அவமானம் Quotes: அவமானம் கவிதை

avamanam kavithai

இந்த பதிவு “அவமானம் Quotes: அவமானம் கவிதை” பற்றியது.

  • அவமானம் Quotes
  • அவமானம் கவிதை
  • Avamanam Kavithai
  • Avamanam Quotes in Tamil

நம் வாழ்க்கையில் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள கிடைக்கும் உளி தான் இந்த அவமானம்.

அவமானம் Quotes: அவமானம் கவிதை (Avamanam Kavithai)

சில அவமானங்கள் தான்
நம்மை சரியாக வாழக் கற்றுக்
கொடுக்கின்றன.

தேடிச் சென்று உன் அன்பை
நிரூபிக்க நினைக்காதே
ஆசையாய் போனால்
அவமானம் தான் மிஞ்சும்.

அவமானத்தை அனுபவமாக
எடுத்துக் கொள்ளுங்கள்..
அவமான படுத்த ஒருவன்
இல்லை என்றால் நமக்கு
தன்மானம் என்ற ஒன்று
தெரிந்திருக்காது.

மறதியால் ஏற்படும்
அவமானம் சிறந்த
ஞாபக சக்தியை
உருவாக்கும்.

அலட்சியம்
செய்பவர்களிடத்தில்
மீண்டும் மீண்டும்
அன்பைத் தேடுவதில்
அவமானத்தை தவிர
வேறு எதுவும்
கிடைத்துவிடாது..!

அடுத்தவனைப் போல
இருக்க ஆசைப்படாதே
உனக்கென்று தனித்துவம்
உண்டு.. நாயைப்
பார்த்து சிங்கமும்
குரைத்தால் அவமானம்
தான் மிஞ்சும் கவனமாக
இரு.

நம்மை யார் என்று
நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒரு
ஆயுதம் தான் அவமானம்..!

அவமானங்களால் மட்டுமே
வாழ்க்கையில் அதிக
தெளிவு கிடைக்கின்றது..
சிலரை புரிந்து கொள்ளவும்
முடிகிறது.

உன்னை நீயே
செதுக்கிக் கொள்
உளியால் அல்ல..
அவமானங்களால்
ஏனென்றால்
உளியை விட
அவமானம்
கூர்மையானது.

அவமானங்கள் பலரை
வீழ்த்திடவும் செய்கிறது..
சில நேரங்களில்
உயர்த்திடவும் செய்கிறது..
பொறுமை மற்றும்
மன உறுதியுடன்
செயல்பட்டால் அவமானம்
கூட வெகுமானமாய்
மாறிவிடும்.

காரணம் இல்லாமல்
உங்களை விட்டு
விலகிச் சென்றவர்களிடம்
சென்று காரணம் கேட்பது
நமக்கு நாமே
அவமானத்தை தேடிக்
கொள்வதற்கு நிகரானது.

அவமானங்களை
சேகரித்து வை
உன்னை அவமானம்
செய்தவர்களுக்கு
அன்பளிப்பாக கொடுக்க.

அவமானம் மட்டுமே
ஒருவனை அடுத்த
நிலைக்கு எடுத்துச்
செல்லும். அவமானங்கள்
மட்டுமே ஒருவனை
அறிவாளியாக மாற்றும்.

வாழ்க்கையில் தடுமாறி
விழுந்தவனுக்கு ஆறுதல்
கூறாவிட்டாலும் அவமானம்
செய்யாதே..! நாளை
நீயும் தடுமாறலாம்..
தடம்மாறலாம்..!

மற்றவர்கள் நம்மை
அவமானப்படுத்தும்
போது அந்த நொடியில்
வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில்
இருந்து தான் நம்
வாழ்க்கை ஆரம்பமாகின்றது.

தெரியாத ஒரு விஷத்தை
தெரிந்து கொள்வது
அவமானம் என்று ஒரு
போதும் நினைக்காதீர்கள்
தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே அவமானம்.

தன்னைத் தானே சரி
செய்து கொள்ளுங்கள்
அதை விட சிறந்த மாற்றம்
உலகில் எதுவுமில்லை.

தோல்வி என்பது அவமானம்
அல்ல.. வெற்றி என்பது
மகுடம் அல்ல..
இவ்விரண்டும்
வாழ்க்கையை புரிய
வைக்கும் பாடங்கள்.

வாழ்க்கையை வாழ்வதில்
சிறு மழலை போல் இரு
அதற்கு அவமானம்
தெரியாது; விழுந்தவுடன்
அழுது முடித்து
திரும்பவும் எழுந்து
நடக்கும்.

உன்னை கேலியும்
கிண்டலும் செய்து
அவமானம் செய்பவர்களின்
சொற்களும் செயல்களும்
தான் தளர்ந்து போன
உன் உணர்ச்சியை
தூண்டி உன்னை
சாதிக்க வைக்கும்.

உன் புருவம் உயரும்
நேரத்தில் புரிந்து
கொண்டேன் இனியும்
புறம் காட்டி ஓடினால்
எனக்கு அவமானம்
என்று..!

மேலும்