போலி உறவுகள் கவிதை | poli uravugal

போலி உறவு கவிதை

போலி உறவுகள் கவிதை | poli uravugal – இந்த உலகில் நம்மைச் சுற்றி பல போலியான உறவுகளும் இருக்கிறார்கள் என்பதை உங்கள் வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போலி உறவுகள் கவிதை | poli uravugal

நீ என்ன தான் நல்லது செய்தாலும்
குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்..!

உறவுகளோடு இருக்கும் போது இறைவனின்
பார்வை உன்மீது இருக்கிறது என்று
மகிழ்ச்சியாக இரு. தனியாக நிற்கும் போது
இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று
நம்பிக்கையோடு இரு. (போலி உறவுகள் கவிதை)

உங்களின் தேவைக்காகவோ
பொழுது போக்கிற்காகவோ பிறரின்
உண்மை அன்பிலும் அவர்களின்
உணர்விலும் விளையாடாதீர்கள்.

போலி உறவுகள் வதந்திகளை நம்புவார்கள்
உண்மையான உறவுகள்
உன்னை மட்டும் நம்புவார்கள்.

பழகிய உறவுகளிடம் வார்த்தைகளை
விடும் முன்.. அவர்களுடன் வாழ்ந்த
சிறந்த நாட்களையும் சற்று எண்ணிப் பாருங்கள்.

விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
விடயங்களால் தான் சில உறவுகளை
இழக்க வேண்டி ஏற்படுகின்றது.

திரும்பி பார்க்க வைக்கும் முகம்
எல்லோருக்கும் இருக்கும்.. ஆனால்
திரும்ப நினைக்க வைக்கும் குணம்
ஒரு சில உறவுகளுக்கு மட்டுமே இருக்கும்.

நாம் மற்றவர்களுக்கு செய்வது மற்றோருவர்
மூலமாக நமக்கு வந்து சேரும்.. அது உதவியாக
இருந்தாலும் சரி..! துரோகமாக இருந்தாலும் சரி.

சிலவேளைகளில் நம் கூட இருக்கும் உறவுகள்
விஷமாகவும் அல்லது வேஷமாகவும் இருப்பதை
உணர்த்தி விடுகின்றார்கள். (போலி உறவு கவிதை)

உணர்வுகளை புரிந்து கொள்ளாத உறவுகளிடம்
எவ்வளவு தான் அன்பைக் கொட்டினாலும் அது
வெறும் குப்பை போன்றே பார்க்கப்படும்.

நாம் தேடித் தேடி போவதால் தான் சில
உறவுகளுக்கு நம் அருமை புரிவதில்லை.

தேவைக்காக பழகும் உறவுகளை விட
பழி தீர்க்கும் எதிரிகள் மேலானவர்கள்.

உண்மையாக பழகுபவர்கள்
வெறுக்கப்படுகிறார்கள்.. பொய்யாக
நடிப்பவர்கள் போற்றப்படுகிறார்கள்.

காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்பும்
நிச்சயம் ஏதோ ஒரு சந்தோசத்தை
ஒளித்து வைத்திருக்கும். (போலி உறவுகள் கவிதை)

எந்த ஒரு காயத்திற்கும் சில உறவுகள்
மருந்தாவர்கள்  ஆனால் அந்த உறவுகள்
ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

நீங்கள் சூரியனைப் போல
மிளிர வேண்டுமானால் முதலில்
சூரியனைப் போல எரிய வேண்டும்.

பேராசை கொண்ட சில உறவுகளுக்கு
இந்த உலகத்தையே கையில்
கொடுத்தாலும் திருப்தி உண்டாவதில்லை.

உன்னை மதிக்கும் உறவுகளிடம்
தாழ்ந்து பேசணும்..! உன்னை மிதிக்கும்
உறவுகளிடம் வாழ்ந்து பேசணும்.

வாழ்க்கையில் யாரும் கற்றுத்தராத
பெரிய பாடங்களை சில உறவுகள்
கற்றுத் தந்துவிடுகிறார்கள்.. வாழ்க்கையில்
யாரையும் நம்பி வாழ்ந்து விடாதே என்று.

நல்ல மனிதன் விவாதத்தில் ஈடுபடுவதில்லை
விவாதத்தில் ஈடுபட்டு காலத்தை கழிப்பவன்
நல்ல மனிதனாக இருக்க முடியாது.

வாழ்க்கையில் சில உறவுகளை
முழுமையாக நம்புவதால் தான் அதிகம்
ஏமாற்றங்களையும் மாற்றங்களையும்
சந்திக்கின்றோம். (போலி உறவுகள் கவிதை)

போலி உறவுகள் நிழல்களைப்
போன்றவர்கள் உங்கள் இருண்ட
நேரத்தில் அவர்களை எங்கும் காண முடியாது.

போலி உறவுகள் இன்று உங்களுடன்
இருப்பார்கள் நாளை உங்களுக்கு
எதிராக இருப்பார்கள். (போலி உறவு கவிதை)

அதிகமான உறவுகளைக்
கொண்டிருப்பது பெருமையில்லை.
உண்மையான உறவுகளைக்
கொண்டிருப்பது தான் முக்கியம்.

உங்களின் மகிழ்ச்சியில் பங்கு
கொள்ளும் உறவினை விட
உங்களுக்கு துணையாக இருக்கும் உறவு
மதிப்பு மிக்கவர். (போலி உறவுகள் கவிதை)

மேலும்