இந்த “நற்சிந்தனை துளிகள் – Natsinthanai in Tamil” உள்ளடக்கியுள்ளது.
- நற்சிந்தனை துளிகள்
- Natsinthanai in Tamil
- Nat sinthanai
நற்சிந்தனை துளிகள் – Natsinthanai in Tamil
ஒவ்வொரு தோல்விக்கும்
அடுத்தவரை குறை சொல்லும்
பழக்கம் இருந்தால்.. வெற்றி
என்பது எப்போதும் எட்டா
கனியாகவே இருக்கும்.!
திட்டம் இல்லாமல்
தொடங்கப்படும் நாள்..
மன நிறைவோடு முடிவதில்லை.
ஒவ்வொரு சவாலையும்
எதிர்கொண்டு வெற்றி பெறும்
போது உங்களின் வலிமையையும்
தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றது.!
தேவையற்ற விடயங்களை
சிந்தித்து கொண்டிருந்தால்..
தேவையான விடயங்களை
சிந்திக்க நேரம் இருக்காது.
கடமையை செய்யாமல்
நேரத்தை வீணடிப்பது..
உங்களுக்கு நீங்களே
செய்யும் மாபெரும் துரோகம்.
ஒருவர் கோவப்படும் போது
இன்னொருவர் அமைதியாகி
விடுங்கள்.. இதை பின்பற்றினால்
ஒற்றுமை அதிகரிக்கும்.!
ஒவ்வொரு செயலையும் முழு
கவனத்துடன் செய்யுங்கள்..
உங்கள் வாழ்க்கை
ஆனந்தமாக இருக்கும்.
எந்த இக்கட்டான
சூழ்நிலையிலும் நீங்கள் சாதிக்க
பிறந்தவர் என்பதை நினைவில்
வையுங்கள்.
உச்ச கட்ட கோபம் வரும் போது
அதன் பாதிப்பை உணர்ந்து
சாந்தம் அடைந்தால் உங்கள்
வாழ்க்கை ஆனந்தமாக
இருக்கும்.!
உங்களின் வார்த்தைகள்
உங்கள் மனதில் இருந்து
இன்னொருவர் மனதிற்கு
செல்கிறது.. எனவே
கவனமாக இருங்கள்.
உன்னால் வெற்றி பெற முடியாது
என்று பிறர் சொல்வதை
நம்பாமல்.. உங்கள் மேல்
நம்பிக்கை வைத்தால்
வெற்றி நிச்சயம்.!
உங்களை நீங்கள் மனதார
நேசித்தால் உங்களின்
மாபெரும் ஆற்றல் வெளிப்படும்.
எப்போதும் யாரையாவது
எதிரியாய் சித்தரித்து..
அதில் சக்தி பெற்று வாழ்க்கையில்
உயர்வது மன நிறைவை தராது.!
உங்களை நீங்களே நம்பவில்லை
என்றால்.. இந்த உலகத்தில்
யார் நம்புவார்கள்..?
மனிதராய் பிறந்தது
பொன்னான வாய்ப்பு அதை
பயன்படுத்தி சாதனை
படைத்திடுங்கள்.
உங்களைத் தவிர வேறு
எதுவும் உங்களுக்கு அமைதியை
தர முடியாது.. மற்றவரை
அறிந்தவன் புத்திசாலி..
தன்னை தானே அறிந்தவன்
ஞானி.!
உங்கள் மீது ஒருவர்
வெறுப்பை கொட்டும் போது..
நீங்கள் பொறுமையுடன்
இருந்தால் உங்களின்
மன உறுதியை இந்த உலகம்
மனதார பாராட்டும்.
நல்லதே நடக்கும் என்று
சொல்லாமல் நல்லதே நடக்கிறது
என்று சொல்லுங்கள்.!
எந்த ஒரு கஷ்டமான
சூழ்நிலையாக இருந்தாலும் அதில்
இருக்கும் வாய்ப்புகளை
பயன்படுத்தி முன்னேறுங்கள்.
உங்களின் தோல்விக்கு நீங்கள்
பொறுப்பு ஏற்றால் தான்
உங்களின் வெற்றிக்கு இந்த
உலகம் வழிகாட்டும்.!
செய்ய வேண்டியதை மட்டும்
செய்தால் கிடைக்க வேண்டிய
அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
தேவையற்ற எண்ணங்களை
சிந்தித்து கவலை அடைவது
சாத்தியம் என்றால்..
தேவையான எண்ணங்களை
சிந்தித்து மகிழ்ச்சி அடைவதும்
சாத்தியமே..!
எத்தனை தோல்விகளை
சந்தித்தாலும்.. நீங்கள்
ஒரு சாதனையாளர் என்பதை
எப்போதும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த அளவிற்கு
தன்னம்பிக்கையுடன்
இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு
வாழ்க்கையில் உயரலாம்.!
எல்லாம் தெரிஞ்ச மாதிரி
பேசுறவர்களிடம்.. எதுவுமே
தெரியாத மாதிரி நடந்து
கொள்பவன் தான் புத்திசாலி.
என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில்
உள்ளது என்று அடிக்கடி
உங்களிடம் சொல்லுங்கள்.
தோல்வியில் இருந்து மீண்டு
வந்து வெற்றி அடையும் பொழுது
மிகப் பெரிய பரவசத்தை
நீங்கள் உணர்வீர்கள்.
மேலும் படியுங்கள்..