ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் கவிதை

Aasiriyar Thinam Valthukal

இந்த ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் கவிதை ஊடாக உங்களுக்கு எழுத்தருவித்த ஆசான்களுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

  • ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
  • ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்
  • Aasiriyar Thinam Valthukal

ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் கவிதை

இந்த வரிகளை உங்களால்
படிக்க முடிகிறது என்றால்..
உங்கள் ஆசிரியர்களுக்கு
மனதின் ஆழத்தில் இருந்து
நன்றி சொல்லுங்கள்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

மாணவனின் கனவுகளை
கைவசப்படுத்தி கொடுக்க
உதவும் தூண்டுகோலே
சிறந்த ஆசிரியர்..
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

பெற்றோர்கள் குழந்தைகளை
மட்டுமே உலகத்துக்கு
தருகின்றனர்.. ஆனால்
ஆசிரியர் உலகத்தையே
குழந்தைகளுக்குத் தருகிறார்..
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

உலகில் இரண்டு புனிதமான
இடங்கள் உண்டு.. ஒன்று
தாயின் கருவறை.. இன்னொன்று
ஆசிரியரின் வகுப்பறை
தாயின் கருவறையில் ஒருவன்
உயிரைப் பெறுகிறான்.. ஆசிரியரின்
வகுப்பறையில் அவன்
அறிவைப் பெறுகிறான்..
இனிய ஆசிரியர் தின
நல் வாழ்த்துக்கள்.!

ஒரு குழந்தையை பத்திரமாய்
பார்த்து வளர்ப்பது
தாயின் கடமை
சித்திரமாய் செதுக்கி எடுப்பது
ஆசிரியரின் கடமை..
ஒரு குழந்தையை குறையில்லாமல்
வளர்ப்பது தந்தையின் கடமை..
குற்றமில்லமால் வளர்ப்பது
ஆசிரியரின் கடமை.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

ஆசிரியர் பணி என்பது
கல்வியோடு ஒழுக்கம்.. பண்பு..
தன்னம்பிக்கை.. ஊக்கம்..
விடாமுயற்சி ஆகியவற்றை
மாணவர்களுக்கு ஊட்டி சிறந்த
மனிதர்களாக்கும் உன்னத பணி..
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன்.. நன்றியுடன்
உங்களை நினைத்துப் பார்க்கும்
உங்கள் மாணவன்
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

தன்னில் சிறியவனை வானளவு
உயர்த்தி பொறாமை கொள்ளாத
ஒரு கடவுள்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

கற்பித்தலே கண்கள் என்று
வாழும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கம்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

வாழும் போது புரியாத வாழ்க்கை
போல.. கற்கும் போது புரியவில்லை..
கற்பிக்கும் போது புரிகிறது
பல புரியாத புதிர்கள்..
என் ஆசான்களுக்கு இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

வாழ்நாள் முழுவதும் நாம்
நன்றிக்கடன் செலுத்த வேண்டிய
கடவுள் ஆசிரியர்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

உங்களை வாழ்த்தி வாழ்த்தைப்
பெறுகின்றேன்.. இனிய
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

ஆசிரியராக இருப்பது வரம்..
ஆசிரியராக வாழ்வது தவம்..
வரம் பெற்று தவத்தில் வாழும்
என் ஆசிரிய சொந்தங்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

கல்வியோடு ஒழுக்கத்தையும்
பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின்
சேவை மேலும் சிறக்க வேண்டும்..
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

எழுத்தறிவித்தவன் இறைவன்
ஆசிரிய பெருந்தகைகளுக்கு
ஆயிரமாயிரம் வணக்கங்கள்..
சிறந்த ஆசிரியர் ஒரு போதும்
வகுப்பறைக்குள் நுழைவதில்லை..
மாணவர்களின் இதயத்திற்குள்
நுழைகிறார்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்
ஆனால் நோக்கம்.. லட்சியம்..
ஒன்று தான் என் மாணவன்
முன்னேற வேண்டும்..
தேர்ச்சி பெற வேண்டும்..
வெற்றி பெற வேண்டும்..
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா வணக்கத்திற்கு
உரியவர்கள்.. இனிய
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!

மேலும் படியுங்கள்…