முல்லைப் பெரியாறு அணை கட்டுரை

Mullai Periyar Anai Katturai In Tamil

இந்த பதிவில் “முல்லைப் பெரியாறு அணை கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய அணையாக இது காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி பஞ்சத்தை போக்கி விவசாயம் செழிக்க உறுதுணையாக இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. முல்லைப் பெரியாறு அணை உருவான பின்னணி
  3. ஒப்பந்தம்
  4. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை
  5. தீர்வுகள்
  6. முடிவுரை

முன்னுரை

பெரியாற்று நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை தான் முல்லைப் பெரியாறு அணையாகும். தமிழக மக்களின் வாழ்வியலில் மிகப்பெரும் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை வளப்படுத்தும் பெரும் பணியினை பெரியாறு அணைக்கட்டு செய்து வருகின்றது.

பல நூற்றாண்டுகள் கடந்தும் அசையாது நின்று பொறியியல் துறையின் சிறப்பான படைப்பாக காட்சியளிக்கின்றது. இக்கட்டுரையில் பெரியாறு அணைக்கட்டுப் பற்றி காண்போம்.

முல்லைப் பெரியாறு அணை உருவான பின்னணி

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உணவுப் பஞ்சம் நிலவியது இதைக் கண்ட முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி அவர்கள் 1789 ஆம் ஆண்டு வல்லுநர் குழுவை அமைத்து ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பும் சாத்தியம் பற்றி ஆராய்ந்தார்.

வல்லுநர் குழுவும் சாத்தியம் எனக் கூறியது. எனினும் செலவு அதிகம் என்பதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

1782 இல் மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் தலைமையில் பல தடைகள்⸴ சவால்கள்⸴ போராட்டங்களைக் கடந்து 1895ல் அணை கட்டும் பணி முற்றுப் பெற்றது.

ஒப்பந்தம்

பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பு 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசுக்கும்⸴ சென்னை மாகாண ஆங்கிலேய அரசுக்கு இடையே குத்தகை ஒப்பந்தம் கச்சாத்திடபட்டது. இதன்படி ஒப்பந்த காலம் 999 வருடங்களாக குத்தகைக்கு விடப்பட்டது.

சுமார் 8000 ஏக்கர் நிலத்துக்கு குத்தகையாக பரப்புக்கு 5% படி வருடத்திற்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நிலத்திற்கு வழியாக வரக்கூடிய நீர் அனைத்திற்கும் உரிமையுண்டு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை

கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையிலான பிரச்சனை முல்லை பெரியாறு அணையை மையப்படுத்தியதே ஆகும். இப் பிரச்சினை பல ஆண்டு காலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

பெரியாறு அணை கேரள மாநில எல்லைக்கு உட்பட்டு காணப்பட்டாலும் அதன் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்த அணை காலாவதியாகி விட்டது⸴ எனவே புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசியல் கட்சிகளும் அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசும் முரண்பட்டு பல பிரச்சனைகள் காணப்படுகின்றன.

தீர்வுகள்

நீர்ப் பிரச்சினைகள் சம்பந்தமான உலக வழிகாட்டி நெறிகளின் படி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். கேரளாவின் உணவுத் தேவை தமிழக விவசாயத்தினால் தீர்க்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு இப்பிரச்சினையை கேரள அரசு தீர்த்துக்கொள்ள முன்வரலாம்.

கேரள மக்கள் 2500 வருட காலமாகத் தமிழர்களுடன் இணைந்து பயணம் செய்துள்ளமை வரலாற்று சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை உணர்ந்தும் புரிந்து கொண்டும் இரு மாநில அரசும் செயற்பட வேண்டும். எனவே அறிவதும்⸴ உணர்வதுமே தீர்வுக்கான வழியாகும்.

முடிவுரை

இன்றைய உலகில் அதிக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனை நீர்ப் பிரச்சினை ஆகும். மனிதனின் வாழ்வாதாரத்திற்கு நீர் மூலாதாரமாகும். புவி வெப்பமடைதல்⸴ மழை இன்மை போன்ற பல இயற்கைப் பிரச்சினைகளால் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு மனித குலம் செயற்படல் வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் போதுதான் நாட்டின் பலம் கூடும் என்பதனை மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும்.

You May Also Like :

மழைநீர் சேகரிப்பு கட்டுரை

நீர் மேலாண்மை கட்டுரை