இந்த பதிவில் “கப்பலோட்டிய தமிழன் கட்டுரை” பதிவை காணலாம்.
மக்களின் நலனுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர் இன்றளவும் மக்களால் பெருமையோடு பார்க்கப்படுகிறார்.
கப்பலோட்டிய தமிழன் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தேசத்தை காத்த தியாகம்
- மகத்தான மனிதன்
- சிறைவாசம்
- நன்றி கெட்ட மனிதர்கள்
- சாதித்தவை
- முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திர போராட்டத்தில் தலைசிறந்த பெயராக அறியப்படுபவர் கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையோடு அழைக்கப்படும். வ. உ சிதம்பரனார் ஆவார்.
இவரது வரலாறு தமிழ் மண்ணுக்கே பெருமை சேர்ப்பதாவும் தமிழனின் திறமைகளையும் வீரத்தையும் உலகத்துக்கே பறைசாற்றுவதாகவும் அமைகிறது.
தம்முடைய நலனுக்காக பிறரை வஞ்சிக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இந்த உலகத்திலே தனது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தனது வாழ்வனைத்தையும் அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற மனிதர் தான் இவர். இக்கட்டுரையில் அவரை பற்றி நோக்கலாம்.
தேசத்தை காத்த தியாகம்
ஒட்டப்பிடாரத்திலே 1872 செப்டம்பர் 5 இல் வ.உ.சி பிறந்தார். தன்னுடைய இயற்பெயரோடு தேசத்தின் தேசிய கீதத்தை இணைத்து “வந்தே மாதரம் சிதம்பரம் பிள்ளை” என்று தனது பெயரை மாற்றி கொண்டது இவரது தேசபக்தியை காட்டுகிறது.
வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய நலனை கருதாது ஏழை மக்களுக்காக இலவசமாக வாதாடினார். இவருக்கு இருந்த செல்வ செழிப்புக்கு இவர் உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவரோ மக்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக போராடி சிறை சென்றவர். இதனால் அடுத்தவேளை சோற்றுக்காக திண்டாடி வறுமையை அனுபவித்தவர். இவை அனைத்தும் அவரது தியாகத்தை காட்டுகின்றன.
மகத்ததான மனிதன்
இந்திய தேசம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து விடுபடவேண்டும். தமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தனது வாழ்வையே இவர் அர்ப்பணித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு சவால் விடும் விதமாக ஐரோப்பாவிற்கு சென்று அங்கிருந்து இரண்டு பெரிய கப்பல்களை தனது சொத்து அனைத்தையும் விற்று இவர் வாங்கினார். இதனால் தான் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என அழைக்கப்படலானார்.
இவரது செயல் கண்டு உலகமே பிரமித்தது. அடிமைப்பட்டு கிடந்த மக்களின் மனதில் இவர் கிளர்ச்சியை ஊட்டினார். வெள்ளையர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கினார். இன்றுவரை இவரை ஒரு கதாநாயகனாக பார்க்க இதுவே காரணமாகவுள்ளது.
சிறைவாசம்
எத்தனையோ மனிதர்களை சட்டரீதியாக வாதாடி தண்டனையில் இருந்து காப்பாற்றியர். பக்கசார்பாக நடந்துகொண்ட நீதிபதியையே பதவியில் இருந்து வீட்டுக்கு அனுப்பியவர்.
ஆனால் இந்த நேர்மையான மனிதன் ஆங்கில அரசின் அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுத்தபோது அவரை தேச துரோகியாக சுட்டிக்காட்டி அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரை சிறையில் கொடுமையும் படுத்தினார்கள். மாடு இழுக்கும் செக்கினை வ.உ.சி இழுக்க வைத்தனர். இவ்வாறு பல வலிகளை நாட்டு மக்களுக்காக இவர் தாங்கினார்.
நன்றி கெட்ட மனிதர்கள்
எவ்வளவோ தியாகங்களை இந்த மக்களுக்காக இவர் செய்தார். சிறை சென்றதனால் தனது வழக்கறிஞர் வேலையினையும் இழந்தார் எல்லாவற்றையும் இழந்து இவர் சிறையில் இருந்து வெளியே வரும் போது இவரை வரவேற்க இவரது குடும்பமும் ஒரு சில மனிதர்களும் தான் வந்தனர் என்பது வரலாறு.
எவ்வளவு பெரிய தியாகங்களை செய்த மனிதர்களை இந்த நன்றி கெட்ட சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பது மிக பெரிய ஆறாத வலியாகும்
சாதித்தவை
இந்தியாவில் தமது ஆட்சியை நீடிக்க ஆங்கிலேயர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கின்ற வங்கப்பிரிவினையை தூண்டினார்கள் இதனை எதிர்த்து இவரும் போராடினார்.
திலகர் என்ற புரட்சியாளரினை தனது குருவாக ஏற்று கொண்டு இவர் அரசியலில் பல சாதனைகளை செய்தார். இந்திய தேசியவாத கட்சியினுடைய தென்னிந்திய பகுதியின் செயலாளரான முதல் தமிழராக வ.உ.சி பதவி வகித்தவர்.
வெள்ளைய ஏகாதியபத்தியத்திடம் போய் சேரும் இலாபத்தை இந்திய தேசத்துக்கு கிடைக்கவேண்டுமென இவர் போராடினார்.
உலகில் முதன் முதலில் கப்பல் நிறுவனத்தையே நடாத்திய முதல் தமிழன் என்ற பெருமையை இவர் பெறுகிறார். இவ்வாறு பல சவால்களை சந்தித்து பல விடயங்களை இவர் சாதித்து காட்டியிருக்கின்றார்.
முடிவுரை
மக்களின் நலனுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர் இன்றளவும் பல மக்களால் பெருமையோடு பார்க்கப்படுபவர். மறக்கப்பட முடியாத இவர்களது தியாகம் தான் இந்த நாட்டுக்கு விடுதலையாக கிடைத்தது.
இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் இருக்கிறது. தேசப்பற்றும் சுயநலமில்லாத அன்பும் செய்யும் தொழிலில் நேர்மையும் அடக்குமுறைக்கெதிராய் எழுந்து போராடும் இயல்பு என நிறைய இருக்கிறது.
இவரது கொள்கைகளை மதித்து நல்ல மனிதர்களாய் வாழ்வது தான் நாம் இவருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும்.
You May Also Like: