எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

Valkai Thathuvam Quotes In Tamil

இந்த பதிவில் எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் பதிவை காணலாம்.

நேர்மறையான வாழ்க்கை தத்துவங்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஒவ்வொரு நாளையும் வெற்றிக்கான நாளாக மாற்றக்கூடியவை.

வாழ்க்கையில் அதிக துன்பத்தால் துண்டு இருக்கும் போது இந்த வரிகள் மனதிற்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து ஊக்கப்படுத்தும்.

  • வாழ்க்கை தத்துவம்
  • Valkai Thathuvam Quotes In Tamil
நற்சிந்தனை துளிகள்

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும்.
காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்.
வாழ்க்கை என்னும் பரீட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வியடைந்து விடாதே.. உன் மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைந்து விடு.!
ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.. அந்தத் துன்பத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே.!
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.!
வெற்றியும் தோல்வியும் இரு படிகளே.. ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்.
அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல.. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.
துன்பம் பல கொடுத்து அதை மறக்க.. இன்பம் சில கொடுத்து எதுவுமே இலகு இல்லை என்பதை நொடிக்கொரு முறை கூறிச் செல்கிறது வாழ்க்கை.
தனக்காக வாழ்வது இன்பம்.. பிறருக்காக வாழ்வது பேரின்பம்.!
மனிதனின் தேவையில் மற்றவர்களின் சேவையும் அடங்கி இருக்கிறது.. அதை அறிந்து வாழும் போது வாழ்க்கை அழகாக மாற மாற்றம் பிறக்கிறது.
நம் ஒவ்வொருவருடைய மனதிருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது.
அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு.. அது நட்பாக இருந்தாலும் சரி.. காதலாக இருந்தாலும் சரி.
வாழ்க்கை என்பது கனவு அதை கலைத்து விடாமல் கலை நயத்துடன் பார்த்து பழகு.. வாழ்க்கை இன்னும் அழகாக தெரியும்.!
வாழ்க்கையின் அழகு என்பது.. நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை.. உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.
அனுபவம் என்ற பாடத்தை வாழ்க்கை கற்றுத் தருகிறது.. வாழ்க்கை என்ற பாடத்தை அனுபவம் கற்றுத் தருகிறது.
சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும்.
நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்.. அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்.. முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை சேர்க்காதீர்கள்.. பாசத்தை சேகரியுங்கள் பகைமையை சேர்க்காதீர்கள்.!
எல்லாம் என்னுடையது என்ற வாழ்க்கை பயணத்தில் இறுதியில் எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்.
நீ அடைந்த உயரத்தை பொறுத்துத்தான் உன் வணக்கத்துக்கு கூட மறு வணக்கம் கிடைக்கும்.
இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும்.. கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற வேண்டுமென்ற எண்ணமே நமக்கு வராது.
ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதே.. உட்காருகின்ற வயதில் நீ நினைத்தாலும் ஓட முடியாது.
பிறருக்கு எதையும் கொடுக்க முடியவில்லை என்றாலும் மனதார வாழ்த்துங்கள்.
ஓய்வு எனும் சட்டை மிக சுகமானது ஆனால் அதை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது.
You May Also Like :

இன்றைய சிந்தனை துளிகள்

Tamil தத்துவங்கள்