இந்த தொகுப்பு “சாதனை கவிதைகள் வரிகள் (Sathanai Kavithaigal in Tamil)” உள்ளடக்கியுள்ளது.
- சாதனை கவிதைகள் வரிகள்
- சாதனை கவிதை வரிகள்
- Sathanai Kavithaigal in Tamil
- Sathanai Kavithai in Tamil
சாதனை கவிதைகள் வரிகள் (Sathanai Kavithaigal in Tamil)
மரத்தில் ஏற முடியாத மனிதன்
ஒரு போதும் மரத்திலிருந்து
விழுந்ததில்லை என்று
பெருமை பேசி
கொண்டிருப்பான்..!
எல்லா பறவைகளும்
மழையின் போது ஒரு
உறைவிடத்தை தேடி ஒளிகிறது..
ஆனால் பருந்து மட்டும் தான்
மேகத்துக்கு மேலே பறக்கிறது..
பிரச்சனைகள் பொதுவானது தான்..
ஆனால் சிந்தனையும் செயலும்
உன்னை வித்தியாசப்படுத்திக்
காட்டுகிறது…!
தவறு என்பது..
எது ஒன்றில் இருந்து
நாம் எதையும்
கற்றுக் கொள்ளவில்லையோ
அதுவே..!
தலைவருக்காக
காத்திருக்காதீர்கள்..
கண்ணாடியைப் பாருங்கள்
அது நீங்கள் தான்..!
தயாராவதற்கு தோல்வியடையும் போது..
தோல்வியடைய
தயாராகிவிடுகிறாய்..!
செய்ததையே திரும்ப திரும்ப
செய்து கொண்டு வாழ்வில்
மாற்றங்களை எதிர்பார்ப்பது
மடத்தனம்..!
சோம்பேறி ஒரு செயலை
முயற்சிக்கும் முன்பே..
சாதனையாளர்கள்
பலமுறை தோல்வி
அடைந்து விடுகிறார்கள்..
தோல்வியே வெற்றிக்கு
முதல் படி..!
சிறப்பான நாளை
வேண்டுமானால்..
நேற்றை விட இன்னும்
அதிகமாக உழையுங்கள்..!
சுறு சுறுப்புடன் எல்லாவற்றையும்
செய்பவர்களுக்கு எல்லாக்
கதவுகளும் திறந்திருக்கும்..!
சரியான தருணத்திற்காக
காத்திருக்காதீர்கள்..
கிடைக்கின்ற தருணத்தை
சரியாக பயன்படுத்த
கற்றுக் கொள்ளுங்கள்..!
சில விடயங்கள் உங்களுக்கு
முக்கியம் எனில்.. சூழ்நிலை
உங்களுக்கு சாதகமாக
இல்லை என்றாலும் அதை
நீங்கள் செய்ய வேண்டும்..!
சிகரங்கள் தன்னம்பிக்கை தரும்..
ஆனால் பள்ளத்தாக்குகள் தான்
உங்களைப் பக்குவப்படுத்தும்..!
சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..
அப்போது தான் வெற்றியின்
உண்மையான மகத்துவத்தை
உணர முடியும்..!
சலிப்பிற்கு ஆர்வமே மருந்து..
ஆர்வத்திற்கு மருந்துகள்
கிடையாது..!
சரியான நபர்கள்
ஒன்று சேரும் போது..
பிரச்சனைகள் வாய்ப்புகளாக
மாறுகிறது..!
கோழைக்கு மாற்றம் ஒரு பயம்..
செல்வந்தனுக்கு மாற்றம்
ஒரு அச்சுறுத்தல்..
நம்பிக்கையாளனுக்கு
மாற்றம் ஒரு வாய்ப்பு..!
குறிப்பிட்ட நேரத்திற்காகவோ
அல்லது மனிதருக்காகவோ
காத்திருந்தால்.. மாற்றம் வராது..
நாம் நமக்காக தான்
காத்திருக்கிறோம்..
நாம் தான் அந்த மாற்றம்..!
கற்பனை கல்வியை விட
முக்கியமானது..!
காயமில்லாமல் கனவுகள்
காணலாம்.. ஆனால்
வலி இல்லாமல் வெற்றிகள்
காண முடியாது..!
காத்திருப்பவர்களுக்கு
நல்லவை கிடைக்கின்றன..
ஆனால் வெளியில் வந்து
முயற்சி செய்பவர்களுக்கே
மிகச் சிறந்தவை கிடைக்கின்றன..!
கரைகளை கடக்கும்
துணிவிருந்தால் தான்
புதிய கடல்களை
கண்டுபிடிக்க முடியும்..!
கரையில் நின்று வேடிக்கை
மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்
ஒருவனால்.. கடலை
கடக்கவே முடியாது..!
கல்வி என்பது தகவல்களை
சேகரிப்பது அல்ல..
அது சிந்திப்பதற்காக
மூளையை பயிற்றுவிப்பது..!
கடினமான பாதைகளே மிக அழகான
இடங்களுக்கு செல்கின்றன..!
கண்டுபிடிப்பாளர்கள்
சாதாரண மனிதர்களே.. ஆனால்
அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை
பற்றி அதிகம்
கவலைப்படாதவர்கள்..!
கடின உழைப்பு வெற்றியை
தராவிட்டாலும் வெற்றிக்கான
வாய்ப்பை நிச்சயம்
அதிகப்படுத்தும்..!
இது போன்று மேலும் படியுங்கள்..