மனம் பற்றிய தத்துவங்கள்

Manam Quotes In Tamil

இந்த பதிவில் “மனம் பற்றிய தத்துவங்கள்” பார்க்கலாம்.

  • மனம் பற்றிய தத்துவங்கள்
  • மனம் தத்துவம்
  • Manam Quotes In Tamil

மனம் பற்றிய தத்துவங்கள்

1.மனம் நேர்மையாக.. ஒழுக்கத்துடன்.. தூய்மையாக.. நம்பிக்கை மிக்கதாக இருந்தால் நாம் கடவுளை தேடி ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.!

2. மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை.. விழிப்பு நிலையில் மட்டும் அல்ல.. உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதே இல்லை.

3. நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனம் தான்.. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

4. மனம் எதை எண்ணுகிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது.. நல்லவற்றை மட்டுமே மனிதன் மனதில் எண்ண வேண்டும்.

5. தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்.. ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.

6. இறைவனை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எவரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும் கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும்.

7. மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.

8. அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.

9. நோயால் உடல்நலம் குன்றுவது போல.. தீய எண்ணங்களால் மனநலம் குன்றுகிறது.

10. மனதில் கடவுளை நினைத்து அறிவு என்ற தீபம் ஏற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான சிந்தனைகள் புகுவதில்லை.

11. மனதில் உண்டாகும் அற்ப சிந்தனைகளைநீக்கினால் மனதிலுள்ள தீய நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.

Manam Quotes In Tamil

12. நல்ல உள்ளத்துக்கு நல்லதாகவும், கெட்டஉள்ளத்துக்கு கெட்டதாகவும், தெய்வீக சிந்தனை கொண்ட மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.

13. உள்ளத்தில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே.. கல்லான இதயம் கூட கரையும்.. அன்பு மழையாய் பொழியும் போது.!

14. ஒரு ஆணை உண்மையாக நேசிக்கும் எந்த ஒரு பெண்ணாலும் இன்னொரு ஆணிடம் மனம் விட்டு பேச முடியாது.

15. பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!

16. வானிலை மாற்றத்தை விட மிக வேகமாக இருக்கும் மனிதனின் மனநிலை மாற்றம்.

17. பார்க்கும் அனைத்திலும் கண்கள் ஆசை வைத்தாலும்.. மனம் அதில் சிறந்ததை தேடி தான் ஆசை வைக்கிறது.

18. சந்தோஷமும் கவலையும் மாறி மாறி வந்தால் தான் நம் மனது பக்குவப்படும் சந்தோஷத்தில் ஆடவும் கூடாது. கவலையில் வாடவும் கூடாது.

19. அமைதியாக இருப்பவர்களை கோழை என்று எண்ணி விடாதீர்கள்.. தேவையற்ற வார்த்தைகளை விடாமல் அமைதியாக கடந்து செல்வதற்கு அதிக மனஉறுதி தேவை.

20. யாரும் உடன் வரப்போவதில்லை என்ற போதிலும் எல்லோர் பின்னாலும் செல்லத் துடிக்கிறது பேரானந்தம் தேடும் பிள்ளை மனம்.

21. அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள். பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

22. பசி சென்ற பின் சாப்பிட அழைப்பதும்.. மனம் உடைந்த பின் மன்னிப்பு கேட்பதும் ஒன்று தான் இரண்டுமே பயன் அற்றது.

Read More Tamil Quotes.

தினம் ஒரு பொன்மொழி

கடவுள் பற்றிய பொன்மொழிகள்