நத்தார் பண்டிகை கட்டுரை

கிறிஸ்துமஸ் பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “நத்தார் பண்டிகை கட்டுரை” பதிவை காணலாம்.

கிறிஸ்தவ மக்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பெரிதாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை முக்கியமானது.

நத்தார் பண்டிகை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கிறிஸ்துமஸ் திருவிழா
  3. நத்தார்ப் பண்டிகை முதல் வாழ்த்து மடல்
  4. நத்தார்க் கொண்டாட்டம்
  5. கிறிஸ்துமஸ் தாத்தா
  6. முடிவுரை

முன்னுரை

பண்டிகைகள் சமயத்துடன் தொடர்புடையவை ஆகும். ஒவ்வொருவரும் தமது சமய நம்பிக்கைக்கு ஏற்ப கொண்டாடும் அவர்களது சமய தெய்வங்கள் அல்லது தேவதூதர்கள் அல்லது⸴ புனிதர்களின் சிறப்பு நாட்களைக் குறிப்பதே பண்டிகைகளாகும்.

இவ்வகையில் கிறிஸ்தவ சமய கடவுளாகக் கருதப்படும் தியாகத்தின் திருவுருவமான இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாளே நத்தார் திருநாள் ஆகும்.

உலகில் கிறிஸ்தவ மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த புனித பண்டிகை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கிறிஸ்துமஸ் திருவிழா

யூத இன மக்களும்⸴ வேறு சில இன மக்களும் பல மூட நம்பிக்கைகளையும்⸴ சுயநலத்தையும் கொண்டிருந்ததால் சமுதாயம் பல இன்னல்களுக்கு ஆளானது.

இக்கொடுமையை ஒழிக்கும் பொருட்டு ஜெருசலேம் நகரில் கன்னி மரியாளுக்கு மகனாகப் பிறந்தார் குழந்தை இயேசு.

மக்கள் மத்தியில் அன்பைப் போதித்து பல நற் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்து சமுதாயத்தைச் சீர்ப்படுத்தினார்.

நத்தார்ப் பண்டிகை முதல் வாழ்த்து மடல்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை உருவாக்கினார் எனும் பெருமையைப் பெறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமய உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினார்.

ஆயிரம் பேருக்கு வாழ்த்தாக வாழ்த்து மடலை அனுப்பினார். இதன் பின்னரே நத்தார் தினத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது.

நத்தார்க் கொண்டாட்டம்

இந்த நாளன்று மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளப் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வது⸴ வாழ்த்துச் சொல்வது என்பன இடம்பெறும் இரவு⸴ பகல் கிறிஸ்தவர்கள் பாடல்களை இசைத்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் பல வண்ண விளக்குகளை ஒளிர விடுகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெறும். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இனிப்பை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.

கிறிஸ்துமஸ் தாத்தா

முதன் முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ் ஆவார். கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான்.

கிறித்துமஸ் தாத்தா இனிப்புகளைக் குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.

அமெரிக்கா தான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார்.

உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.

முடிவுரை

பிறருக்காக பல தியாகங்களைச் செய்த அற்புதமான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளானது அன்பையும்⸴ தியாகத்தையும் போதிக்கும் அற்புத நாளாகும். இவர் காட்டிய வழியில் நாமும் பயணித்து அனைவருக்கும் அன்பு செலுத்தி மகிழ்வோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை

கருணை பற்றிய கட்டுரை