காவல்துறை உங்கள் நண்பன் கட்டுரை

Kavalthurai Ungal Nanban Katturai In Tamil

இந்த பதிவில் “காவல்துறை உங்கள் நண்பன் கட்டுரை” பதிவை காணலாம்.

மக்களின் நலனிற்காக உண்மையாக உழைக்கும் காவல்துறை நண்பர்களை அனைவரும் மதிக்க வேண்டும்.

காவல்துறை உங்கள் நண்பன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெருமை மிக்க காவல்துறை
  3. காவல் துறையின் பணிகள்
  4. காவல்துறையின் சிறப்பு
  5. காவல்துறையும் சமூகமும்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் சட்டம்⸴ ஒழுங்கு பாதுகாக்கப்படுவதில் காவல் துறையின் பங்கே அதிகமாகும். ஊரைக் காக்கும்⸴ உயிரைக் காக்கும் உன்னதப் பணியினை செய்வதால் தான் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுவர்.

உண்மை நண்பன் எப்போதும் பயன் கருதி உதவமாட்டான். இதே போல் தான் காவல்துறையும் துன்பங்களின் போது பயன் கருதாது காப்பாற்றுவார்கள்.

நேர்மையாகவும்⸴ துணிச்சலாகவும் இரவு⸴ பகல் பாராது கடமையாற்றும் காவல்துறையினர் தான் நியக் கதாநாயகர்கள் ஆகின்றார்கள். இக்கட்டுரையில் காவற்துறையின் அளப்பரிய சேவையைப் பற்றிக் காண்போம்.

பெருமை மிக்க காவல்துறை

காவல்துறையானது தமது உயிரைக் கூட பொருட்படுத்தாது பொதுமக்களுக்கு அயராது சேவை புரிந்து வருகின்றனர். பேரிடர் ஏற்படும் போதெல்லாம் துயர் துடைக்க வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் இதனை நாம் அதிகம் கண்டுள்ளோம்.

சமூகத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டவும் வன்முறையைத் தட்டிக்கேட்டு நீதியை நிலைநாட்டவும் காவல்துறை பாடுபடுகின்றமை பெருமைக்குரியதாகும்.

சட்டங்களே சமூகத்தை நல்வழிப்படுத்துகின்றன. தவறுகள் இடம் பெறுவதையும்⸴ தவறுக்கு தண்டனை கொடுப்பதிலும் சட்டங்கள் பின் நிற்பதில்லை. இத்தகைய சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரம் காவல் துறைக்கு உள்ளமை பெருமைக்குரியதாகும்.

காவல் துறையின் பணிகள்

சட்டம்⸴ ஒழுங்கை பாதுகாப்பது காவல் துறையின் முதன்மையான பணியாகும்.

சமூகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளான கொலை⸴ கொள்ளை⸴ வன்புணர்வு⸴ போதைப் பொருட் பாவனை⸴ போதைப் பொருள் விற்பனை போன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது காவல்துறையினரே.

ஆபத்தான இடங்களில் பாதுகாப்பு வழங்குவதும் காவல்துறையின் பணி ஆகும்.

காவல்துறையின் சிறப்பு

இன்றைய காலத்தில் காவல்துறைப் பணியானது பல இளைஞர்களாலும் விரும்பப்படுவதாகவும்⸴ அவர்களின் எதிர்கால லட்சியமாகக் கொண்டுள்ளமை சிறப்புக்குரியதாகும்.

நாட்டில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதனையும் சட்டத்தின் முன்னிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனையை பெற்றுத்தரக் கூடியதுமான அதிகாரமுள்ள பணியாகும்.

காவல்துறை நாட்டில் இருப்பதால் தான் நாட்டின் பல இடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நாட்டின் சட்டதிட்டங்களும்⸴ ஒழுங்குகளும் கடைப் பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

காவல்துறையும் சமூகமும்

நாட்டில் திருட்டு⸴ கொலை⸴ கொள்ளை⸴ வன்புணர்வு⸴ துஷ்பிரயோகம் எனப் பல சமூகச் சீர்கேடுகள் நாள் தோறும் நடைபெற்று வருவதனைக் காணமுடிகின்றது. இத்தகைய சமூகச் சீர்கேடுகளைத் தடுப்பதில் காவல்துறை பாடுபடுகின்றது.

சாலை விபத்துக்கள் சாலை விதிமுறையை மீறிச் செல்வதால் நிகழ்கின்றன. இதனை சீர்செய்து சமூகத்தில் வீதி விபத்துக்கள் இடம் பெறா வண்ணம் போக்குவரத்துக் காவல்துறை கட்டுப்படுத்துகின்றது.

போதைப் பொருள் பாவனை⸴ விற்பனை இரண்டுமே சமூகத்தில் அதிகம் இடம்பெறுகின்றன. இதனைத் தடுப்பதில் இரவு பகலென அயராது உழைக்கின்றனர்.

தனிப்படை அமைத்து சிறப்பாகச் செயற்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற பணியினை மேற்கொண்டு சமூகத்தைச் சீர்திருத்துகின்றனர்.

முடிவுரை

காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறும் அளவில் காவல் துறையினர் செயற்பட்டாலும் மாறாக அவர்கள் பற்றிய விமர்சனங்களும் அடிக்கடி எழவே செய்கின்றன.

லஞ்சம்⸴ ஊழல்⸴ அதிகார துஷ்பிரயோகம் முதலானவை காவல்துறை எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். இதனால் மக்கள் மத்தியில் காவல்துறை மீது நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது.

மக்களின் நலனிற்காக உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கும் காவல்துறை நண்பர்களை அனைவரும் மதிக்க வேண்டும்.

You May Also Like:

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

நேர்மை பற்றிய கட்டுரை