இந்த தொகுப்பு “உலக அறிஞர்களின் பொன்மொழிகள் ( Ponmozhigal in Tamil )” உள்ளடக்கியுள்ளது.
- உலக அறிஞர்களின் பொன்மொழிகள்
- உலக அறிஞர்களின் தத்துவங்கள்
- Ponmozhigal in Tamil
உலக அறிஞர்களின் பொன்மொழிகள்
கண்ணாடியில் புன்னகை
செய்யுங்கள்.. ஒவ்வொரு
காலையும் இதை செய்யும் போது..
நீங்கள் உங்கள் வாழ்வில்
ஒரு பெரிய வித்தியாசத்தை
உணரத் தொடங்குவீர்கள்..!
வெற்றி எனும் உணவில்
சேர்க்கப்படும் மிகச் சிறந்த
சுவையூட்டி தோல்வி..!
விளையாட்டில் பங்கெடுத்துக்
கொள்ளாமல் வெற்றி பெறுவது
என்பது சாத்தியமே இல்லாத ஒன்று
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்..!
வாழ்க்கை என்பது உங்களை
நீங்களே தேடுவதில்லை..
உங்களை நீங்களே
உருவாக்குவது..!
வாழ்வில் பலர் தோற்கின்றனர்..
அதற்கு காரணம்..
மிகப் பெரிய இலக்குகளில்
தோல்வியடைவதல்ல..
மிகச் சிறிய இலக்குகளில்
வெற்றியடைவதே..!
வாழ்வில் தோல்விகள் என்ற
ஒன்று இல்லை.. முயற்சிக்கான
முடிவுகளே உள்ளன..!
வாழ்க்கையின் மகத்துவம்
தோற்காமலேயே இருப்பதில் இல்லை..
தோற்கும் ஒவ்வொரு முறையும்
திரும்ப எழுவதில் தான் உள்ளது.!
வாழ்க்கை என்பது வாய்ப்புகளால்
நிரம்பியது.. நாம் பயன்படுத்தும்
வாய்ப்பை பொறுத்தே
நம் வாழ்க்கை அமையும்..!
வாய்ப்பு வருவதற்கு முன்
நாம் அதற்கு தயாராக இருப்பதே
வெற்றிக்கான ரகசியம்..!
முன்னேறிச் செல்வதற்கான
ஒரே வழி.. முதல் அடியை
எடுத்து வைப்பதே..!
முழுக்க முழுக்க சக்கரையாக
இருந்து விடாதே.. உலகம்
உன்னை விழுங்கி விடும்..!
முயற்சியை கைவிடாதீர்கள்..
நீங்கள் அதிசயத்தை
நிகழ்த்தப் போகும் தருணம்
இதுவாக கூட இருக்கலாம்..!
வாழ்வில் தவறே செய்யாத
மனிதன்.. எதையுமே
முயற்சி செய்யாதவன்..!
முயற்சிகள் எப்போதும்
தோல்வி அடைவதில்லை..
முடிவுகள் மட்டுமே எதிர்பாராதது
ஆகிவிடுகின்றது..!
முடியாத விடயங்கள் குறித்து
கனவு காண்பவர்களால் மட்டுமே..
முடியாதவற்றை முடிக்க முடியும்..!
மிக உயர்ந்த லட்சியம்
மனிதர்களுக்கான எல்லை என்ற
சுவர்களை தகர்க்கிறது..!
மிகச் சரியாக ஒரு விடயத்தை
செய்யாமல் இருப்பதை விட..
குறைகளோடு அதை
செய்வது மேல்..!
பிரச்சனைகளுக்காக
போராடுவதை விட முடிவுகளை
நோக்கி கவனம் செலுத்துவதே
சிறந்தது..!
மிக அற்பமான விஷயங்களை பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே
நிபுணன் ஆகிறான்..!
மரம் சும்மா இருந்தாலும்..
காற்று அதை சும்மா
இருக்கவிடுவதில்லை..!
பெரியதாக கனவு காணுங்கள்
சிறியதாக தொடங்குங்கள்
ஆனால் இப்போதே
தொடங்குங்கள்..!
பின்னோக்கிப் பார்க்காதே..
எப்போதும் முன்னோக்கி
நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ..
அதையே பார்..
நீ முன்னேறுவது உறுதி..!
பிறரால் நீங்கள் காயப்படும் போது..
அவர்களை உப்புக் காகிதமாக
நினைத்துக்கொள்ளுங்கள்..
இறுதியில் அவை குப்பைகளாகும்..
நீங்கள் வாழ்வில் உயரத்தில்
இருப்பீர்கள்..!
நேற்றிலிருந்து கற்றுக்கொள்..
இன்றைக்காக வாழ்..
நாளை மீது நம்பிக்கை வை..
மிக முக்கியமாக கேள்விகளை
நிறுத்தாதே..!
பறக்க முடியாத போது ஓடுங்கள்..
ஓட முடியவில்லை என்றால்
நடவுங்கள்.. நடக்கமுடியவில்லை
என்றால் தவளுங்கள்.. எப்பிடியாவது
முன்னேறிக் கொண்டே இருங்கள்..!
இது போன்ற சிறந்த பதிவுகளை மேலும் படியுங்கள்…