சுற்றுலா வளர்ச்சி கட்டுரை

Sutrula Katturai In Tamil

இந்த பதிவில் “சுற்றுலா வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

பல நாடுகளில் வெளிநாட்டு செலாவணி ஈட்டி தரும் முக்கிய துறையாக சுற்றுலா துறை காணப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் தங்களது சுற்றுலா துறைகளை அபிவிருத்தி செய்ய அதிக முனைப்பு காட்டுகின்றன.

சுற்றுலா வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுலா எனப்படுவது
  3. சுற்றுலாவின் பயன்கள்
  4. இன்றைய உலகும் சுற்றுலாவும்
  5. முடிவுரை

முன்னுரை

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வாழ்வின் அழகான பகுதியாக நாங்கள் சுற்றுலாக்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். அழகான பயணங்கள் எப்போதும் எம்மை மகிழ்விப்பனவாயும் பல புதிய விடயங்களை எமக்கு கற்று தருவனவாயும் அமைகின்றது.

மனிதன் வாழ்வே ஒரு நதி போல நகர வேண்டும் ஓர் இடத்தில் தேங்கி நிற்பதனால் வாழ்வில் புதிய விடயங்களை கற்று கொள்ள முடியாமல் போய்விடும். அந்தவகையில் இக்கட்டுரையில் சுற்றுலா துறை பற்றியும் அதனது வளர்ச்சி நிலைகள் பற்றியும் காண்போம்.

சுற்றுலா எனப்படுவது

சுற்றுலா எனப்படுவது நாம் வாழ்கின்ற இடத்தை விட்டு வெளியே சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளையோ அல்லது இதர புதிய அனுபவங்களை பெற்று கொண்டு வருகின்ற பயணத்தை குறிக்கின்றது.

இது உள்நாட்டுக்குள்ளேயோ அல்லது வெளிநாட்டிலேயோ இடம்பெறும் புதிய இடங்களுக்கு சென்று பல அழகான வித்தியாசமான சூழல்களை காண்பது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் அமைகின்றது.

இதனால் தான் அதிகளவான மக்கள் சுற்றுலாவில் ஈடுபட அதிகம் விருப்பம் காட்டுகின்றனர்.

சுற்றுலாவின் பயன்கள்

இந்த சுற்றுலா நடவடிக்கையானது மனிதர்களுக்கு பல விதமான நன்மைகளை தருகின்றது. தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதனாலும் வேலை செய்வதனாலும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகின்றது.

மற்றும் நகரங்களில் வாழ்கின்ற மக்கள் வேலை நெருக்கடி மற்றும் இயந்திரங்களின் இரைச்சலுடன் வாழ்வதனால் அவர்கள் அவற்றில் இருந்து வெளியேறி அழகான அமைதியான இடங்களுக்கு பயணம் செய்வதனால் மன அமைதியானது கிடைக்கின்றது.

மற்றும் பல புதுமையான அனுபவங்களும் கிடைக்கின்றது. வாழ்க்கையிலே பணம், புகழ் என்பவற்றை தாண்டி இவ்வகையான புதுமையான அனுபவங்கள் தான் மிகுவும் பெறுமதியானவையாகும்.

இந்த மிக பெறுமதியான அனுபங்களை சுற்றுலாவானது வழங்குகின்றது. சுற்றுலா துறையாது இன்றளவில் பல நாடுகளின் பிரதான வருவாய் ஈட்டி தருகின்ற துறையாக இருக்கின்றது.

மற்றும் அதிகளவான மக்கள் சுற்றுலா துறையினை நம்பி தமது தொழில்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய உலகும் சுற்றுலா துறையும்

இன்றைய உலகமானது பல வழிகளிலும் வெகுவாக மாறியுள்ளது. உலகத்தின் எந்த மூலையிலும் ஓர் அழகான இடம் அமைந்திருந்தாலும் அந்த இடங்களை நோக்கி மக்கள் குவிகின்றனர்.

சமூகவலைத்தளங்கள் சுற்றுலா துறையினை மேலும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி வருகின்றன.

வெளிநாட்டு பயணிகள் உலகமெங்கும் பயணிக்க கூடிய வகையில் அதி நவீன போக்குவரத்து வசதிகள் இன்று வளர்ச்சி கண்டுள்ளன.

ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் சுற்றுலா துறையினை விருத்தி செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்தியாவிற்கு வருடம் ஒன்றிற்கு பல லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதன் மூலமாக அதிகளவான அந்நிய செலவாணியினை ஈட்டிகொள்ள முடிகின்றது.

முடிவுரை

பல வழிகளிலும் நோய் தொற்றுக்களாலும் பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற இன்றைய உலகமானது சர்வதேச சுற்றுலா துறையில் சற்று வீழ்ச்சியினை காட்டியிருந்தாலும் இனி வரும் காலங்களில் சுற்றுலா துறையானது மேலும் வளர்ச்சி பெறும்.

எமது வாழ்வானது குறுகியது மற்றும் நிலையற்றதாகும் ஆகையினால் முடிந்த வரைக்கும் சுதந்திரமாக இந்த அழகிய உலகை சுற்றி வந்து இரசிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இந்த சிந்தனையானது மக்கள் மத்தியில் இன்று அதிகம் வளர்ச்சியடைந்து வருவது வரவேற்க தக்க விடயமாகும்.

You May Also Like:

கொரோனாவும் கல்வியும் கட்டுரை
நவீன விவசாயம் பற்றிய கட்டுரை