இந்த தொகுப்பு “அண்ணன் தம்பி பாசம் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.
- அண்ணன் தம்பி பாசம் கவிதைகள் வரிகள்
- அண்ணன் தம்பி கவிதை
- Annan Thambi Kavithai Tamil
- Annan Thambi Kavithai
அண்ணன் தம்பி பாசம் கவிதைகள் வரிகள் (Annan Thambi Kavithai Tamil)
வீட்டு பூந்தோட்டத்தில்
முளைத்த செடியிலிருந்து
கொடியின் பூக்கள் வரை
ஒன்றில் இரு வண்ணம்
அண்ணனும் தம்பியும் போல..!
அண்ணனுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும் அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
அப்பா என்று..!
அப்பா மகன் உறவு போல தான்
அண்ணன் தம்பி உறவும்..
வளர்ந்த பின் அதிகம்
பேசமாட்டோம் ஆனால்
உள்ளுக்குள் பாசம்
அப்படியே இருக்கும்..!
உன் பாசத்தை நிருபிக்க
ஆயிரம் கவிதைகள்
தேவையில்லை.. அண்ணா
என்று நீ சொல்லும்
ஒற்றை வார்த்தை.. ஆயிரம்
கவிதைகளுக்கு சமம்..!
அண்ணனோட பாசம்
தங்கச்சிக்கு மட்டும் இல்ல..
தம்பிக்கும் தான்..!
எவ்வளவு தான்
அடிச்சிக்கிட்டாலும் நமக்கு
ஒன்னுனா துடிச்சுப் போறது
அண்ணன் என்ற
உறவு மட்டுமே..!
ஆயிரம் சொந்தங்கள் எனக்காக
துடித்தாலும்.. என்னை
அன்பாக பார்த்துக் கொள்ளும்
என் அண்ணன் தான்
என் உலகம்..!
அதிகமாக பேசிக்
கொள்ளாவிட்டாலும்
அண்ணன் தம்பி பாசத்திற்கு
முன்னால் மற்ற உறவுகளின்
பாசங்கள் எல்லாம்
தோற்றுப் போய்விடும்..!
தம்பியின் கண்ணீரை
தாங்கிக் கொள்ளும் சக்தி
அண்ணன்களுக்கு
கிடையவே கிடையாது..!
அண்ணன் தம்பி உறவு என்பது
வெறும் வார்த்தைகள் அல்ல..
அதிகமாக பேசிக்
கொள்ளாவிட்டாலும் அதில்
மற்ற உறவுகளை விட
அதிகமான பாசங்கள்
நிறைந்திருக்கின்றன..!
அண்ணன் தம்பி பாசம் என்பது
பூமியில் இருக்கும் காற்று
போன்றது.. இருப்பது தெரியாது
ஆனால் என்றும்
நிறைந்திருக்கும்..!
அண்ணன் தம்பிகளின்
பாசத்தின் வெளிப்பாடு
அதிகமாக கோபமும்
சண்டையாகவும் தான்
இருக்கும்..!
சந்தோசமாக வாழ காசு பணம்
தேவையில்லை.. பாசமாக
பார்த்துக் கொள்ள அண்ணா
ஒருவன் இருந்தால் போதும்..!
ஒரு அண்ணனின் உண்மையான
அன்பை ஆயிரம் நண்பர்கள் கூட
கொடுத்து விட முடியாது..
என்பதை என்றும் வாழ்வில்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!
அன்பு காட்ட அன்னையும்..
வழி காட்ட தந்தையும்..
சண்டை போட தங்கையும்..
பாதுகாக்க அண்ணனும்..
இது போன்ற சொந்தங்கள்
ஒன்றாய் இருக்க முடிந்தால்
அது இந்த உலகின் சொர்க்கமே..!
ஆயிரம் முறை சண்டை
போட்டாலும் தம்பிக்கு
ஒரு பிரச்சனை என்றால்
உயிரையும் கொடுக்க
துணியும் உறவு
அண்ணன் மட்டுமே..!
அண்ணன் தம்பி உறவை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லை.. அதில்
ஓராயிரம் அர்த்தங்கள்
நிறைந்துள்ளன..!
தன் தம்பிக்கு தந்தையை போல
அன்பும் அரவணைப்பும்
கொடுக்கும் அண்ணன்
கிடைப்பது வாழ்வில் கிடைக்கும்
மிகப் பெரிய வரம்..!
அண்ணன் ஒருவன் இருக்க
பயம் எதற்கு.. துணிந்து செல்
நிழல் போல் உன் கூடவே
வருவான்..!
இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க…