இந்த தொகுப்பு “காலம் கவிதைகள் வரிகள் | Time Quotes In Tamil” பற்றியது.
- காலம் கவிதைகள் வரிகள் | Time Quotes In Tamil
- காலம் கவிதை வரிகள்
- Time Quotes In Tamil
- எல்லாம் சில காலம் தான் கவிதை
- எல்லாம் சில காலம் கவிதை
- kaalam kavithai
நிஜமாய் காலம் மறக்க செய்த நினைவினை புரட்டிப் போடும் சொற்களும் கவிதை யாகின்றன.
காலம் கவிதைகள் வரிகள் | Time Quotes In Tamil
நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்வதெல்லாம்
நிரந்தரமின்றி போக
மாற்றங்கள் மட்டுமே
நிரந்தரமாக்கிப் போகும்
காலத்தின் சுழற்சியால்..!
காலம் என்பது கண்ணீரை
மட்டுமல்ல காயங்களையும்
மாற்றும் கேள்விகளை
மட்டுமல்ல பதில்களையும்
மாற்றும்..!
கடந்து வந்த பாதைகள்
கடத்தி போக
மறுப்பதில்லை..
காலம் கடந்த நினைவுகளை
பரிசளிக்க தவறுவதில்லை..!
சண்டை போட்டு
பேசாமல் இருக்கும் காலம்
போய் பேசினால் சண்டை
வரும் என்று பயந்து பேசாமல்
இருக்கும் காலத்தில்
வாழ்கிறோம்..!
இதெல்லாம் ஒரு நாள்
கடந்து போகும் என்று
காத்திருந்தேன் ஆனால்..!!
எதுவுமே கடந்து போகாது
எல்லாம் பழகிப்போகும்
என்று உணர்த்தி விட்டது
காலம்..!
நீ எவ்வளவு நன்மைகள்
செய்து இருந்தாலும் அதை
ஒரு நொடியில் மறந்து
விடும் இவ்வுலகம்..
நீ தெரியாமல் செய்த
ஒரு தவறை காலம்
முழுவதும் சொல்லிக்
கொண்டே இருக்கும்.
கடந்து வந்த பின்பே
கண்டு உணர்கிறேன்..
என்னை கலங்கடித்த
காலமெல்லாம் கடுமையான
காலம் அல்ல.. என் வாழ்வை
வடிவமைத்த காலம்
என்று..!
கடைசி காலத்திற்கு
தேவை என்று ஓடி ஓடி
உழைக்கின்றோம் எது
கடைசி காலம் என்று
தெரியாமலே..!
காலம் கற்றுக் கொடுக்கும்
பாடம் போல எந்த ஒரு
ஆசானாலும் கற்றுக்
கொடுக்க முடியாது..!
காலம் கடந்து செல்கின்றேன்
யாவும் மாறும் என்ற
நம்பிக்கையில்..!
ஓடி வந்து மூச்சு வாங்கும்
போது தான் தெரியும்
தண்ணீரின் அருமை..
அது போல தான் கடந்து
வந்த பிறகு தான்
தெரியும் காலத்தின்
அருமை..!
வாழ்த்தினாலும்
தாழ்த்தினாலும்
சிரித்துக் கொண்டே
இரு காலம் அவர்களுக்கு
பதில் சொல்லும்..!
கசப்பான நினைவுகள்
காலம் முழுவதும்
கசப்பதில்லை..
நிகழ்வுகள் மாறும் போது
நினைவுகளும் இனிக்கும்..!
தானாக உயரும் வயது..
விடாமல் துரத்தும் காலம்..
தடுக்க முடியாத நேரம்..
கடக்கத் துடிக்கும் இளமை..
காலைத் தடுக்கும் சமூகம்..
தொட வேண்டிய இலக்கு..
இத்தனை போராட்டங்கள்
தான் வாழ்க்கை..!
காலம் கடந்தது நினைவுகள்
வலித்தது ஆயினும் அசட்டு
நம்பிக்கையில் காத்திருந்தேன்
அதே காலத்துடன்..!
பாசம் வையுங்கள் தவறில்லை
ஆனால் பைத்தியம் ஆகி
விடாதீர்கள் ஏனெனில்
இங்கு முடிவே இல்லாத
வாழ்வும் இல்லை.. பிரிவே
இல்லாத உறவும் இல்லை..
எல்லாம் சில காலம் தான்..!
பொறுத்தார் பூமி ஆழ்வார்
என்பது அந்த காலம்
பொங்கி எழுந்தால் தான்
இருப்பதையாவது
காப்பாற்றிக் கொள்ள
முடியும் என்பது இந்த
காலம்.. இது தான்
இன்றைய வாழ்க்கை..!
தொலைந்து போன
காலத்தை தேடித் தேடியே
இருந்த காலமும்
தொலைந்து போனது..!
மேலும்