இந்த பதிவில் “சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
பல போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு சுதந்திரமடைந்த இந்தியா அதன் பின் ஒரு சுதந்திர நாடாக பல துறைகளிலும் வளர்ச்சி கண்டு முன்னேறி வருகின்றது.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னரை
- கல்வி வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சி
- போக்குவரத்து வளர்ச்சி
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
- முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திரத்திற்காக பலதரப்பட்ட போராட்டங்கள்⸴ போர்கள் இடம் பெற்றன இதன்பின் இந்தியா பிரித்தானியரிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.
அன்றிலிருந்து இன்றுவரை பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதால் பல துறைகளிலும் இந்திய தேசம் வளர்ச்சி அடைந்துள்ளது.
உலக வல்லரசு நாடுகளுடனான நட்புறவு⸴ பிராந்திய உறவு எனத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்தியாவும் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளது.
பொருளாதாரம்⸴ கல்வி⸴ தொழில்நுட்பம்⸴ பாதுகாப்பு⸴ அறிவியல்⸴ போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. சுதந்திரத்தின் பின் இந்தியாவின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கல்வி வளர்ச்சி
சுதந்திரமடைந்த ஆண்டான 1947களில் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் 26% வீதத்தினர் மட்டுமே இதனை அடுத்து விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்த மத்திய கல்வி அமைச்சர் மௌலானா மற்றும்⸴ அப்துல் கலாம் போன்றோர்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் அக்கறை காட்டியவர்கள் ஆவர்.
1948இல் ஆங்கிலேயப் பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி வளர்ச்சி கண்டது. தற்போது கல்வியறிவு பெற்றோர் 76% வீதமாக உயர்வடைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
சுதந்திரத்தின் பின் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. முதல் பிரதமர் நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை பல பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிந்து உள்ளனர்.
சுற்றுலாத் துறை⸴ தொழில் துறை⸴ விவசாயம்⸴ போக்குவரத்து போன்ற பல துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளது.
போக்குவரத்து வளர்ச்சி
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய நாட்டின் சாலை வசதி பல மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது மூன்று லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் இருக்கின்றன.
சுதந்திரம் பெற்ற போது மொத்த ரயில்வே 53 ஆயிரம் கிலோ மீட்டர். இப்பொழுது 63 ஆயிரத்து 140 கிலோ மீற்றர்கள் நீளம் ஆகும். பல சர்வதேச விமான நிலையங்கள்⸴ துறைமுகங்கள் போன்றனவும் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
இளைஞர்களது பங்களிப்பு நாட்டின் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிகின்றது. இளைஞர்களது முன்னேற்றத்துக்கேற்ப நாட்டின் வளர்ச்சி அதிகமாகின்றது. தொழிற் துறைகள் பலவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.
அறிவியல் தத்துவம்⸴ விளையாட்டு என அனைத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு முதன்மையானதாகும். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் அத்தகையவர்கள் தாய் நாட்டிற்காகப் பாடுபட வேண்டும்.
முடிவுரை
இந்திய நாடு சுதந்திரத்தின் பின் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் மறுபுறத்தில் லஞ்சம்⸴ ஊழல்⸴ வன்முறை என்பனவும் அதிகம் உள்ளமை வருத்தத்துக்கு உரியதாகும்.
மனித வளம் கொண்ட இந்திய நாட்டில் இத்தகைய சீர்கேடுகள் சமூகத்தை மட்டுமல்லாது நாட்டின் வளர்ச்சியிலும் சவாலாக மாறியுள்ளன. இவை களையப்பட வேண்டும்.
அப்போதுதான் இந்தியா வல்லரசாக மாறும். இந்தியப் பிரஜையாகிய நாம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காளராக மாறுவோம். பாரத தேசத்தின் உச்ச வளர்ச்சியைக் காண்போம்.
You May Also Like:
விடுதலைப் போரில் பகத்சிங் கட்டுரை