இந்த பதிவில் தூய்மை இந்தியா கட்டுரை பதிவை காணலாம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் தூய்மையை பாதுகாத்து வளச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்.
இன்றைய உலகில் மாசடைதல் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. நாட்டின் தூய்மையை பேணவேண்டியது ஒவ்வொரு பிரஜைகளின் கடமையாகும்.
- தூய்மை இந்தியா
- Thooimai India Katturai In Tamil
போதைப்பொருள் பாவனை கட்டுரை
தூய்மை இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தூய்மை இல்லாமை
- தூய்மை திட்டத்தை செயல்படுத்துதல்
- நாம் செய்யவேண்டிய கடமைகள்
- முடிவுரை
முன்னுரை
எத்தனையோ மதங்கள், எத்தனையோ இனங்கள் கொண்ட நம் இந்திய நாடு ஒற்றுமை கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
இம்முன்னேற்றமானது நிலையாகவும் தூய்மையாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தான் பல ஜந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது அவற்றில் ஒன்றுதான் தூய்மை இந்தியா திட்டமாகும்.
இந்தியா வல்லரசு நாடாக மாறவேண்டும் என்பதற்காகவே இவ்வகையான திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. ஒரு நாடு அபிவிருத்தியை நோக்காக கொண்டு பயணிக்கின்ற போதும் அந்நாடு மாசுக்கள் இன்றி தூய்மையாக இருந்தால் தான் வளமான எதிர்காலத்தை அடைந்து கொள்ள முடியும்.
இக்கட்டுரையில் தூய்மை இல்லாமை, தூய்மை திட்டத்தை செயல்படுத்தல், நாம் செய்ய வேண்டிய கடமைகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
தூய்மை இல்லாமை
தூய்மை இல்லாமையால் மனிதர்களுக்கு பல்வேறான பிரச்சனைகளும் சூழல்சார் அசௌகரியங்களும் காணப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதனால் மாசடைவும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் பல பெரும் நகரங்கள் உலகளவில் மிகவும் அதிகம் மாசடைந்த பகுதிகளாக உள்ளன. இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி அதிகம் வளிமாசடைந்துள்ள நகரமாகும்.
இந்நகரத்தில் ஏற்பட்டுள்ள அளவுக்கதிகமான கழிவுகள், வாகன புகை இவற்றால் இந்நகரம் மாசடைந்தமையால் இங்கு மனிதர்கள் சுவாசிக்க கூட சிரமப்படுகின்றனர்.
மற்றும் இந்தியாவில் அதிக நதிகள் மாசடைந்து காணப்படுகின்றன. அவற்றுள் மிக மோசமாக மாசடைந்துள்ள நதி யமுனை ஆறாகும். இவ் ஆறுகளில் குப்பை கழிவுகள், அசேதன கழிவுகள், பார உலோகங்கள், இரசாயன கழிவுகள் அதிகமாக உள்ளது.
இந்தியா முழுவதும் சட்டவிரோதமான குப்பை போடுதல் செயற்பாடு உயர்வாக காணப்படுகிறது. திட்டமிடப்படாத நகர உருவாக்கமும் கழிவு முகாமைத்துவம் இன்மையும் இதற்கான காரணங்களாகும்.
இந்தியாவில் அதிகம் மக்கி போகாத பிளாஸ்ரிக் பாவனை அதிகமாக இருப்பதனால் இந்தியா மோசமாக மாசடைந்து போயுள்ளது.
இந்தியாவின் நகரங்களை அண்டி பாரிய சேரிகளின் உருவாக்கம் இந்நாட்டை மேலும் மேலும் மாசடைய செய்கிறது.
தூய்மை திட்டத்தை செயல்படுத்துதல்
நாட்டில் காணப்படுகின்ற ஒவ்வொரு மாசடைவுக்கும் காரணம் மனிதர்களுடைய தவறான நடவடிக்கைகள் தான் ஒவ்வொருவரும் தமது வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எண்ணினால் நாடு தானாக சுத்தமாகிவிடும்.
இந்தியாவை சுத்தமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டங்களாக அரசாங்கம் பல இயற்கை நேயமான திட்டங்களை உருவாக்குகிறது 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட “Swachh Barath Mission” உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தான் “Clean and Green India” எனும் பாரிய திட்டமானது இந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதற்குள் புனித கங்கை நதியை சுத்தமாக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
இந்தியாவை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் மக்காத குப்பபைகளை தடைசெய்தல், சரியான கழிவு முகாமைத்துவத்தினை செய்தல், காடுகள் இயற்கை வளங்கள் அழிவடைவதை தடுத்தல்,
மரங்களை நாட்டுவதன் மூலமாக பசுமை இந்தியா என்ற இலக்கை அடைந்து கொள்ள வருங்கால இளம் இந்தியர்களிடம் தூய்மை இந்தியா கனவை விதைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தூய்மை இந்தியா கனவை அடைந்து கொள்ள முடியும்..
நாம் செய்ய வேண்டிய கடமைகள்
தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் திருந்தி கொள்வது தான் ஒரு சமுதாயத்தின் ஆக சிறந்த மாற்றமாகும்.
“சமுதாயத்தை மாற்றம் நினைக்கும் நீ முதலில் மாற வேண்டும் மாற்றம் என்பது உன்னில் இருந்து துவங்கட்டும்” என்கிறார் மகாத்மாகாந்தி அதாவது ஒவ்வொரு இந்தியர்களும் இந்தியா சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணினால் மாற்றம் தானாக உண்டாகும்.
பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவற்றின் பாவனையை நிறுத்தி உக்க கூடிய சேதன மூலபொருட்களால் உருவான பொருட்களுக்கு நாம் மாறவேண்டும்.
இயற்கை முறை விவசாயம், இரசாயனங்கள் அற்ற உணவு பழக்க வழக்கங்கள், தமது கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றுதல், குப்பை கூடைகளை பாவித்தல், பொது இடங்களில் இயற்கை பிரதேசங்களில் குப்பை போடுவதை நிறுத்த வேண்டும்.
சூழலுக்கு முரணான வெளியீடுகளை வெளியீடு செய்யும் வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். வருமானத்துக்காக சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகளை மனிதர்கள் நாம் செய்ய கூடாது.
இது போன்ற சுய சிந்தனைகள் நாம் நமது நாட்டுக்கும் சூழலுக்கும் செய்யும் பெரும் நன்றிக்கடனாக இருக்கும்.
முடிவுரை
உலக நாடுகளின் வரிசையில் எல்லா துறைகளிலும் தடம் பதிக்கும் இந்தியர்கள் தமது தாய் தேசத்தின் இயற்கையை நேசிக்க மறந்து விட்டார்கள்.
தவறான ஆட்களின் கையில் ஆட்சியை கொடுக்கும் முட்டாள் தனத்தால் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு இந்தியாவின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
அளவு கடந்த எமது பாரத தேசம் புண்ணிய நதிகளையும் பெரும் மலைகளையும் இயற்கை வளங்களையும் கொண்ட பெருமை மிக்க தேசம் இன்று மாசடைந்து பின் செல்வது வேதனைக்குரியது.
நாம் எல்லோரும் ஒன்றுபட்டால் எம் நாட்டை சுத்தமாக்கி நம் தேசத்தையும் வளப்படுத்தலாம்.
You May Also Like: