இந்த பதிவில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட “மகாகவி பாரதியார் பொன்மொழிகள்” பார்க்கலாம்.
- மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
- பாரதியார் பொன்மொழிகள்
- Mahakavi Bharathiyar Quotes In Tamil
- Bharathiyar Quotes In Tamil
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
1.தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்.
2. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.
3. செய்வதை துணிந்து செய்.
4. அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.
5. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை.
6. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.
7. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.
8. நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.
9. எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.
10. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
11. நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.
12. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்.
13. பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!
14. கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
15. வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
16. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
17. பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்பவனை விட, தன் சொந்த உழைப்பில் வாழ்பவனேசிறந்தவன்.
Mahakavi Bharathiyar Quotes In Tamil
18. வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.
19. பிச்சை ஏற்பவன் மான அவமானத்தை விட்டு விடுகிறான்.
20. உங்களின் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெற்றி கொள்ள உங்கள் ஆசைகளை விட்டு விடுங்கள்.
21. வாழ்வில் நேர்மையை பின்பற்றினால் கால்கள் சரியான பாதையில் நடக்க தொடக்கி விடும்.
22. புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
23. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.
24. அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.
25. மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
26. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
27. பயம், சந்தேகம், சோம்பல்.. ஆகிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
28. திருமணமான பெண்ணை கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும்.. அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
29. கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை.. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.
30. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.
31. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள்.
32. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அது நிறைவேறுவது என்பது சாத்தியமல்ல.
33. உள்ளதை பயத்திற்கு இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
34. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருத்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.