நெகிழி குப்பை இல்லாத எதிர்காலம் கட்டுரை

பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம் கட்டுரை

இந்த பதிவில் “நெகிழி குப்பை இல்லாத எதிர்காலம் கட்டுரை” பதிவை காணலாம்.

உலகின் பல நாடுகள் நெகிழியின் ஆபத்தை உணர்ந்து அவற்றை கட்டுப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்கின்றன. இதனை ஒவ்வொரு நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

நெகிழி குப்பை இல்லாத எதிர்காலம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நெகிழியும் சுற்றுசூழலும்
  3. மீழ்சுழற்சி செய்தல்
  4. நெகிழியால் வரும் ஆபத்து
  5. நெகிழியை கட்டுப்படுத்துவதில் எமது பங்கு
  6. நெகிழிக்கு மாற்றீடு
  7. முடிவுரை

முன்னுரை

உலகின் சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்பட்ட பிளாஸ்ரிக் எனும் நெகிழி இன்று மிகப்பெரும் சூழல் மாசடைவுக்கு காரணமாக மாறிவருகின்றமை நாம் அறிந்ததே.

நெகிழி தொடர்பான மாசடைதலில் உலகளவில் இந்தியா 12 ஆவது இடத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பொலித்தீனும் பிளாஸ்ரிக்கும் எமது நாட்டில் நிரம்பியுள்ளது. நீர் நிலைகளும் அழகான பிரதேசங்களும் இவற்றினால் பொலிவிழந்து காணப்படுகின்றன.

இதனால் நாம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால் நெகிழியை கட்டுப்படுத்த எம்மால் என்ன செய்ய முடியும் என்பதனை இங்கு காணலாம்.

நெகிழியும் சுற்றுசூழலும்

உலகளவில் ஆண்டுக்கு 60 மில்லியன் டன் பிளாஸ்ரிக்கானது உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் உலகமெங்கிலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்ன் பாவனை அதிகரிக்க துவங்கியது.

9 சதவீதமானவை மறுசுழற்சி செய்யப்படுகிறது 12 சதவீதமானவை எரித்து அழிக்கப்படுகிறது. மீதமுள்ள 79 சதவீதமான நெகிழி கழிவுகள் சூழலில் வீசப்படுவதனால் நீர்நிலைகளிலும் சமுத்திரங்களிலும் சேர்கிறது.

இவற்றினால் பாரியளவிலான மாசடைதல் இடம்பெறுகிறது. வருடமொன்றில் 1 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் நெகிழி கழிவுகளால் இறந்து போவதாக அறியப்படுகிறது.

இதனால் அரிய வகை கடலாமைகள் போன்றன அதிகம் இறக்கின்றன இது ஒரு அசாதாரண நிலையாகும்.

மீள்சுழற்சி செய்தல்

நெகிழியினால் உண்டாகும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு நெகிழி பாவனையை குறைப்பது தான் சிறந்த வழியாகும். பாவிக்கின்ற நெகிழி பொருட்களை சூழலில் வீசி எறியாது அவற்றினை மீழ்சுழற்சி செய்து பாவிப்பதனால் நெகிழியின் பாதிப்புக்களை குறைத்து கொள்ள முடியும்.

இந்தியாவில் பிளாஸ்ரிக் கழிவுகளை மீழ்சுழற்சி செய்து பாதைகள் அமைத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் நெகிழி மேலாண்மையில் இந்தியா பின் தங்கியே காணப்படுகிறது.

ஒரு பொருளை மீழ்சுழற்சி செய்தால் அதே தரத்தில் மீண்டும் கிடைக்குமானால் பிளாஸ்ரிக்கை மறு சுழற்சி செய்தால் அதே தரத்தில் மற்றொரு பிளாஸ்ரிக் கிடைக்காது. இதனை உருவாக்கும் போது “பென்சின், டையாசின்” ஆகிய நச்சு வாயுக்கள் வெளிவிடப்படுவதனால் இது சூழலை மாசுபடுத்துகிறது.

