இந்த பதிவில் “நான் ஒரு உண்டியல் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
சேமிப்பு என்பது சிறு வயதில் இருந்தே அனைவரும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய சிறந்த பழக்கம் ஆகும்.
நான் ஒரு உண்டியல் கட்டுரை – 1
“ஈட்டி எட்டின மட்டும் பாயும் பணம் பாதாளம் தாண்டியும் பாயும்” என்றொரு முதுமொழியை நாம் கேட்டிருப்போம். அது இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தப்பாடுடையதாகும். இன்று பணம் தான் மனிதனது எல்லா நேரங்களிலும் அவசியமான ஒன்றாக உள்ளது.
பணம் கையிலே வருவதும் தெரியாது போவதும் தெரியாது எனும் அளவிற்கு மிகவேகமாக கரைந்து விடக்கூடியது. ஆகவே பணத்தை சேமிக்க கற்று கொள்ள வேண்டியது. மிகுவும் அவசியமாகும்.
இதனால் தான் அன்றைய காலகட்டத்தில் இருந்து ஒரு வீட்டு வங்கியினை போல என்னை மக்கள் பாவிக்கின்றனர். ஆம் எனது பெயர் உண்டியல். என்னை பயன்படுத்தி சிறிய சிறிய தொகையாக சேர்த்து வைக்கின்ற பணம் தான் பணம் இல்லாத நேரங்களில் எனது ஞாபகத்தை உண்டாக்குகின்றது.
வாழ்வில் உயர நினைக்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வாழக்கூடிய மக்கள் என்னை அதிகம் பயன்படுத்துவதை காண கூடியதாக இருக்கும்.
அன்றாடம் உழைத்து செலவழிந்து போன மிச்ச பணம் சிறியதொகையினை வங்கியில் சென்று வைப்பு செய்வது சிரமம் என்பதால் அந்த சில்லறை மற்றும் சிறிய தொகை பணத்தை உண்டியலில் இட்டு தினம் தினம் சேமிப்பார்கள்.
இதனை வழக்கமாக்கி கொள்வதனால் அவர்களுக்கு அந்த சிறிய பணத்தொகை பெரிய இழப்பாக தெரிவதில்லை. நாளாந்தம் இவ்வாறு அவர்கள் சேமிக்கின்ற பணமானது. “சிறுதுளி பெருவெள்ளம்” என்பதனை போல ஒரு கணிசமான தொகை பணமாக சேர்கின்றது.
வாழ்வில் தீடீரென ஏற்படுகின்ற செலவுகளுக்கு பண நெருக்கடியினை தீர்ப்பதாக இது அமைகின்றது. இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ள என்னை அதிகம் வீடுகளில் வைத்து மக்கள் சேமிக்கின்றனர்.
நான் ஒரு உண்டியல் கட்டுரை – 2
இந்த வாழ்வில் வருகின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஒரு முக்கியமான காரணமாக பணம் இருக்கின்றது. என்பதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த பணத்தை உழைக்க தான் இந்த உலகமே நிற்காமல் ஓடி கொண்டிருக்கின்றது.
எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் இந்த பணம் இலகுவில் கரைந்து விட கூடியது எனவே தான் மனிதர்கள் இதனை சேமிக்க கற்று கொள்ள வேண்டும். சேமிப்புக்கென உருவாக்கப்பட்ட சிறிய கருவி தான் நான்.
சிறிய சிறிய துளிகளாக பெய்கின்ற மழை தான் படிப்படியாக பெரிய நதியாக உருவெடுக்கின்றது. அதனை போல தான் மனிதர்களும் பணத்தை சிறிது சிறிதாக உண்டியலை பயன்படுத்தி சேமிப்பார்கள்.
இவ்வாறு சேமிக்கின்ற பழக்கம் உடைய மனிதர்களால் தான் வாழ்வில் முன்னேற முடியும். அதனை விடுத்து ஊதாரிதனமாக செலவு செய்வதனால் வாழ்வில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பணத்தை சேமிக்காது அதிகம் செலவு செய்து பின்னாளில் வறுமையில் வாடுகின்றவர்கள் பலரை இங்கே காணமுடியும். ஆகவே தான் பெரியவர்கள் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை சொல்லி கொடுக்கவும் அவர்களது பிறந்த நாள் பரிசாக என்னை பரிசளித்து சேமிக்க ஊக்கப்படுத்துவார்கள்.
என்னை நீங்கள் இன்று பாதுகாத்தால் நாளை நான் உங்களை பாதுகாப்பேன் என்கின்றது பணம். ஆகவே ஒரு உண்டியலுடைய அவசியமும் அதன் மூலமாக கிடைக்கும் சிறிய சிறியளவான சேமிப்பு பின்னாளில் எவ்வளவு பெரிய உதவியாக அமையும் என்பதனை கடினமாக உழைக்கும் வர்க்கத்தினர் நிச்சயமாக அறிந்திருப்பார்கள்.
எனவே உங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள இன்றே சேமியுங்கள் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
You May Also Like: