அரசியல் தத்துவங்கள்

Arasiyal Thathuvam Tamil

இந்த பதிவில் “அரசியல் தத்துவங்கள்” காணலாம்.

  • அரசியல் தத்துவங்கள்
  • அரசியல் தத்துவம்
  • Arasiyal Thathuvam Tamil

அரசியல் தத்துவங்கள்

1.அரசாங்கத்தின் சகிக்க முடியாத
தவறுகளை எதிர்க்க வேண்டியது
ஒவ்வொரு நாட்டின்,
ஒவ்வொரு தனிப்பட்டவரின் உரிமை,
அது அவர்களின் கடமை.

2. நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு
பல வள்ளல்கள் தேவையில்லை..
ஒரு சிறந்த அரசாங்கம் உருவாகினால்
போதும் வறுமையை ஒழிக்க முடியும்.

3. மனித இனம் தீமைகளில் இருந்து
விடுதலை பெற வேண்டுமானால்..
உண்மையான நேர்மையான
அரசியல்வாதிகள் நாட்டின் ஆட்சிக்கு
வர வேண்டும்.

4. நம் பழைய செருப்பை தைப்பதற்கு
அந்தத் தொழிலை நன்றாய் பழகிய
தொழிலாயிடமே கொடுக்கிறோம்.
ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை
பொய்யாக பேசி ஓட்டைப் பறிக்கும்
கூத்தாடிகளிடம் கொடுக்கிறோம்.

5. நம்மவர்கள் சிரிப்பதற்கு மூலகாரணமே
அரசாங்கம் தான்.
அரசாங்கம் மட்டும் இல்லையென்றால்
நம் நாட்டில் சிரிப்பதற்கு
ஒன்றுமே இல்லை.

6. யாரிடம் தத்துவ ஞானமும்
தலைமை பண்பும் அறிவுத்திறனும்
இருக்கிறதோ அவரிடம் ஆளும் அதிகாரம்
வழங்கப்பட வேண்டும். அல்லது
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு
மேற்கொண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

7. யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்..
அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாதயுத்தம்.

8. உங்கள் அரசாங்கம் தகுதியுடன்
இருந்தால் மட்டுமே மதியுங்கள்..
ஆனால் உங்கள் நாட்டை என்றும்
நேசியுங்கள்.!

9. ஒரு மகத்தான புரட்சி இயக்கத்திற்கு
வழிகாட்டும் எந்த ஒரு
அரசியல் கட்சியும் புரட்சிகர தத்துவம்,
வரலாற்று அறிவு,
நடைமுறை இயக்கம் பற்றிய ஓர்
ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றை
பெற்றிராவிட்டால்..
அதை வெற்றிக்கு வழிநடத்துவது
சாத்தியமாகாது.

10. எண்ணங்களை சம்பவமாக்குவது
அரசியல்.

11. சமுதாயத்தில் நல்ல கருத்து
உருவாகிவிட்டால்..
அதன் பிறகு தீய அரசாங்கம்
ஏற்பட முடியாது..
ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது.

12. ஆளத்தெரியாதவன் கையில் ஆட்சி..
வலிமை தெரியாதவன் கையில்
வாக்குரிமை.

Arasiyal Thathuvam Tamil

13. புரட்சி தேவையில்லை என்றால்..
புரட்சியாளனுக்கு வாக்களி..
விழித்தெழு.!
தமிழை.. தமிழனை.. தமிழ்நாட்டை..
வளர்த்தெடுக்க.!

14. சுயமரியாதை உள்ளவர்கள்
ஆண்ட தேசத்தை..
கோழைகளையும், நரிகளையும்
ஆள விடாதீர்கள்.

15. உழவும், உழவனும் செத்து போவதை
எமனும் விரும்பமாட்டான்..
எமனை விட கொடியவன்
இந்த அரசியல்வாதி.

16. பணம் வைத்து ஊதியம் செய்யும்
ஊடகங்கள் ஒருபுறம்..
ஆட்சி ஆசைக்காக அரசியல்
சந்தர்ப்பம் பேசும்..
உயிர் பிணங்கள் மறுபுறம்.

17. மக்களின் எண்ணங்களை
பிரதிபலிப்பவனே
உண்மையான தலைவன் ஆகிறான்.

18. அரசியலை பலத்தால் உன்னை
அடக்க நினைத்தால்..
நினைவில் வைத்துக்கொள்
அவர்களால்
உன் தற்காலிக வெற்றியை மட்டுமே
அடக்க முடியும்..
உன் திறமையை அழிக்க முடியாது.

19. அரசியல் என்பது
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது..
தேர்தல் என்பது நல்ல கொள்ளையரை
மக்களே தேர்ந்தெடுப்பது.

20. அரசியல் என்பது மிக மிகதேவையானது
அதை கீழ்த்தனமான அரியல்வாதிகளிடம்
விட்டுவிடக் கூடாது.

21. அரிசி என்றாலும் அரசியல் என்றாலும்
களையெடுப்பது அவசியம்.

22. அரசியல் என்ற குளத்தில் மூழ்கின்றது
ஏழைகளின் உண்மைகள்.

23. அரசியலில் பிழை செய்வோரை
அறமே கொல்லும்..
இக்கூற்று தவறிழைத்த தலைவனுக்கு
மட்டுமல்ல, தவறான தலைவனை
தேர்ந்தெடுக்கும் நமக்கும்தான்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal Tamil

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்