இந்த “ஆறுதல் கவிதைகள் – aaruthal kavithai” உங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
- ஆறுதல் கவிதை
- aaruthal kavithai in Tamil
ஆறுதல் கவிதைகள் – aaruthal kavithai
வலிகளை மறைத்து
சிரித்து வாழ பழகுங்கள்..
ஆறுதல் என்ற பெயரில்
வலியை அதிகப்படுத்த
ஒரு கூட்டம் அலைந்து
கொண்டிருக்கிறது.
தன்னை தானே சரி
செய்து கொள்ள முயலுங்கள்..
அதை விட சிறந்த மாற்றம்
வேறொன்றுமில்லை..!
எந்த சூழ்நிலையிலும் உனக்கு
நீயே ஆறுதலும் தைரியமும்
சொல்லும் பக்குவம் உனக்கு
இருந்தால் வாழ்க்கையில்
எதையும் கடந்து போகலாம்.
கலங்கிய நீரும், குழம்பிய
மனமும் ஒரு நாள்
தெளிந்தே தீரும்..
கவலை வேண்டாம்..
இதுவும் கடந்து போகும்..!
உன்னுடன் பேசுவது
மட்டும் தான் எனக்கு இருந்த
ஒரே ஆறுதல்.. அதிலும்
இப்பொழுது மாறுதல் என்றால்
நான் என்ன செய்வேன்..!
தனித்து நின்றாலும் சில
எழுத்துக்களுக்கு பொருளுண்டு..
தனியாக நின்றாலும் மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு..
தனியாக நின்றாலும் கலங்காதே..
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனி மனித சரித்திரங்களை தான்..!
வலிகளைத் தரும் உறவுகள்
வேண்டாம்.. ஆறுதல் தரும்
தனிமையே போதும்..!
காயங்கள் இல்லாமல் கனவுகள்
காணலாம்.. ஆனால் வலிகள்
இல்லாமல் வெற்றிகள்
காணமுடியாது..!
பொய்யான அன்புக்காக ஓடியது
போதும் இனி ஊர் ஓட்டம்..
வாழ்வின் இலட்சியத்தை
நோக்கி..!
செய்த பாவங்கள் கேள்வி கேட்கும்
செய்த புண்ணியங்கள்
பதில் சொல்லும்..!
பாம்பானது தன் தோலை
எத்தனை முறைதான் உரித்தாலும்..
அது எப்போதும் பாம்பு தான்..
சில நபர்களை உங்கள் வாழ்க்கையில்
மீண்டும் அனுமதிக்கும் முன் இதனை
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..!
ஆறுதல் சொல்லும் உறவே
அழ வைத்தால் யாரிடம் போவேன்
ஆறுதலை தேடி.
குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது
இருக்க வேண்டும்..
குழி பறிக்க அல்ல.. அடுத்தவர்
பறிக்கும் குழியில் விழாமல் இருக்க..!
வாழ்க்கை உன்னை அழ வைப்பதற்கு
நூறு காரணங்கள் கொடுத்தால்
என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம்
காரணங்கள் இருக்கிறது
என்று காட்டுங்கள்..!
மனசு காயப்பட்டால் நமக்கு
பிடித்தவர்களிடம் ஆறுதல்
தேடலாம்.. ஆனால்
பிடித்தவர்களே காயப்படுத்தினால்
யாரிடம் ஆறுதல் தேடுவது.
நல்ல விஷயத்திற்காக தனியாக
நிற்க வேண்டிய சூழ்நிலை
வந்தாலும் தைரியமாக நில்..!
வாழ்க்கையில் அன்பை தருபவரை
காட்டிலும் அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்.
காயம் கொண்ட என் இதயத்தில்
உனது ஆறுதல் அவ்வப்போது
மருந்தாகிறது.
உனக்கு ஆறுதல் கூற இயலவில்லை
என்னால் உன் வலிகளையும்
வேதனைகளையும் உணர்ந்ததால்.
அடைய வேண்டிய இலக்கு அவசியம்
என்றால் பாதை கடினமானாலும்
பயணிக்க தான் வேண்டும்.
தூக்கி எறியப்படும் ஒன்றுதான்
இன்னொருவருக்கு புதியதாகின்றது..
அது மனம் ஆக இருந்தாலும் சரி..
பொருளாக இருந்தாலும் சரி..!
வாழ்க்கை வாழ்வதற்கே தவிர
இல்லாததை, கிடைக்காததை
நினைத்து ஏங்கி
வீணடிப்பதற்கு இல்லை.
வாழ்ந்து உயர்ந்து விட்டால்
பொறாமையில் பேசுவார்கள்..
தாழ்ந்து வீழ்ந்து விட்டால்
கேவலமாக பேசுவார்கள்..
இவ்வளவு தான்
மனிதர்களின் உலகம்..!
மேலும் படியுங்கள்..