சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்

சிக்கனம் சிறுசேமிப்பு கவிதை

இந்த பதிவில் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான “சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்” பற்றி பார்க்கலாம்.

  • சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்
  • சிக்கனம் சிறுசேமிப்பு கவிதைகள்

சேமிப்பு பொன்மொழிகள் (சிக்கனம்)

இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கை கொடுக்கும்.
அடுத்தவரை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம் போன்றது.

நேரத்தையும் பணத்தையும்
வீணாக்காதீர்கள்..
இரண்டையும் சிறப்பாக
பயன்படுத்துங்கள்..!

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட
வாழ்க்கைக்கு சேமிப்பு
மிக அவசியம்.

சேமிப்பு செழித்து வளர
சிறந்த வழி சிக்கனம்.

செலவழித்த பின் எஞ்சியதை
சேமிக்க வேண்டாம்.
சேமித்த பின் எஞ்சியதை
செலவிடுங்கள்.

என்றும் நினைவில் வைத்திருங்கள்
சேமிப்பு என்பது முதலீட்டின்
முன்நிபந்தனை.

பணம் உங்களை வந்தடைய முன்
அதை ஒருபோதும்
செலவிட வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள்
கடன் வாங்கும் போது
எதிர்கால சுயத்தை
கொள்ளையடிக்கிறீர்கள்.

சிறிய செலவுகளில் கவனம்
கொள்ளுங்கள். ஒரு சிறிய கசிவு
மிக பெரிய கப்பலை மூழ்கடிக்கும்.

வீண் செலவுகளை தவிர்த்து
சேமியுங்கள் அது உங்களை
காப்பாற்றும்.

பணக்காரன் ஆக வேண்டுமா.?
அதற்கு பணத்தைக்
குவிக்க வேண்டியது இல்லை.
தேவைகளை குறைத்துக்
கொள்ளுங்கள்.

ஆடம்பர செலவு என்பது
தரித்திரத்தை விலை கொடுத்து
வாங்குவதாகும்.

சம்பாதிப்பவனை விட
சேமிப்பவனே சிறந்தவன்.

சேமிப்பை உதாசீனம் செய்பவன்
தன் வாழ்வில் ஒருநாளும்
செழிமையை கொண்டுவர
முடியாது.

சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம்
செல்வந்தன் ஆவான்.

நல்ல குடும்பம் என்பது
வரவுக்கு மீறிய செலவு
செய்யாமல் இருப்பதாகும்.

சிக்கனமே செல்வம் தகுதிக்கு மேல்
வாழ்வதே தரித்திரம் என்பதை
மனதில் வைத்திருக்க வேண்டும்.

சிக்கனமும் சேமிப்பும்
செல்வம் பெருக உதவும்.

சேமித்த பணம் வறுமையில்
பயன் அளிக்கும்.
சேர்த்து வைத்த புண்ணியம்
மறுமையிலும் துணை நிற்கும்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான
ஒரே வழி அல்ல.. ஆனால்
பெரும்பாலான சூழ்நிலையில்
பணத்தை அடிப்படையாக வைத்தே
மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது
தவிர்க்க முடியாத உண்மை.

சிக்கனம் சிறுசேமிப்பு கவிதை

சிக்கனமும் சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை
உயர்த்தும் இரு கருவிகள்.

பேராசை கொண்ட மனிதனுக்கு
உலகத்தையே கையில்
கொடுத்தாலும் திருப்தி
உண்டாவதில்லை.

செல்வாக்கு நீடித்திருக்க
வேண்டுமானால் செல்வத்தைப்
போலவே அதையும் சிக்கனமாகவே
செலவு செய்ய வேண்டும்.

செலவழிக்கும் பணத்துக்கு
கணக்கு எழுதிவை.
செலவழித்தது அவசியம்தானா
என்று சிந்தித்து பார்.
சிக்கனம் தானாகவே
வந்துவிடும்.

கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின்
போலியான உணர்வு.
எதிர்கால பொறுப்புடன்
செயல்படுவது சிக்கனம்.
பொருள் ஆசையால்
இயங்குவது கஞ்சத்தனம்.

சிக்கனமாக இல்லாமல்
யாரும் செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும்
வறியவராக முடியாது.

செல்வதுடன் இருக்க வேண்டுமென்றால்
சம்பாதிப்பதை போல் சேமிப்பிலும்
கவனம் வேண்டும்.

வளத்தின் ஒரு கை உழைப்பு.
ஒரு கை சிக்கனம்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்
அதில் சிக்கனமாக இருத்தல்
என்பது பாதி வெற்றிக்கு சமம்.

சிக்கனம் நமது வாழ்க்கையை
அழித்து விட கூடியதாக
இருக்க கூடாது.. மாறாக
சிக்கனம் நம் வாழ்க்கைக்கு
உயிர் கொடுப்பதாக
இருக்க வேண்டும்.

ஏழையாய் இருப்பதில்லை என்று
உறுதியாக முடிவு செய்யுங்கள்..
எப்பொழுதும் உங்களிடம்
இருப்பதை விட குறைவாகவே
செலவு செய்யுங்கள்.

சிக்கனம் என்பது
கஞ்சத்தனம் அல்ல..
செலவு செய்யும் விதம்.

மேலும் தொடர்ந்து படியுங்கள்..

இன்றைய சிந்தனை துளிகள்

நற்சிந்தனை துளிகள் – Natsinthanai in Tamil

நல்ல சிந்தனைகள் – Sinthanai Thuligal