இந்த பதிவில் “தரம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
தரம் என்பது அனைத்திலும் இருக்க வேண்டும். பொருட்களோ அல்லது சேவையோ சிறந்த தரம் எப்போதும் சிறந்த பலனை தரும்.
தரம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தரம் பற்றிய விளக்கம்
- வாழ்க்கைதரம்
- கல்வி தரம்
- உணவு தரம்
- தரம் பற்றிய விழிப்புணர்வு
- முடிவுரை
முன்னுரை
அன்றாடம் எமது வாழ்வில் அதிக தடவைகள் நாம் தரம் பற்றி அதிகம் பேசிக்கொள்கின்றோம் ஏன் என்றால் சிறந்த விடயங்களுக்கு எமது சமூகத்தில் அதிக முக்கியத்துவமானது வழங்கப்படுகின்றது.
எல்லா விடயப்பரப்புக்களிலும் சிறந்த விடயங்களை பெற்று கொள்ள வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தனி மனிதர்களுதும் விருப்பமானதாக இருக்கும் அந்தவகையில் இந்த கட்டுரையில் தரம் பற்றிய விளக்கம், வாழ்க்கை தரம், கல்வி தரம், உணவு தரம் போன்ற விடயங்களையும் தரம் என்கின்ற விடயம் தொடர்பாக எமது புரிதல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன தொடர்பாகவும் நோக்க முடியும்.
தரம் பற்றிய விளக்கம்
எமது அன்றாட வாழ்வில் எமக்கு பல்வேறான தேவைகள் இருக்கின்றன. நாம் அவற்றை பூர்த்தி செய்வதற்காக செல்கின்ற போது அந்த பொருட்களினுடையதோ அல்லது அந்த சேவையினுடையதோ தன்மைகளை நிச்சயமாக ஆராய்வோம்.
அது சிறந்த விடயமா அல்லது அதன் விளைவுகள் எவ்வாறானது பயனுடையதா அல்லது பயனற்றதா என பல வினாக்களை நாங்கள் எழுப்பி அதனை பல மனிதர்களிடம் விசாரித்த பின்பு எது தரமானது என்கின்ற முடிவுகளை நாம் எடுக்கின்றோம்.
அனேகமாக அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விடயங்களை நாம் தரம் என்று எண்ணி திருபத்தியடைகின்றோம். அவற்றை தான் பெற்று கொள்ள ஆர்வமும் காட்டுகின்றோம்.
வாழ்க்கை தரம்
ஒவ்வொரு மனிதர்களும் தாம் வாழ்கின்ற வாழ்வை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் வாழ்வதனையே விரும்புகின்றார்கள். தமது அடிப்படை தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொண்டு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதனை வாழ்க்கை தரம் என்று அழைக்கின்றார்கள்.
எமது நாடுகளோடு ஒப்பிடுகையில் அபிவருத்தி அடைந்த நாடுகள் உயர்வான வாழ்க்கை தரத்தை கொண்டு காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக நோர்வே, சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.
கல்வி தரம்
ஒரு நாட்டிலே வாழ்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த கல்வியானது அந்த அரசாங்கத்தினால் தரமானதாக வழங்கப்பட வேண்டும்.
ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான முறையில் மாணவர்கள் கல்வியினை பெற்று கொள்ள முடிவதனை கல்வி தரம் என்று அழைக்கின்றார்கள்.
சிறந்த கல்வி தரம் உடைய சமூகம் ஆக்கபூர்வமான ஆரோக்கியமான ஒரு சமூகமாக விளங்குவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
உணவு தரம்
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆரோக்கியமான உணவு என்பது கிடைக்க வேண்டும். எந்த பக்க விளைவுகளும் இல்லாத தூய்மையான உணவுகள் தான் தரமான உணவுகள் என அழைக்கின்றனர்.
எங்களுடைய நாடுகளில் அதிகம் கலப்படம் மற்றும் நஞ்சாக்கம் அதிகமான உணவுகளை அதிகம் உட்கொள்வதனால் பல நோய்கள் உருவாகின்றன. உணவு தரமாக கிடைப்பதனால் எமது ஆரோக்கியமானது மேலும் மேம்படுகின்றது.
முடிவுரை
எம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பெற்று கொள்கின்ற அனைத்து விடயங்களிலும் தரம் பற்றிய தெளிவான அறிவினையும் ஆர்வத்தினையும் வளர்த்து கொள்வதோடு தரமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக மிகவும் விழிப்புணர்வோடும் செயற்பட வேண்டும். இது எமது சமூகத்துக்கு மிகவும் அடிப்படையான ஒன்றாக உள்ளது.
You May Also Like :