சேகுவேராவின் பொன்மொழிகள்

Che Guevara Quotes In Tamil

“மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்” என்று உரைத்த மண்டியிடாத மாவீரன் புரட்சியாளன் சேகுவேராவின் பொன்மொழிகள்.

மக்களுக்கான புரட்சியாளன் சேகுவேரா இறுதியாக சுட்டுக் கொல்லும் போது கூட தன்னை நிற்கவைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

“கோழையே நீ சுடுவது ஒரு சே வை (சேகுவேரா வை) அல்ல ஒரு சாதாரண மனிதனை தான்” இது தான் சேவின் கடைசி வார்த்தைகள்.

எந்த பெயர் வரலாற்றில் அழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த பெயர் தான் இன்று காற்றில் கலந்து பலகோடி மக்களால் தாரக மந்திரமாக சேகுவேரா என்று உச்சரிக்கப்படுகின்றது.

  • சேகுவேரா பொன்மொழிகள்
  • சேகுவேரா தத்துவம்
  • Che Guevara Quotes In Tamil

சேகுவேராவின் பொன்மொழிகள்

1.நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

2. நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.

3. எங்கெல்லாம் அடக்கப்படுவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

4. போருக்கு செல்லும் போது ஆயுதம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் நீ செல்லும் போர்க்களத்திலே ஆயுதத்தை தேடிக்கொள்ள முடியும்.

5. தட்டிப்பார்ப்போம் திறக்க மறுத்தால் தகர்த்து எறிவோம்.

6. நான் இறந்த பிறகு எனது துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்ளவர்கள் அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப் பாயும்.

7. எனக்கு வேர்கள் கிடையாது கால்கள் மட்டுமே உண்டு.

8. விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.

9. ஒவ்வொரு அநீதியைக் கண்டும் ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீயும் எனது தோழனே.

Che Guevara Quotes In Tamil

10. புரட்சி தானாக உண்டாவதில்லை. நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.

11. எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

12. இழப்பதற்கு உயிரை தவிர வேறு ஒன்றும் என்னிடம் இல்லை. ஆனால் அடைவதற்கு இலட்சியம் இருக்கின்றது.

13. நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல.

14. நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் அசாத்தியங்களை கனவு காண்கின்றோம்.

15. நல்ல நண்பனை ஆபத்தில் அறி. நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி.

16. பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்தேன் என்னை புண்ணியவான் என்றார்கள். ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டேன் என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்.

சேகுவேரா தத்துவங்கள்

17. தேசம் என்பது வெறும் மண்ணல்ல உயிர் மூச்சு.!

18. சிறந்த புத்தங்கள் எரிக்கப்படும் இடத்தில் மக்களும் அழிக்கப்பட்டு விடுவார்கள்.

19. தங்களை விடுத்தது கொள்ள போராடும் மக்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே தீர்வு என நம்புகிறேன்.

20. சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ அவனே சிறந்த தலைவன்.

21. பயந்தால் சுதந்திரம் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க முடியாது.

22. நான் என்பது எனது முக்கியமானவைகளில் ஒன்று.

23. போராட்டம் என்பது உனக்காக அல்ல.. நாளைய உன் தலைமுறைக்கு என உணர்த்திடு.

24. நாம் போராடாமல் சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள கூடாது.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

லெனின் பொன்மொழிகள் தத்துவங்கள்

விவேகானந்தர் பொன்மொழிகள் | Thoughts