இந்த தொகுப்பு “கண்ணதாசன் தத்துவம் தத்துவங்கள் (Kannadasan Thathuvangal in Tamil)” உள்ளடக்கியுள்ளது.
- கண்ணதாசன் தத்துவம் தத்துவங்கள்
- கண்ணதாசன் தத்துவங்கள்
- கவிஞர் கண்ணதாசன் தத்துவம்
- Kannadasan Thathuvangal in Tamil
கண்ணதாசன் தத்துவங்கள்
நிலத்தில் வரும் களைகள்..
பெரிய மரங்கள் ஆவது
இல்லை.. அற்ப ஆசைகள்
பெரிய வெற்றியை
தேடித்தருவதில்லை…!
எதையாவது மிகவும்
ஆசைப்படும் போது..
அதை இப்போது
வைத்திருக்கிறவர்
சந்தோசமாக தான் இருக்கிறாரா..?
என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்..!
நான் சாகும் போதும்
தமிழ் படித்து சாக வேண்டும்..
என் சாம்பலும் தமிழ்
மணந்து வேக வேண்டும்..!
யாருக்காகவும் உன்னை
மாற்றிக் கொள்ளாதே..
ஒரு வேளை மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்..!
நல்லவன் படகில் போகும் போது
துடுப்பு தண்ணீருக்குள்
மூழ்கிவிட்டாள் நதியே திசை மாறி
அவன் சேர வேண்டிய இடத்தில்
கொண்டு போய்ச் சேர்த்துவிடும்..!
நாம் விரும்பி பிறக்காதது போல
நடக்கும் காரியங்களும் நாம்
விரும்பி நடப்பவை அல்ல..!
இன்னது தான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன் வழக்கு..!
நிரந்தரமானது துன்பம்..
வந்து போவது இன்பம்..
இதுதான் வாழ்க்கை என்பதை
தெளிவாக புரிந்து கொள்ள
வேண்டும்..!
செய்த வினையும் செய்கின்ற
தீவினையும் ஓர் எதிரொலியைக்
காட்டாமல் மறையமாட்டாது..!
சொர்க்கம் என்று நரகத்திற்குள்
காலடி எடுத்து வைத்தேன்
பிறகு தான் தெரிந்தது அங்கே
பளபளப்பானவை எல்லாம்
பாம்புகள் என்று..!
ஒன்று நடந்தே தான் தீரும்
என்றால் அதில் கவலைப்பட
என்ன இருக்கிறது..!
ஆசை.. கோபம்.. களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்.. அன்பு..
நன்றி.. கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்..!
நாம் செய்யாத ஒன்றிற்காக நாம்
தண்டிக்கப்படுவம் ஆயின் அதன்
பெயரே ஊழ்வினை..!
அடக்கியாள்வதன் பெயரே
வைராக்கியம்.. நீ சுத்த
வைராக்கியனாக இரு..
ஆசை வளராது.. உன்னைக்
குற்றவாளியாக்காது.. உன்
நிம்மதியைக் கெடுக்காது..!
ஒருவனைப் பற்றி சரியாக
தெரிந்து கொள்ளாமல் அவனை
புகழ்ந்து பேசிவிட கூடாது..!
மகிழ்ச்சி கவிதைகளை விட
துயர கவிதைகளே பலரது
வாழ்க்கையோடு ஒத்திருக்கின்றன..!
இரவு என்கிற ஒன்றையும் உறக்கம்
என்ற ஒன்றையும் நீ படைக்காமல்
இருந்திருந்தால் மனிதன்
இருபது வயதுக்கு மேல்
வாழ மாட்டான்..!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
வாசல் தோறும் வேதனை இருக்கும்..
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை..!
இது போன்ற பதிவுகளை மேலும் படியுங்கள்..