தாய் அன்பு கவிதை | Amma Kavithai

தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் இல்லை. இந்த பதிவில் தாய் அன்பு கவிதை | Amma Kavithai தொகுப்பை பார்க்கலாம்.

உலகில் உள்ள உறவுகளில் ஒரு புனிதமான உறவு அம்மா. அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

இந்த பதில் உள்ள தாய் அன்பு கவிதை | Amma Kavithai உங்களிற்கு உண்மையான அன்பின் மகத்துவத்தை உணர்த்தும்.

தாய் அன்பு கவிதை |Amma Kavithai

நீ வலி பொறுத்து என்னை
நீ இந்த உலகிற்கு கொண்டு
வந்தாய் அதனால் தான்
எனக்கு வலிக்கும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
அம்மா என்று.

வாழ்வு முழுவதும் எனக்கு
அன்பு கொடுக்கும் ஒருத்தி,
தன் வாழக்கையை எனக்காக
அர்ப்பணித்த ஒருத்தி,
துன்பத்திலும் சரி இன்பத்திலும்
சரி என்னுடனே இருக்கும் ஒருத்தி,
அப்போது விழுந்து நடந்தாலும்
சரி இப்போது நிமிர்ந்து நடந்தாலும்
சரி என்னை தாங்கும் ஒருத்தி,
மெழுகுவர்த்தி போல தன்னை
உருக்கி எனக்கு ஒளி கொடுக்கும்
ஒருத்தி, உடல் உயிர் கொடுத்து
இந்த உலகிற்கு என்னை படைத்த
ஒருத்தி, நான் விழுந்து விட்ட
நிலைகளில் நீ விழுந்து என்னை
தூக்கி விட்டாய், விலைமதிப்புள்ள
அனைத்தையும் எனக்கு
கொடுத்தாய் அதனால் தான்
கடவுள் விலைமதிக்க முடியாத
பொக்கிஷமாக உன்னை எனக்கு
தாயாக கொடுத்துள்ளான்.

நான் இந்த உலகிற்கு வரும்
முன்னரே நான் கேட்டு ரசித்த
அழகான இசை அம்மாவின்
இதய துடிப்பு மட்டுமே.

நீ என்னில் கோபம் கொண்டு
திட்டும் வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் கவிதை “தாய்”.

வலி கொடுத்து பிறந்தாலும்
பிள்ளைக்கு ஒரு வலி என்றால்
துடிக்கிறது தாயின்
தூய்மையான இதயம்.

தாய் என்ற ஒரு சக்திக்கு
முன்னால் உலகில் வேறு
எந்த சக்திகளாலும்
எதிர்த்து நிற்க முடியாது.

தெய்வத்தை காண நீண்ட
நேரம் கோவிலில் வரிசையில்
நிற்க தேவை இல்லை தாய்
நிற்கும் இடத்தில் தாய்
முன்னால் நின்றால் போதும்.

என்னிடம் சிலர் காற்றின்
காற்றின் மடியில்
இளைப்பாறினால் சுகமாக
இருக்கும் என்கிறார்கள்.
நான் மனதிற்குள் மௌனமாக
சொல்லிக் கொண்டேன்.
தாயின் மடி தெரியாதவர்கள்
என்று.

எந்த பெரிய வலியை கூட
தாங்கிக் கொள்ளும் தாயால்
பிள்ளைகளுக்கு ஏற்படும் சிறு
வலிகளைக் கூட தாங்கிக்
கொள்ள முடிவதில்லை.

இந்த உலகில் அளவிட
முடியாத ஒன்று உள்ளது
என்றால் அது தாயின்
பாசம் மட்டும் தான்.

ஆயிரம் உறவுகள் உன்னை
சூழ்ந்து நின்றாலும் உனக்கு
ஒரு துன்பம் வரும் போது
வாழ் நாள் முழுவதும்
உன்னை தாங்கிப் பிடிக்கும்
ஒரு உறவு உன்
தாய் மட்டும் தான்.

உண்மையான அன்பு தமிழ் கவிதைகள் இங்கே படியுங்கள்.