இந்த பதிவில் “மழை பற்றிய கவிதைகள் வரிகள்” காணலாம்.
- மழை பற்றிய கவிதைகள்
- மழை கவிதை வரிகள்
- Malai Kavithaigal In Tamil
மழை பற்றிய கவிதைகள் வரிகள்
மரம் இலை துளிர் விட..
என் தேகம் முழுவதும் நனைத்திட..
வானின் கரு மேகங்களே
இடி மின்னலுடன் போர் புரிந்து
உங்கள் வியர்வை துளிகளை
சிந்துங்கள்.
அதுவரை அவளை அழகி
என்றே நினைத்தேன்..
மழை தான் அவளை பேரழகியாக
எனக்கு அடையாளம் காட்டியது.
துளி துளியாய் துடிப்புடன் துள்ளி
மகிழ்ந்தாடி வரும் மழையே..
வருக.. வருக.!
மழையில் நனைவது அழகு..
மழையின் இடையே
வெயில் பேரழகு.
மழையில் குழந்தையின்
காதித கப்பல் அழகோ அழகு.
இறைவனை நேரில்
காண முடியவில்லையே என்று
கலங்கும் கண்களுக்கு
கண்ணீரை துடைக்க அந்த இறைவனால்
அனுப்பப்பட்ட தூதுவனே மழை.!
பூமியில் பொழியும் மழை
மரங்களுக்கு எல்லாம் தாய்ப்பால்.
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்
மழை மட்டும் தன் குழந்தைக்கு
பால் ஊட்ட மறப்பதில்லை.
மழைக்கு பின் மண் வாசனை
அற்புதமான அழகு.
அடுத்த நாள் பெய்யும் மழையும்
அதனினும் அழகு.
மழை இரவின் குளிர்
அழகிற்கே அழகு.
கூரை இல்லாமல் போனதே
தெருவில் உன்னால் நனைந்தபடி
சிலிர்க்கிறேன் சளிக்கிறேன்.
நீ முத்தமிட்டதால் ஈரமானது
என் இதழ் மட்டுமல்ல
உடலோடு உயிரும் மெல்ல.
மழைத்துளி நிலத்தின்
மேனியில் படர மண்ணும்
மணமாய் மாறியதே..
தித்திக்கும் குளிர் கொஞ்சம்
தென்றல் காற்றின் ஈரம் என்னை
உரசி செல்லுதே.!
இலவசமாய் கிடைப்பதனால்
பலபேருக்கு உன்னை மதிப்பதில்லை.
அலட்சியமாய் இருந்து விட்டு
ஒரு சில மாதங்களிலே உன்னை
வேண்டி காத்திருக்கிறார்கள்.
முத்துக்களாய் இலையின்
நுனியில் இருக்கும் நீர்துளியை
தீண்டுதே என் விரலும் மெதுவாய்..
மழைக்கு ஒதுங்கும் சனங்கள் நடுவே
மயிலாய் மாறுதே என் மனமும்
இங்கே ஆடிப்பாட..!
மழையே அளவாய் அவ்வப்போது
பெய்திடு ஆசையாய்
உன்னை பார்க்கும் மக்களை
மகிழ வைத்திடு.
மழை மீது நான் கொண்ட காதலால்
பொறாமை கொண்ட இடியும்
கொஞ்சம் சத்தம் போடுதே..!
நீ இல்லாத இடத்தில்
கருகி போயின விவசாயம்..
நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
விவசாயம்.. காரணம்
நீ மழை அல்ல பிழை.
Malai Kavithaigal In Tamil
மழை நீரும் ஊற்றாய் ஓட..
எண்ணமெல்லாம் எண்ணியதோ
சிறு வயதில் விட்ட காகித கப்பலை.
வறண்ட பூமியை நீர்நிலையாய்
மாற்றினாய்..
உன்னால் இன்று சிரிக்கிறான்
விவசாயி..
உனக்காக காத்திருந்த நெற்பயிரும்
நன்றிகள் சொல்லுதே.
மேக வெடிப்பில் பூமிக்கு வந்தாய்..
சூட்டை தனித்தாய்..
ஏனோ ஏழையின் வீட்டையும்
இடித்தாய்.
கோபம் கொண்டால் வெள்ளம் ஆகிறாய்..
கர்வம் கொண்ட மனிதனை கொஞ்சம்
கெஞ்சவும் வைக்கிறாய்.
வெள்ளத்திலும் பஞ்சத்திலும் மனிதன்
மறந்த மனிதத்தை நினைவூட்டி
செல்கிறது மழை.
மண் மீது உள்ள காதலால்
மறந்து சாய்கிறாய்..
உச்சி முதல் பாதம் வரை
எனை உரசிப் பார்க்கிறாய்..
தூர நின்று நான் பார்த்தால்
குளிர் காற்றை வீசுகிறாய்.!
வண்ண வண்ண நிறம் பூசி
வானவிலாய் மிளிர்கிறாய்..
உலகத்திற்கு உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்.
மஞ்சள் நிற வெயில் கூட
உனை பார்த்து கரைகிறது..
உன் மீதுள்ள பயத்தால் தான்
சூரியனும் மறைகிறது.
வானம் மனம் குளிர்ந்து தன் உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும் “மழை”.
முதல் மழையில் சில்லென
மாறியது சூழல்..
சில மணித்துளிகள் பெய்த மழையில்
வெயிலின் வியர்வை துளிகள்.
மழைத் துளிகளாய் முதல் மழையோடு
முடிந்து போவதில்லை வானிலை..
அடுத்தடுத்து பெய்யும் மழை.!