மறுசுழற்சி மூலமாக உருவாகும் பொலித்தீன் முன்பை விட மிகவும் ஆபத்தானதாக சொல்லப்படுகிறது.

நெகிழியால் வரும் ஆபத்து

நெகிழியினால் உருவாகும் பாதிப்புக்கள் அதிகமாக உள்ளன. சூடான உணவு பொருட்களை நெகிழியுடன் சேர்த்து பயன்படுத்துவதனால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் காணப்படுகிறது.

மற்றும் நெகிழி பொருட்களை பயிர் நிலங்களில் வீசுவதனால் தாவர வேர்கள் மண்ணை ஊடுருவ முடியாது போவதனால் விளைச்சல் குறைந்து அந்த விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடுகின்றன.

நீர் நிலைகளில் நெகிழி பொருட்கள் சேர்வதனால் சுத்தமான நீர் மாசடைவதடன் நீர்வாழ் உயிரினங்களும் இறக்கின்றன.

எமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு நெகிழியால் பாரிய பாதிப்புக்களை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

நெகிழியை கட்டுப்படுத்துவதில் எமது பங்கு

மாற்றம் என்பது உன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தின் படி நாம் ஒவ்வொருவரும் நெகிழி பாவனையை கணிசமாக குறைத்து கொண்டால் இந்த பாதிப்புக்களை கட்டுப்படுத்தி விட முடியும். இன்று எல்லா பொருட்களும் நெகிழி குழைமத்தால் உருவாக்கப்படுவது தான் பெரிய பிரச்சனை.

  • நெகிழிக்கு மாற்றீடான இயற்கை உற்பத்திகளை உருவாக்குதல்.
  • அநாவசியமாக காணப்படும் நெகிழி உற்பத்திகளை தவிர்த்தல்.
  • ஒரே நெகிழி பைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல்.
  • எமக்கு பயன்படாத நெகிழி பொருட்களை மறுசுழற்சி மையங்களில் கையழித்தல்.
  • நாம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது துணி பைகளை பயன்படுத்தல் இதனால் நெகிழி பொருட்களை வாங்கும் அளவு குறையும். குறைந்த விலைகளில் கிடைக்கும் துணி பைகளை 100 தடவைக்கு மேல் உபயோக படுத்த முடியம்.

இவ்வாறு எமது நல்ல பழக்கங்களால் நெகிழியை கட்டுப்படுத்தலாம்.

நெகிழிக்கு மாற்றீடு

நெகிழி பொருட்களை அதிகளவாக கடைகளில் வாங்காமல் வீட்டில் இருந்தே துணி அல்லது சணல் பைகளை எடுத்து செல்வது சிறந்ததாகும்.

மற்றும் நெகிழி பைகளுக்கு பதிலாக வாழை, கரும்பு சக்கை போன்றவற்றில் இருந்து உணவு கோப்பைகளை தயாரிக்கலாம். கடதாசி பைகளை உபயோக படுத்தலாம்.

உண்பதற்கு வாழை இலை, தாமரை இலை போன்றவற்றை நாம் பயன்படுத்தலாம். பிளாஸ்ரிக் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி அல்லது உலோ போத்தல்களை பயன்படுத்துவது நன்மை தரும்.

வீடுகளில் பாவிக்க மர தளபாடங்கள் மற்றும் மண்பாத்திரங்களை பயன்படுத்துவது மிகச் சிறந்ததாகும்.

முடிவுரை

எமது இந்த நீண்ட பயணம் சிறப்பாக இருக்க இந்த நெகிழியை நாம் ஒழித்து விடவேண்டும். அதற்கு இன்றே முதல் அடியினை எடுத்து வைப்போம். இல்லையேல் எமது அழிவினை நாமே தேடிக்கொள்ள நேரிடும்.

உலகின் பல சிறந்த நாடுகள் நெகிழியை கட்டுப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்கின்றன. இந்த நெகிழி மாசுகளற்ற இந்தியாவின் எதிர்காலம் மிக சிறப்பானதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

You May Also Like:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

இயற்கை பேரிடர் கட்டுரை