ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்.
- கிருபானந்த வாரியார் தத்துவம்
- Kirupananda Variyar Ponmozhigal
கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
1.உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்களை போல செயல்படக்கூடாது.
2. மனிதனின் மனக்கோணலை நோக்கி நல்வழிப்படுதலே நல்ல புத்தகங்களின் பயனாகும்.
3. நிதானமே தலை சிறந்தது எந்தப்பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
4. சத்திய வழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர் பெரியோர்களை தெளிவமாக மதியுங்கள்.
5. மனத்தூய்மையுடன் கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். மலர்ந்த முகத்துடன் இனிமையாக பழகுங்கள்.
6. தானதர்ம வழியில் செலவழித்த செல்வமும் இறை வழிபாட்டில் செலவழித்த காலமும் நம்முடையது.
7. பணத்தால் பெருமை கொள்ளக் கூடாது. உறவினர் ஏழையானாலும் அவர்களை மதிப்பது நம் கடமை.
8. ஒருவரின்உண்மையான அன்பையும் அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. அவர்களின் செயலின் மூலம் தான் காண முடியும்.
9. பசு போன்ற மென்மையான மனிதர்களிடம் பழகுவது நன்மை தரும். பாம்பு போன்ற நஞ்சு தன்மை கொண்ட மனிதர்களிடம் நெருங்கவே கூடாது.
10. நாளடைவில் உன் உறவுகள் கூட உன்னை கைவிட கூடும். ஆனால் நீ செய்த நன்மைகள் உன் கூடவே வரும்.
11. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.
12. மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியாது.
13. உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிராத்தனை அவசியமானது.
14. மனதால் கூட பிறருக்கு துன்பம் நினைக்காத ஒருவரால் தான் துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.
15. தன்னை தானே சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத் தூய்மை பெற்று நற்செயலிலும் ஈடுபடுவான்.
Kirupananda Variyar Ponmozhigal
16. விலங்கு உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மீகம்.
17. குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பொங்கலிடுவதோடு ஏழைகளுக்கு தர்மமும் செய்ய வேண்டும்.
18. அனைத்து உயிர்களும் இறைவன் வாழும் கோவில் தான். அதனால் அனைத்து உயிரையும் மதித்து வாழ வேண்டும்.
19. சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே சிறந்த மனிதன்.
20. இந்த பிறவியில் செய்த நன்மையின் பயன் மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.
21. பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாக கருதுபவனே சிறந்தவன்.
22. உலகில் எல்லாம் தெரிந்தவர்எவருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் எவரும் கிடையாது.
23. ஒரு செயலை செய்யும் போது அதன் விளைவுகளை பலமுறை சிந்தித்து செய்ய வேண்டும்.
24. கடவுளை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். மகான்கள், அடியவர்களை வழிபட்டால் இருமடங்கு பலன்.
25. நல்லவர்கள், பெரியவர்களை வணங்காவிட்டாலும் அலட்சியப்படுத்துவது கூடாது.
26. உன்னை நீ காத்துக்கொள்ள விரும்பினால். எந்த நிலையிலும் கோபம் உன்னை கட்டுப்படுத்த அனுமதிக்காதே.
மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.