நான் ஒரு பாடநூல் கட்டுரை

Paadanool Katturai In Tamil

இந்த பதிவில் “நான் ஒரு பாடநூல் கட்டுரை” என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 150 சொற்களுடன் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.

மாணவர்களின் கல்வியில் பாடநூல் என்பது மிக முக்கியமானது. அறிவை போதிப்பதில் பாடநூல்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 1

துள்ளி விளையாடி திரிகின்ற மாணவ பருவத்திலே பள்ளியை நோக்கி வரும் மாணவர்களுக்கு நல்ல பாடங்களை புகட்டுகின்ற பாட புத்தகங்களில் ஒரு தமிழ் பாடநூல் நானாவேன். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானதாகும்.

அதுவே அவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கின்றது. அந்த வகையில் அவர்கள் புதிய வகுப்பில் சேர்கின்ற போது ஒரு புதிய புத்தகமாக அவர்களது கையில் நான் கிடைக்கும் போது அவர்கள் அடைகின்ற ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

தினம் தோறும் என்னை காலையிலும் மாலையிலும் எடுத்து ஆசையோடு படிப்பார்கள். என்னிடத்தில் காணப்படுகின்ற அழகிய கதைகள், பாடல்கள், அவற்றோடு கூடிய வண்ண வண்ண படங்கள் இவை அனைத்தும் மாணவர்களை நன்கு ஈர்க்கும்.

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற பழமொழிக்கு இணங்க சிறுவர்கள் சிறுவயதில் கற்று கொள்கின்ற கல்வி தான் அவர்களது வளர்ச்சிக்கும் அவர்களது எதிர்காலத்துக்கும் உதவியாக இருக்கும் என்பதனால் நான் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடநூலாக நல்லறிவினை புகட்டுவேன்.

மாணவர்கள் அனைவரும் நன்றாக வாசித்து புரிந்து கொள்ள கூடிய அழகான எளிய மொழிநடையில் நான் காணப்படுகின்றேன். பார்ப்பதற்கு கவர்ச்சியான வடிவமுடைய என்னை குழந்தைகள் விருப்பத்தோடு படிப்பார்கள்.

அறியாமை என்கின்ற இருளை போக்கும் ஓர் அற்புதமான வழியாகிய கல்வியை மாணவர்களிடத்து கொண்டு போய் சேர்க்கின்ற ஒரு சிறந்த ஊடாகமாக ஒரு நல்லாசிரியனை போலவும் உற்ற நண்பனை போலவும் இருந்து நான் அவர்களுக்கு உதவியாக இருப்பேன். இதுவே ஒரு பாடநூலாக எனக்கு கிடைத்த பெருமையாக இருக்க முடியும்.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 2

மாணவ பருவம் தான் ஒவ்வொரு மாணவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்ற முக்கியமான காலப்பகுதியாகும். அந்த காலப்பகுதியில் அவர்களது கல்வி கண்களை திறக்கும் ஒரு திறவுகோலாக நான் இருப்பேன்.

ஆம் நான் ஒரு பாடபுத்தகம். மாணவர்களுக்கு நான் ஒரு வணக்கத்துக்கு உரியவனாவேன். ஏன் என்றால் கல்வியை கடவுளுக்கு நிகராக பார்ப்பார்கள்.

கல்வியை கற்க பாடசாலையை நோக்கி ஓடி வருகின்ற மாணவர்கள் ஒரு புத்தக பையில் என்னை அழகாக அடுக்கி வைத்து கொண்டு ஆரவாரத்துடன் என்னை சுமந்து வருவார்கள். தமது அறிவையும் சிந்தனைகளையும் வளர்க்கும் வாழ்க்கைக்கான பாடங்களை என்னிடம் இருந்து கற்று கொள்கிறார்கள்.

என்னை தலைகுனிந்து படிக்கின்ற மாணவர்களுடைய வாழ்க்கை தலைநிமிரும் என்பதனால் என்னை பக்குவமாக கையாளுவார்கள். என்னுள் பலவகைகள் உள்ளன கணிதம், தமிழ், விஞ்ஞானம், புவியியல், வரலாறு, சமயம், ஆங்கிலம் என்று மாணவர்களது கல்வி ஆண்டுகளை பொறுத்து நான் வேறுபடுகின்றேன்.

என்னை சரியாக கையாண்டு ஆசிரியர்கள் கற்று கொடுக்கின்ற விடயங்ளை நன்றாக கற்று கொள்கின்ற மாணவர்களுக்கு நான் உயர்வான பலன்களை கொடுப்பேன். அவர்கள் வாழ்வில் முன்னேறி செல்லவும் இந்த சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்கவும் அறிவு கண்களை நான் திறந்து விடுவேன்.

அதைவிடுத்து என்னை மதிக்காது என்னை படிக்காது விடுபவர்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். எனவே மாணவர்களே என்னை மிகவும் சரியாக பயன்படுத்தி உங்களது எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

“பிச்சைபுகினும் கற்கை நன்றே” என்ற வாக்கிற்கிணங்க கடினமாக முயன்று கல்வி கற்று உங்கள் வாழ்வில் உயர நான் உங்களுக்கு துணையாக இருப்பேன்.

You May Also Like:

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை

எனது பாடசாலை அழகானது கட்டுரை