இந்த தொகுப்பு ‘நம்பிக்கை பொன்மொழிகள் – Confidence Quotes in Tamil’ உள்ளடக்கியுள்ளது.
- நம்பிக்கை பொன்மொழிகள்
- Confidence Quotes in Tamil
- நம்பிக்கை Quotes in Tamil
- Tamil Quotes – Nambikkai Quotes in Tamil
- Nambikkai Ponmozhigal in Tamil
- Nambikkai Ponmoligal in Tamil
நம்பிக்கை பொன்மொழிகள் – Confidence Quotes in Tamil
நம்பிக்கை குறையும் போது
எதிரிகளையும் துரோகிகளையும்
நினைத்துக் கொள்வேன்..!
மலையை பார்த்து
மலைத்து விடாதே மலை மீது
ஏறினால் அதுவும் உன்
காலடியில் கீழ்..!
உலகத்திலேயே ரொம்ப விலை
உயர்ந்த விஷயம்
நம்பிக்கை அதை அடைய
வருடங்கள் ஆகலாம்.. அது
உடைய சில நொடிகள் போதும்..!
நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால் ஒருவரின்
ஏமாற்றத்திற்கு முக்கிய
காரணமும் இந்த
நம்பிக்கை தான்..!
வாழ்க்கையில் கஷ்டங்கள்
வலிமையானது அதை விட
வலிமையானது நீ உன் மீது
வைத்திருக்கும் நம்பிக்கை..!
நம்பிக்கையை இழந்து எல்லாம்
முடிந்துவிட்டது என்று
எண்ணாமல் இது முடிவு
இல்லை.. ஒரு சிறிய வளைவு
தான் என்றெண்ணி நாம்
முன்னேற வேண்டும்..!
சிலரின் மீது கொண்ட நம்பிக்கை
தோற்றுப் போக ஆரம்பிக்கும்
இடத்தில் தான்.. அன்பு
குறைய ஆரம்பிக்கிறது..!
மகத்தான காரியங்களுக்கு..
மகத்தான நம்பிக்கைகளே
பிறப்பிடம்..!
எத்தனை கைகள் உன்னை
கை விட்டாலும் உன் நம்பிக்கை
உன்னை கை விடாது..!
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்
கொள்ளாதே உலகத்திலே
சிறந்தவன் நீ தான் இதை
எப்போதும் நம்பு..!
நமக்கு நாமே ஆறுதல் கூறும்
மன தைரியம் மற்றும்
நம்பிக்கை இருந்தால்
அனைத்தையும்
கடந்து போகலாம்..!
நம்பிக்கை துரோகம் நம்பாத
ஒருவரிடம் இருந்து கிடைக்காது..
நீ அதிகம் நம்பியவர்களிடம்
இருந்து மட்டுமே கிடைக்கிறது..!
மரணம் வரை நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டியது
எதற்காகவும் நம்பிக்கையை
இழக்க கூடாது.
நம் உறவுகள் தானே என்று
நம்பிக்கை வைக்காதீர்கள்
சந்தர்ப்பம் கிடைத்தால்
நமக்கு துரோகம் செய்ய
எதிர் பார்த்து கொண்டு
இருப்பார்கள்..!
கனவுகள் வெற்றி பெற
வேண்டுமானால் முதலில்
உள்ளத்தில் நம்பிக்கையை
விதைக்க வேண்டும்..!
பலரின் உறக்கமில்லா
இரவுகளுக்கு சிலரின்
இரக்கமில்லா துரோகமே
காரணம்..!
நம்பிக்கை துரோகம் என்பது
தகுதியற்ற ஒருவரை
நம்பியதற்கு கிடைக்கும்
தண்டனை..!
உன் மீது உனக்கு அளவு
கடந்த நம்பிக்கை
இருக்குமானால் தோல்வி கூட
உன்னை நெருங்க
பயம் கொள்ளும்..!
அறிவு நம்மை கைவிடும் போது
நம்பிக்கையே உதவுகிறது..!
வலிமை இல்லாதவர்கள்
அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை
வைக்கிறார்கள்.. வலிமை
உள்ளவர்கள் தன் மீது
நம்பிக்கை வைக்கிறார்கள்..!
இன்பத்திலும் சரி துன்பத்திலும்
சரி நாம் நினைவில் கொள்ள
வேண்டியது ஒன்றே ஒன்று
மட்டும் தான்.. இந்த நிமிடம்
நிரந்தரமில்லை இதுவும்
கடந்து போகும்..!
என்னிடம் இருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்ளுங்கள் என்
நம்பிக்கை மட்டும் எனக்கு
போதும் நான் வெற்றியடைய..!
மேலும்