என்று தெரிந்தும் அப்படியா என்று ஏதும் தெரியாதது போல் நடிப்பதாகும்.

இங்கு உதிர்க்கப்படும் வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கானதா எண்ணினால் உங்கள் இயல்பை தொலைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம்.

யாரையும் பார்த்தவுடன் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று முடிவு செய்யாதீர்கள்.. அவர்களுடன் பழகிய பின்பு தான் தெரியும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று.

வாழ்நாளில் ஒருபோதும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.. நேற்று நீங்கள் யார் என்பதோடு உங்களை ஒப்பிட்டு பாருங்கள்.

சிரிப்புக்கு நிம்மதிக்கும் வேறுபாடு உண்டு.. சிரிப்பதை போன்று நடிக்க முடியும்.. ஆனால் நிம்மதியாய் இருப்பதைப் போல் நடிக்க முடியாது.!

உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே போதும்.. துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது.

நல்ல சொற்கள் குளிர்ந்த தண்ணீரை விட மிக மிக குளிர்சியானவை.

தாங்க முடியாத அளவிற்கு ஒருபோதும் நமக்கு துன்பங்கள் ஏற்படுவதில்லை.

ஒருவரை அவரின் கடந்த காலத்தை மட்டும் வைத்து எடை போடாதே.. அவர்களின் எதிர்காலம் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.

தோல்வியும் துன்பமும் உன்னிடம் வரும் போது தனியாக வருவதில்லை.. கூடவே “மனவலிமையையும்” அழைத்து வருகின்றது.

வெற்றியை விட பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை.. முடிவே இல்லாத ஒரு வார்த்தை முயற்சி மட்டுமே.!

எந்த சூழ்நிலையிலும் நீ வீழ்ந்தாலும்.. பிறர் உன்னை வீழ்த்தினாலும்.. எழுந்து நிற்க கற்றுக் கொள்ளுங்கள்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.