இந்த இரவு வணக்கம் காதல் கவிதை (Good Night In Tamil) ஊடாக உங்கள் அன்புக்குரியவர்களின் இரவு பொழுது இனிமையாக அமைய வாழ்த்துக்களை கூறிக் கொள்ளுங்கள்.
இரவு வணக்கம் காதல் கவிதை (Good Night In Tamil)
காதல் என்பது பல
இடங்களில் பூக்கும் ரோஜா
மலர்கள் அல்ல அது
நம் இதயத்தில் மட்டும்
பூக்கும் அன்பு
மலர்கள்.. என் காதலுக்கு
இனிய இரவு வணக்கம்.
பல மணிநேரம் பேசும்
உதடுகளை விட சில
நொடிகள் நினைக்கும்
இதயத்திற்கு தான்
அன்பு அதிகம்.. என்றும்
உன் நினைவுகளுடன்
இனிய இரவு வணக்கம் அன்பே..!
என் காதல் என்பது கற்பனையில்
கலைந்து விடும் என்று
தெரிந்தும்.. மனமோ
அழகிய நினைவுகளை தேடி
அலைகின்றது.. இனிய
இரவு வணக்கம் அன்பே..
எந்த உறவாக இருந்தாலும்
சரி அதில் உண்மையான
அன்பு இருந்தால் மட்டும்
தான் நாம் விலகி சென்றாலும்
நம்மை தேடி வரும்..
இனிய இரவு வணக்கம்.
என் காதல் தேவதையின்
வரவுக்காக தினம் தினம்
காத்திருந்தேன் இரவுக்காக
இப்படிக்கு கனவு.. இனிய
கனவு வணக்கம் என் காதலே.
இந்த இரவின் மடியில்
விழிகளை மூடி கவலைகளை
மறந்து நிம்மதியாக உறங்கு
என் அன்பே..
இனிய இரவு வணக்கம்.
பகல் முழுவதும் உன்னைக்
காண ஏங்கி தவித்து
களைத்து போன
விழிகளுக்கு சிறிது
நேரம் ஓய்வு கொடுப்போம்..
இனிய இரவு வணக்கம்.
போலியாக பேசுவதும்
பிடிக்காது போலியாக
நடிப்பதும் பிடிக்காது
நான் நானாக இருப்பதால்
என்னவோ என்னை
சிலருக்கு பிடிக்கவில்லை
இப்படிக்கு இதயம்..
இரவு வணக்கம்.
நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் கிடையாது..
இன்று வந்த கவலைகள்
நாளை நம்மை தொடராது..
நிம்மதியாக உறங்கு..
இனிய இரவு வணக்கம் அன்பே.
நீ புன்னகைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன் முன்னால் வருவேன்
உன் அழகை ரசிப்பதற்காக..
நீ கண்ணீர் சிந்தும்
ஒவ்வொரு நொடியும்
உன் பின்னால் வருவேன்
உன் கண்ணீர் துடைக்க..
இனிய இரவு வணக்கம் அன்பே.
சந்தோசத்திலும் சரி
என் சோகத்திலும் சரி
உன்னுடன் மட்டுமே
பேச ஏங்கித் தவிக்கிறது
என் மனம்..
இனிய நிலாப் பொழுது
வணக்கம் காதலே.
உலகிற்கே ஒளி கொடுக்கும்
பகலவனே உறங்க
சென்று விட்டான்.
எனக்கு ஒளி கொடுக்கும்
நீ மட்டும் எதற்கு
விழித்திருக்கிறாய்..
போய் கண்ணுறங்கு
என் அன்பே
இனிய இரவு வணக்கம்.
உன் இரவு இனிமையாக
அமைய என் இனிய
நினைவுகளையும் இனிய
வாழ்த்தினையும் உனக்கு
அனுப்பிகிறேன்.. இனிய
இரவு வணக்கம் காதலே.
இந்த நிலாவுடன்
இணைந்து உனக்கு நான்
என் இனிய இரவு வணக்கத்தை
கூறிக் கொள்கிறேன்.
நிம்மதியாக கண்ணுறங்கு
இனிய இரவு வணக்கம்.
இனிமையான தென்றல்
வீச அமைதியாக உறங்கு
அன்பே இனிய இரவு வணக்கம்.
என் அன்புக்கு
உரியவளுக்கு என்
அன்பு நிறைந்த
இரவு வணக்கம்
நிம்மதியாக உறங்கு.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.