பிளேட்டோ தத்துவங்கள்

Plato Quotes In Tamil

பிளேட்டோ தத்துவங்கள் (Plato Quotes In Tamil) : சாக்ரடீஸின் மாணவரும் அரிஸ்டாட்டிலின் குருவுமான சிறந்த கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ ஆவர்.

இவர் அரசியல், கல்வி, வாழ்க்கை, ஞானம் என பலவற்றில் தத்துவக்களை கூறியுள்ளார்.

பிளேட்டோ தத்துவங்கள்

யாரிடம் தத்துவ ஞானமும், தலைமைப் பண்பும், அறிவுத்திறனும் இருக்கிறதோ அவரிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் அல்லது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவருக்கு மேற்கொண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.

ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதுபோல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.

நாம் பார்க்கும் உலகம் வேறு, நம்மால் அறியப்படும் உலகம் வேறு.

பேராசையை விலக்குங்கள் உங்கள் சொத்து செழிப்படையும்.

ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்துகொண்டே போகும்.

வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனைக் கோழையாக்கிவிடும். ஒழுக்கமில்லாத வீரம் முரடனாக்கிவிடும். இரண்டும் இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.

கலைகள் அனைத்திலும் அதி உன்னதமான கலை மனிதன் எப்படி இருக்க வேண்டும், எதை தேட வேண்டும் என்பதைப் போதிக்கும் கலையே ஆகும்.

மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

நாட்டுப் பற்றைவிட நெருக்கமான அன்பு வேறில்லை.

அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.

கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

கடமையைச் செய்யாது உரிமையைக் கேட்டால் அது கலவரம்! உரிமையில்லாது கடமையைச் செய்தால் அது அடிமைத்தனம்!

துன்பம் வந்த சமயத்தில் நாம் நிதானம் தவறி விடக்கூடாது. பொறுமையுடன் இருக்க வேண்டும்.

பேராசையை விட்டு உன்னைக் காத்துக் கொள், நீ வளமாய் வாழ்வாய்.

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!

அநீதி இழைப்பவன், அநீதிக்கு ஆளானவனைவிட அதிகமாகத் துயரடைவான்!

Read More Tamil Quotes.

இரு வரி தத்துவங்கள்

ஒரு வரி பொன்மொழிகள்