Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 05

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : புறங்கூறாமை

குறல் எண் : 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

மு.வரதராசன் உரை:

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

சாலமன் பாப்பையா உரை:

கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

பரிமேலழகர் உரை:

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் – தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் – கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், “அயலாரோடும்” என்பது வருவித்துரைக்கப்பட்டது. “அறிதல்” தமக்கு உறுதி என்று அறிதல். கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை (கலி. மருதம்.27) என்புழிப் போலத் “தேற்றாமை” தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.

You May Also Like:

Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 04

Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 03