ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை

jallikattu katturai in tamil

இந்த பதிவில் “ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை

ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெயர்க்காரணம்
  • வரலாறு
  • ஜல்லிக்கட்டின் வகைகள்
  • தற்கால நிலை
  • முடிவுரை

முன்னுரை

ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடிவரும் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதான விளையாட்டாகும்.

தமிழரின் வீரத்தினை பரைசாற்றும் விளையாட்டாக இது காணப்படுகின்றது. மேலும் தமிழ் நாட்டில் இவ்விளையாட்டு தடைப்பட்ட போது இதனை மீட்டெடுக்க தமிழர்கள் செய்த போராட்டம் உலகினையே திரும்பி பார்க்க வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெயர்க்காரணம்

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினை குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

அத்தோடு 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக்காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.

மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பின் பேச்சுவழக்கில் திரிபடைந்து ஜல்லிக்கட்டு என மாறியது.

வரலாறு

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவுதல் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயர் என கூறப்பட்டுள்ளது.

கொல்லக்கூடிய காளையை தழுவிப் போரிட்டு அடக்குவதால் “கொல்லேறு தழுவுதல்” எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரீகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை அதை அடக்க முயலும் வீரரை தூக்கி எறிவது உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கி.மு 2000 ஆண்டளவில் இருந்தே ஏறுதழுவுதல் வழக்கத்தில் இருந்தமைக்கு சான்றாகின்றது.

ஜல்லிக்கட்டின் வகைகள்

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகின்றது.

வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு என பலவகையில் இது விளையாடப்படுகின்றது.

இவை விளையாடப்படுகின்ற மைதானங்கள், விதிமுறைகள், மாடு அவிழ்த்துவிடப்படும் முறைகள் என்பன ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். அதே போல் பிரதேச அடிப்படையிலும் இவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்கால நிலை

தற்காலத்தில் ஏறுதழுவுதல் விலங்குகளை துன்புறுத்துவதாகவும் தேவையற்ற உயிரிழப்பு காயங்கள் ஏற்படுத்துவதாகவும் இதனை தடை செய்யக்கோரி இந்திய நீதிமன்றங்களில் விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், நீலச்சிலுவை சங்கம் ஆகியவை வழக்குகள் தொடர்கின்றன.

சல்லிக்கட்டை ஆதரிப்போர் சல்லிக்கட்டு காளையை உழவுக்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கன்றிலிருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டு கோவில்மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் கூறுவதோடு இது தமிழர்களின் பண்பாடு எனவும் அதை அழியவிடக்கூடாது எனவும் கூறுகின்றனர்.

முடிவுரை

மிருகவதை என்ற விடயத்தை முன்னிறுத்தி எமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடைசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இதே உலகில் இன்று வரையில் மலை போன்ற பாரங்களை சுமக்க ஒட்டகங்கள் பயன்படுகின்றன.

அங்குசங்களால் தினந்தோறும் குத்தப்படும் யானைகளும் உள்ளன. இவை எல்லாம் தாண்டி இந்தியாவின் தென்கோடியிலுள்ள இந்த வீர வியைளாட்டு மாத்திரம் சிலருக்கு மிருகவதையாக தெரிவது சற்று யோசிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

You May Also Like :
சாலை பாதுகாப்பு கட்டுரை
விருந்தோம்பல் பற்றிய கட்டுரை