மழையின் அவசியம் கட்டுரை

Malai Neer Segaripu Avasiyam

இந்த பதிவில் “மழையின் அவசியம் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கை நமக்களித்த கொடையான மழை நீரை சேகரித்து பாதுகாப்பதன் மூலம் உலகை நிலை பெற செய்ய முடியும்.

மழையின் அவசியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மழை நீரின் முக்கியத்துவம்
  3. மழை நீரின் நன்மைகள்
  4. மழை நீர் சேமிப்பு
  5. மழை நீர்ப் பாதுகாப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இந்த உலகமானது நிலம்⸴ நீர்⸴ நெருப்பு⸴ காற்று⸴ ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் இயங்கிக்கொண்டிருக்கிறது அதிலும் நீரின்றி எதுவும் இயங்காது. இதனால் தான் வள்ளுவப் பெருந்தகை “நீரின்றி அமையாது உலகுˮ என்று கூறியுள்ளார்.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில் 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும்⸴ 35% வெயிலில் ஆவியாவதாகவும்⸴ 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்படுகின்றது.

இத்தகைய மழை நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கும்⸴ அத்தியாவசிய தேவைக்கும் இன்றியமையாததாகும். இக்கட்டுரையில் மழை நீரின் அவசியம் பற்றி நோக்கலாம்.

மழை நீரின் முக்கியத்துவம்

  • மழை நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது ஆகும். அதாவது குடி நீரை மழைநீர் வழங்குகின்றது. விலங்குகள்⸴ பறவைகள் உயிர் வாழவும் அத்தியாவசியமாகும்.
  • ஏரிகள்⸴ குளங்கள் முதலானவை வற்றிப் போகாமலிருக்க மழை நீரே அவசியம் ஆகும்.
  • விவசாயம் மழை நீரை நம்பியே செய்யப்படுகின்றது.
  • அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மழைநீர் அவசியமாகும்.

மழை நீரின் நன்மைகள்

மழைநீர் ஆனது நமக்குப் பல வழிகளிலும் நன்மை செய்கின்றது. விவசாயம் மேற்கொள்ள மழைநீர் பயன்படுகின்றது.

மரஞ் செடி⸴ கொடிகள் வளர்வதற்கும் வறட்சியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மழைநீர் பயன்படுகின்றது. மழை நீரைச் சேமித்து வைப்பதன் மூலம் சுத்தமான குடிநீரைப் பெற உதவுகின்றது.

மழை நீர் சேமிப்பு

பூமியில் உள்ள நீர் மாசடைகின்றது. இதனால் மழைநீர்ச் சேமிப்பு அவசியமாகும். வீணாக மழை நீர் கடலுடன் கலப்பதைத் தடுத்து பயனடைய மழைநீர் சேமிப்பு அவசியமாகும். மழை நீரைச் சேமித்து நீண்ட காலம் பயன்படுத்துவதன் மூலம் நன்மையைப் பெறலாம்.

மழை நீரைப் பல வழிகளிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அணைக்கட்டுகள்⸴ குளங்களைக் கட்டி அதனுள் சேமிக்கலாம். ஏற்கனவே கட்டப்பட்ட குளங்கள் அணைக்கட்டுக்களைப் பாதுகாத்து அதனுள் மழை நீரைச் சேமிக்கலாம். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் மொட்டை மாடியில் மழை நீரைச் சேமிக்கலாம்.

மழை நீர்ப் பாதுகாப்பு

40 சதவீதமான மழைநீரானது ஆண்டு தோறும் கடலுடன் கலக்கின்றது. எனவே இதனை பாதுகாப்பது அவசியமாகும். இன்றைய நவீன யுகத்தில் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு நிலப்பரப்பு குறைவடைந்துள்ளது.

நிலம் மண் தரையாக இல்லாமல் சீமெந்துகளால் கட்டப்படுவதாகவே அதிகம் காணப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் குறைவடைகின்றது. இதற்கு மாற்று வழியாக நீரை உறிஞ்சக்கூடிய வகையில் குழாய்களை அமைக்கலாம். மரங்களை வளர்த்து மழை நீரை அதிகரிக்கச் செய்யலாம்.

முடிவுரை

இன்று நாடுகள் பல எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய மழை நீர்ச் சேமிப்பு மற்றும்⸴ மழை நீர்ப் பாதுகாப்பு அவசியமாகும்.

இன்று நாம் நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு சென்று விட்டோம். ஆனால் இயற்கை நமக்களித்த இலவச கொடுப்பனவு மழை நீர் ஆகும். இதன் அவசியத்தை உணர்ந்து அனைவரும் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

You May Also Like:

மழை பற்றிய கவிதைகள்

மழைநீர் சேகரிப்பு கட்டுரை