இந்த பதிவில் “ஊக்கமூட்டும் பொன்மொழிகள்” பதிவை காணலாம்.
- பொன்மொழிகள்
- Motivational Ponmozhigal In Tamil
ஊக்கமூட்டும் பொன்மொழிகள்
1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.”
2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.”
3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”
4. “ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.”
5. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.”
6. “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.”
7. “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்.. அதை வெற்றி கொள்வதற்கான வழி.!”
8. “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”
9. “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!”
10. “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”
11. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!”
12. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!”
13. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!”
14. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.”
15. “நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!”
16. “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை.. நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!”
17. “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!”
18. “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.. நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!”
19. “விரும்பியதை அடைய எப்போதும் போராட வேண்டி இருக்கும்.. அந்த போராட்டம் தான் உன் விருப்பத்தின் மதிப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும்.!”
20. “வாழ்க்கையில் வாழ வழியில்லை என்று புலம்பாதீர்கள்.. நீங்கள் போகும் பாதைதான் வாழ்க்கை என்பதை மறந்து விடாதீர்கள்.!”
21. “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!”
22. “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”
23. “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை மாறலாம்.. அதற்காக உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.”
24. “வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் நமக்கான தடத்தில் மட்டுமே நாம் ஓட வேண்டும் எத்தனை போட்டியாளர்களிருந்தாலும் அத்தனை தடங்களுக்கும் ஒரே இலக்கு தடம்மாறாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.!”
You May Also Like: