இந்த பதிவில் “தினம் ஒரு பொன்மொழி” காணலாம்.
- தினம் ஒரு பொன்மொழி
- Dhinam Oru Ponmozhigal In Tamil
தினம் ஒரு பொன்மொழி
1.இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்.
2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி.
3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை.
4. மனிதன் செய்கிற குற்றங்களுக்கு கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.
5. கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக மாற்ற பொது அறிவு பத்துமடங்கு தேவை.
6. ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும்.
7. பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.
8. மனிதன் இரண்டு பேர்வழி. ஒருத்தன் இருளில் விழித்திருக்கிறான். மற்றவன் ஒளியில் தூங்குகிறான்.
9. நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.
10. வறுமையை விட மனிதனின் அறியாமையே கொடூரமானது.
11. பேச ஆரம்பித்தால் எண்ணங்களின் அமைதி போய்விடும்.
12. நான் சொல்பவைகளுள் பாதி அர்த்தமற்றவையாக இருப்பினும் நான் அவற்றைச் சொல்லக் காரணம் மீதிப் பாதியாவது உன்னை வந்தடையட்டும் என்றே!
13. உங்கள் கனவுகளே உங்கள் வெற்றிப் பாதையாக அமையும்.
14. நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிகிறீர்கள் என்று பிறர் சொல்லும் விமர்சனங்களுக்காக கவலை கொள்ளாதீர்கள் தனித்துவமே உங்களின் அடையாளம்
15. உங்கள் மனவலிமை அறிவுக் கூர்மையின் வெளிப்பாடு
16. நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றமாக அமையலாம்.
17. ஒரு செயலுக்கான முயற்சியைத் தொடங்கியதும் ‘அது தேவைதானா?’ என்று ஒருபோதும் சிந்திக்காதீர்கள்.
Dhinam Oru Ponmozhigal In Tamil
18. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள்
19. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய எந்தச் செயலையும் அவசரமாகச் செய்து முடிக்க திட்டமிடாதீர்கள்.
20. நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை இலக்காக மட்டும் எண்ணாமல் வாழ்க்கையாக எண்ணுங்கள் இலக்குக்காக மட்டும் செயல்படுகிறீர்கள் எனில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.
21. மற்றவர்களின் ஏளனங்கள் என்னை ஒருபோதும் வீழ்த்தியதில்லை காரணம் என் மனவலிமைக்குப் பலம் அதிகம்
22. வாழ்க்கை என்பது போர்க்களம் இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவைதாம் வெற்றியை தீர்மானிக்கின்றன.
23. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. மனதின் ஈரமும் வேண்டும்.
24. சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை.
25. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்?
26. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
27. எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதே. உன் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்துவிடு.