கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள் Kanner Anchali Kavithai Tamil Thoughts இந்த பதிவில் “கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்” காணலாம். கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்இரங்கல் கவிதைகள்Kanner Anchali Kavithai கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள் 1. ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை எம் உயிரான உயிர்ப்பூவே சிதைத்தவன் யார்? அவன் காலனேயாயினு கழுவலேற்றுவோம் கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும் இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம். 2. பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே. 3. மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். 4. அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே, உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனை பிராத்திக்கிறோம். 5. பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ? ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!! கண்ணீர் அஞ்சலி கவிதைகள் 6. அன்பே உருவான கருவில் அவதரித்து இன்பம் தழைத்தோங்க இன்முகத்தால் வரவேற்று பண்பை பணிவை பார்போற்றும் உழைப்பை எமக்கு புரிய வைத்து அன்பாய் ஒரு கொடியின் மலர்களாய் அவனியிலே இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்து இன்று காலன் உமை அழைத்திட எங்கு சென்றீர் சென்ற வழி தேடுகிறோம் வருவீரோ எம் மனக்குறை தீர்க்க.! 7. காணாத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே வாழ்நாளில் மறவாது வடிக்கிறேன் கண்ணீர். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!! 8. மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர் ஐயாவே.!! உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! 9. பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்ன விதிவிலக்கா? – இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனை தினம் தினம் வேண்டி வந்தோம் அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவானா? ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! கண்ணீர் துளிகள் கவிதைகள் வரிகள் Kanner AnchaliKanner Anchali Kavithaiகண்ணீர் அஞ்சலிகண்ணீர் அஞ்சலி கவிதைகண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்கண்ணீர் அஞ்சலி கவிதைகள்