இரு வரி தத்துவங்கள்

Two Line Quotes In Tamil

இந்த பதிவில் அடங்கியுள்ள “இரு வரி தத்துவங்கள்” உங்கள் மனதிற்கு சிறந்த ஊக்கத்தை கொடுப்பவையாக இருக்கும்.

  • இரு வரி பொன்மொழிகள்
  • இரு வரி தத்துவம்
  • Two Line Quotes In Tamil

இரு வரி தத்துவங்கள்

1. உத்தமச் செயல்களை செய்ய நினைப்பவர்கள், அதை உடனடியாகச் செய்துவிட வேண்டும்.

2. அன்றாடப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுங்கள். அதுவே சிறந்த தியானம்.

3. உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.

4. சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.

5. இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.

6. அறிவுத் தேவையைவிட, கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கிவிடுகிறது.

7. பலருக்கு கண்களுண்டு, பகுத்தறியும் ஆற்றல் சிலருக்கே உண்டு.

8. காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

9. ஆடைக்குள் நிர்வாணம் தேடுவது -காமம். நிர்வாணத்திற்கு ஆடை தேடுவது -காதல்.

10. ஒரு வருடம் என்பது முன்னூற்றி அறுபத்தைந்து வாய்ப்புகள் கொண்டது. பயன்படுத்துங்கள். வெற்றி பெறுங்கள்.

11. அடுத்தவனுக்கு குழி தோண்ட நினைக்கும் நேரத்தில் தனக்கு அஸ்திவாரமே கட்டிக்கொள்ளலாம்.

12. நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

13. அனுபவங்கள் இல்லாத சொல்லப்படும் எந்த ஒரு வார்த்தையும் பயனற்றது.

14. நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்.

15. உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.

16. அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக் கூடியவன்.

17. நீந்துங்கள் அல்லது முழுகுங்கள்

18. காற்றைவிட கடும்வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.

19. மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.

20. பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.

இரு வரி தமிழ் பொன்மொழிகள்

21. பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.

22. இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.

23. கருணைதான் பெருந்தன்மையின் அடையாளம்.

24. மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.

25. பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.

26. பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.

27. பேசுபவர்கள் நல்ல செயலர்களாக இருப்பதில்லை.

28. பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.

29. தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.

30. பிறந்த மண்ணை நேசியுங்கள். நாட்டிற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருங்கள்.

31. வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகிவிட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.

32. தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்குச் சமமானது.

33. தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே.

34. அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு முதல் போடுகிறோமோ அதற்கேற்ப லாபமும் அதில் அதிகமாக கிடைக்கும்.

35. அறிவும் மானமும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே தான் இருக்கும்.

36. தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும்.

Read More Tamil Quotes.

ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai In Tamil

ஒரு வரி பொன்மொழிகள்