நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

Nabigal Nayagam Ponmoligal

இறை தூதர் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

  • நபிகள் நாயகம் பொன்மொழிகள்
  • Nabigal Nayagam Ponmoligal

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

1.இறைவன் மிகப் பெரியவன்.

2. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன.

3. எந்தவொரு பணியையும் ஆரவாரமில்லாமல் மௌனமாய் செய்து முடிக்க வேண்டும். தேவையில்லாமல் அதனை குறித்து விளம்பரம் செய்வதால் விதவிதமான தொல்லைகள் வந்து சேரும்.

4. துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின் முன்னுரையாக இருப்பது இருப்பது நாவடக்கம் இன்மைதான். ஒருவர் மௌனத்தை கடைப்பிடிப்பார் எனில் அந்த மௌனம் அவரை ஆயிரம் சோதனைகளில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் பாதுகாக்கும்.

5. ஒரேயொரு நற்செயலை மட்டும் தவறாது ஆற்றினால் போதும். சொர்க்கம் உங்களை தேடி வரும் அந்த செயல் தான் உண்மை பேசுதல்.

6. அதிகமாகவும் மிக இலகுவாகவும் சொர்க்கம் நுழைபவர்கள் ஏழைகளே ஆவர்.

7. நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் செல்வதை குறைத்து விடாது.

8. யார் சிறந்தவர்? உங்கள் மனைவியர் இடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர்.

9. நாம் யாருக்கும் மேலல்ல.. யாரும் நமக்கு மேலோர் அல்ல.

10. எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும்.

11. மக்கள் இறைவனால் அளிக்கப்பட்ட இரண்டு லாபங்கள் எப்போதும் மறந்து விடுகிறார்கள்.

  • நேரம்
  • ஆரோக்கியம்

12. உழைப்பாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள்.

13. பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள் வானத்திலுள்ளவன் (அல்லாஹ்) உங்கள் மீது கருணை காட்டுவான்.

14. நீங்கள் மன்னியுங்கள் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்.

15. பிறருக்கு கொடுக்கும் பெரும் அன்பளிப்பு “துஆ”.

Nabigal Nayagam Ponmoligal

16. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

17. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் என்பது சாத்தானின் தன்மை.

18. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

19. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

20. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

21. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

22. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுபட்ட மக்களின் மீதிருக்கிறது.

25. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

26. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

27. பெருமை அடிப்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.

28. இறுதி தீர்ப்பு நாள்.. கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

29. குத்துச் சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல.. மாறாக கோபம் வரும் போது தன்னைத் தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

30. எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை.

31. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

32. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

33. நெருப்பு விறகை சாம்பலாக்கி விடுவதை போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

34. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

35. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.