நம்மாழ்வார் பொன்மொழிகள்

Nammalvar Quotes In Tamil

இயற்கையை நேசித்த இயற்கையை பாதுகாக்க போராடிய இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் பொன்மொழிகள்.

பசுமை புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்பி வந்தார்.

  • நம்மாழ்வார் பொன்மொழிகள்
  • Nammalvar Quotes In Tamil

நம்மாழ்வார் பொன்மொழிகள்

விவசாயம் என்பது
வியாபாரம் அல்ல
வாழ்க்கை முறை.!

உண்ணா நோன்பு
இருக்கும் போது
நம் உடலுக்குள் இருக்கும்
தேவையில்லாத கழிவுகள்
தன்னாலே வெளியேறி
விடுகின்றன.

நம்முடைய தேவைக்காக
எப்பொழுது சமரசம் ஆகிறமோ
அப்பொழுதுதான் தீயவற்றின்
பாதையில் நாம் கால் வைக்க
தொடங்குகிறோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
என மனிதனை மட்டும்
உயிராகப் பார்க்காமல்
எல்லாவற்றையும் நம்மோடு
அரவணைத்துக் கொள்வதே
ஆன்மீக பார்வை.

ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது
மனிதர்களின் நலனை மட்டும்
பார்த்தால் போதாது.
அது மிகவும்
குறுக்கலான பார்வை.

ஒவ்வொரு உயிரும் பிறவற்றை
சார்ந்தே வாழ்கின்றது என்பதை
ஆன்மீக ரீதியாகவே உணர முடியும்.
வெறும் அறிவியல் ரீதியாக மட்டுமே
பார்த்தால் அது அழிவினை நோக்கியே
இட்டுச் செல்லும்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி,
களைக்கொல்லி, நஞ்சுக்களை
பயன்படுத்தாத விவசாயம் தான்
இயற்கை விவசாயம்.

இயற்கை விவசாயத்தை
சிறப்பாக செய்ய,
கால்நடை வளர்ப்பு அவசியம்.
மர வளர்ப்பும் முக்கியமானது.

பாரம்பரிய முறைகளே
என்றும் நிலையானது.

விரதமே மகத்தான
மருத்துவம்.

இயற்கை ஒருபோதும் தவறு
செய்வதில்லை.
உடல் ஒருபோதும்
தன் கடமையை
நிறுத்துவதில்லை.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
வீரனை கோழையாக்குவதும்
இல்லை. கோழையை வீரன்
ஆக்குவதும் இல்லை.
அவனை யார் என்று
அவனுக்கு காட்டும்.

பூச்சி தாக்காத பாரம்பரிய
ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
மண்ணை வளப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு பல்வேறு
பிரச்சனைகளுக்கும்
அடிப்படையாக இருக்கிறது.
பருவநிலை மாற்றம்தான்
அதை சரி செய்ய வேண்டுமானால்
கண்டிப்பாக காடுகளை
வளர்க்க வேண்டும்.

நஞ்சில்லாத உணவு
உற்பத்தி செய்ய வேண்டும் என்ற
உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள்
இயற்கை விவசாயத்திற்கு
மாறிவிடுவார்கள்.

50 வயது வரை உடம்பு தான்
உன்னதம் என நினைக்கும் மனது,
அதற்குப் பிறகு ஆன்மாவை
ஆராதிக்கிறது.

இயற்கை விவசாயம் என்பதன்
அடிப்படை இயற்கையுடன்
இணைந்த உணவு உற்பத்தி.

மனிதர்களை சுற்றியுள்ள மரங்கள்,
செடிகள், கொடிகள், கால்நடைகள்
மற்றும் பறவைகள் என அனைத்தும்
ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல்
இந்த உலகில் இருக்க வேண்டும்.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

பகத்சிங் பொன்மொழிகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்