இனிய மதிய வணக்கம் கவிதைகள் வரிகள்

இந்த தொகுப்பு “இனிய மதிய வணக்கம் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது. இந்த அழகிய கவிதை வரிகள் மூலம் உங்களுக்கு பிடித்தவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

  • இனிய மதிய வணக்கம் கவிதைகள் வரிகள்
  • மதிய வணக்கம் கவிதைகள்
  • மதிய வணக்கம் கவிதை
  • இனிய மதிய வணக்கம்

இனிய மதிய வணக்கம் கவிதைகள் வரிகள்

எதையும் ஆழமாக நேசிக்காதே
துன்பப்படுவாய்.. எதையும்
ஆழமாக யோசிக்காதே
குழம்பி விடுவாய்.. எதையும்
எங்கும் யாசிக்காதே
அவமானப்படுவாய்..
இனிய மதிய வணக்கம்..!

நமக்கு கிடைத்ததை “பெஸ்ட்”
எனவும் நமக்கு கிடைக்காததை
“வேஸ்ட்”
எனவும்
நினைத்தால் வாழ்க்கை முழுவதும்
மகிழ்ச்சியே..!
இனிய மதிய வணக்கம்..!

பிடிக்க முடியாது இளமையை..
தடுக்க முடியாது முதுமையை..
பெற முடியாது இழந்த மதிப்பை..
நிறுத்த முடியாது..
ஓடும் காலத்தை
வாங்க முடியாது..
தாயின் அன்பை
அழிக்க முடியாது..
வாழ்ந்த வாழ்க்கையை
திரும்ப பெற முடியாது..!
அன்புடன் இனிய மதிய வணக்கம்..!

வரலாற்றை திரும்பி பாத்தா..
அது எனக்கு கற்றுக் கொடுத்தது
ஒன்னே..! ஒன்னு தான்..!
நாம வாழணும்னா
நேரா நேரத்திற்கு சாப்பிடணும்..
இனிய மதிய நேர வணக்கம்..!

திறமை என்பது கடவுளால்
கொடுக்கப்பட்டது
அடக்கத்துடன் இருங்கள்..
புகழ் என்பது மனிதரால்
கொடுக்கப்பட்டது நன்றியுடன்
இருங்கள்.. அகம்பாவம் என்பது
நமக்கு நாமே
கொடுத்துக் கொண்டது
எச்சரிக்கையுடன் இருங்கள்..!
இனிய மதிய நேர வணக்கம்..!

இலவசமாக கிடைக்கும்
சொற்களைக் கொண்டு..
ஒருவரை எளிதில்
காயப்படுத்தி விட்டு..
விலை மதிக்க முடியாத
அவரின் அன்பை
இழந்து விடுகிறார்கள்..!
அன்புடன் இனிய
மதிய நேர வணக்கம்..!

வாழ்க்கையில் பல பேருக்கு
நன்றி சொல்.. சில பேருக்கு
மிகவும் நன்றி சொல்..
பல பேர் நம் வாழ்க்கையில்
பாடம் கற்பிக்க வந்தவர்கள்..
சில பேர் பாடமாகவே
வந்தவர்கள்..! அன்புடன்
இனிய மதிய வணக்கம்..!

நீ வாழ்க்கையில் முன்னேற
வேண்டுமானால் உன்னுடைய
கால்களால் நடந்து போ..
மற்றவர்களின் முதுகின்
மேல் ஏறிப்போக விரும்பாதே..!
இனிய மதிய நேர வணக்கம்..!

மௌனம் மட்டுமே சில
இடங்களில் நமக்கு
மரியாதை பெற்று தரும்..
இனிய மதிய வணக்கம்
நண்பர்களே..!

நண்பனை பற்றி
அடுத்தவர்களிடம்
சொல்லும் போது நல்லதை
சொல்.. அவனிடம் மட்டுமே
அவன் குறைகளை சொல்
அதுவே சிறந்த நட்பு..
இனிய மதிய வணக்கம்
நண்பர்களே..!

பணம் இருந்தா மட்டும்
சந்தோசமாக வாழ்ந்திட
முடியாது பாசமா
இருக்கிறவங்க பக்கத்தில
இருந்தா தான் சந்தோசமாக
வாழ முடியும்..! இனிய
மதிய நேர வணக்கம்..!

வீரனைப் போரிலும்..
யோக்கியனை கடனிலும்..
மனைவியை வறுமையிலும்..
நண்பனை கஷ்ட காலத்திலும்
அறிந்து கொள்ளலாம்..!
அன்புடன் இனிய
மதிய வணக்கம்..!

காயம் இல்லாமல் கனவுகள்
காணலாம் ஆனால்..
வலிகள் இல்லாமல்
வெற்றிகள் காண முடியாது..
இனிய மதிய நேர வணக்கம்..!

இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க..