இந்த பதிவில் “காலை காட்சி பற்றிய கட்டுரை” பற்றிய இரண்டு (02) கட்டுரைகள் தொகுப்பை காணலாம்.
அழகான இந்த பொழுதுகளை வர்ணிக்காத கவிஞர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு காலை காட்சி மனதுக்கு நெருக்கமானவை.
காலை காட்சி பற்றிய கட்டுரை – 1
அதிகாலை பொழுது ஒரு நாளின் ஆரம்பம் அது ஒரு அபூர்வம். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் உதயமாகின்ற பொழுதில் இந்த உலகம் விடியலை காண்கின்றது.
பறவைகள் தமது கூட்டை விட்டு புறப்பட்டு தமது இரை தேடி பறக்கின்றன. அவை எழுப்பும் ஓசைகள் அவ்வளவு அழகானதாய் இருக்கும். ஆடு மாடுகள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியாக தமது மேய்ச்சல் தரைகளை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.
அழகான சோலைகளில் அழகிய புது மொட்டுக்கள் பூவாக மலர துவங்கும் அந்த அழகிய பூக்களை நோக்கி வண்டுகளும் தேனீக்களும் தேன் குடிக்க பறந்து வர துவங்கும். அந்த அதிகாலை பொழுதில் மனிதர்கள் தமது வேலைகளை பார்க்க உற்சாகமாக எழுந்து ஓட ஆரம்பிப்பார்கள்.
கோவில்களில் எழுப்பப்படும் மணி ஓசை காலை பொழுதை அறிவிக்கின்றது. காலை காட்சி பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் சூரியனின் பொற் கதிர்கள் இந்த பூமியை உற்சாகமடைய செய்ய எல்லோரும் உற்சாகமாய் இயங்க ஆரம்பிகின்றனர்.
இருள் நிறைந்து கிடந்த இந்த பூமியை ஒளியூட்டுகின்ற அந்த காலை பொழுது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் தருவதாக இருக்கின்றது பெரிய நீர் நிலைகளில் சூரியன் எழுந்து வருவதனை பார்க்கும் போது மிகவும் அழகாய் இருக்கும்.
எந்த தொழிலை ஆற்றுபவர்களாக இருந்தாலும் காலை பொழுதை சரியாக ஆரம்பிக்க எண்ணுவார்கள். ஏனென்றால் காலை பொழுது மனித வாழ்வினை ஆரம்பிக்கும் பொழுதாகும்.
நல்ல துவக்கம் புதிய முயற்சி என எல்லா விடயங்களையும் ஆரம்பிக்கின்ற நல்லதோர் காட்சியாக காலை பொழுது அமைகின்றது. இந்த காலை காட்சியின் அழகை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது எனும் அளவிற்கு இயற்கையின் வரமாக விளங்குகின்றது
காலை காட்சி பற்றிய கட்டுரை – 2
காலை பொழுது இது ஒரு அழகியல் இயற்கையின் பெரும் வியப்பு. சூரியன் கிழக்கில் உதிக்கின்ற அந்த காட்சி மலைகளின் இடையேயும் பெரும் சமுத்திரங்களின் வழியாகவும் நீர் நிலைகளின் வழியாகவும் தோன்றும் அழகை வர்ணிக்க இந்த உலகில் உவமைகளே இல்லை.
இரவு வந்து உறங்கி கிடந்த எல்லா உயிர்களும் விடியலை கண்டு உயிரத்தெழுகின்றன. மண்ணிலே முளைத்த பச்சை செடிகள் காலை பொழுது கண்டு துளிர்க்கின்றன. பறவைகள் ஆரவாரம் எழுப்பிய படி மகிழ்ச்சியாக பறக்கின்றன.
பூமியில் படர்ந்து கிடந்த பனி துளிகள் மெல்ல உருகி வெளிச்சம் பரவுகின்றது. இயற்கையின் இயக்கம் ஆரம்பிக்கின்றது சூரியன் வரவு கண்டு தான் இந்த இயற்கையே பூத்து குலுங்குகின்றது. காலை பொழுதும் அதனோடு சேர்ந்த மக்களின் உற்சாகமும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
வயல்களை நோக்கி செல்லும் உழவர்கள் கடலை நோக்கி செல்லும் மீனவர்கள் பாடசாலைகளை நோக்கி செல்லும் மாணவர்கள் என ஒரு பரபரப்போடு காலை பொழுது ஆரம்பிக்கின்றது.
இந்த காலகட்டத்தில் பரபரப்புக்களுடன் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களது வாழ்வில் இந்த அழகான விடியல் பொழுதினை கண்டு கழிக்க பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை.
அழகான இந்த பொழுதினை வர்ணிக்காத கவிஞர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு எமது வாழ்வில் காலை காட்சிகளின் அழகியல் மனதுக்கு நெருக்கமானவை.
மனதுக்கு உற்சாகமளிக்கின்ற இந்த காலைபொழுதில் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளோடும் முயற்சிகளோடும் அந்த நாளினை வரவேற்போம்.
You May Also Like: