வறுமை கவிதை வரிகள்

Varumai Kavithai In Tamil

இந்த பதிவில் “வறுமை கவிதை வரிகள்” காணலாம்.

  • வறுமை கவிதை
  • வறுமை பற்றிய கவிதைகள்
  • Varumai Kavithai In Tamil

வறுமை கவிதை வரிகள்

1.விரைவில் படுக்க சென்று
காலம் தாழ்த்தி எழுபவனின்
தலையில் வறுமை விரைவில்
கூடு கட்டும்.!

2. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்
உன்னை வறுமைக்குள் தள்ளும்.!

3. வறுமை என்ற நோய்
விலக வேண்டுமானால்,
உழைப்பு என்ற மருந்தைக் கொடு.

4. திறமையோடு சிறிது பொறுமையும்
இருந்தால் வாழ்க்கையில்
வறுமை என்பதே வராது..
இதை உணர்ந்தவர் வாழ்வில்
துயரம் என்பதே இருக்காது.

5. இத்துப்போன போன கூரையை
கரையான்கள் அரிக்குது..
ஒட்டிப்போன என்னுடம்ப
பசிவந்து மெல்ல கரைக்குது..
என் வீட்டு அடுப்படியும்
பூனை தூங்கும் இடமாச்சு
பசி மறந்து நான் தூங்கி
வருஷம் பல ஆச்சு..
என் வறுமைக்கும் வாழ்வுக்கும்
தூரம் ரொம்ப நீளுது
என் எலும்புக்கும் தோலுக்கும்
நெருக்கம் ரொம்ப கூடுது..!

6. மாடு கட்டி போர் அடிச்ச
காலம் எல்லாம் மறந்து போச்சு
இப்போ கஞ்சிக்கே நாதியத்து
நடுத்தெருவு வந்தாச்சு..
வாய்ப்புகள் வசதியெல்லாம்
என்னை விட்டு ஓடிப்போச்சு
தரித்திரம் மட்டுமே ஏனோ
கூடவே தங்கிடுச்சு.!

7. இறைவா..
இதயத்தில் உண்டாகும் வலியை
மறக்க சக்தி தந்த நீ..
வயிற்றில் உண்டாகும் பசியை
மறக்க சக்தி தருவாயா?

8. கிழிந்த கந்தலாடை ஏந்திய கைகள்..
தோய்ந்த தோள்கள் தேய்ந்த கால்கள்..
வற்றிய வயிறு ஒட்டிய கன்னம்
பிதுங்கிய விழிகள்..
நீ தந்த வேடத்தை நாள்தோறும்
போட்டுக்கொண்டு திரிகிறேன்.!

9. கருவறையில் இருள் தந்தாய்
கல்லறை வரை இருள் தருவாய்
என்று நான் எண்ணியதில்லை.!

10. ருசிக்கு புசிக்கும் மனிதனே
பசிக்கு புசிக்கும் மனிதனை
எண்ணிப் பாருங்கள்.

11. கடவுளே..
உன் படைப்பில் ஏன் இந்த பிரிவு..
வறுமை தினமும் வாட்டி வதைத்தாலும்
பொறுமை கொண்டு காத்திருக்கிறேன்.

Varumai Kavithai In Tamil

12. வசதியாய் வாழ ஆசைப்படவில்லை..
வறுமையின்றி வாழவே ஆசை கொண்டேன்.!
வசதி படைத்தவர்கள் அங்கே
ஆடிக்கொண்டு இருக்கையில்
வறுமை கொண்டவர்கள் இங்கே
வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.!

13. வறுமையின் நிறம் கருப்பு என்பார்கள்
அது வறுமை கொண்டோரின்
நிறமா இல்லை..
வறுமைக்கு காரணமான
பணத்தின் நிறமா?
என்பது விளங்கவில்லை..!

14. ஒருவேளை வயிறாரி இருவேளை
மனமாறி..
அடுத்தவேளை ஆகாரம்
அமையுமானு அறியாம..
தெருத்தெருவா திரிவேனே
குப்பமேடு கொடைதருமா
என் குறைப்பசிய தீர்த்து வைக்க.!

15. கடற்கரைய கல்லறையாக்கி
நீண்டு படுக்க நிலமிருக்க..
ஆறு அடி அளவிருக்க
நான்படுக்க இடமில்லை..!

16. நமது வீட்டில் வறுமை
கோலம் போட்டது..
அப்பாவின் வருமானம்
சீனி கலக்காத தேனீரை பருக வைத்தது..
அம்மாவின் கண்ணீர் துளிகள்..
நம் உணவிற்கு உப்பாய் ருசித்தது.!

17. மடியில் பசியிருந்தாலும் மலர்ந்த
முகத்துடன்..
தன் மடியில் சுமப்பதை
நிறுத்தவில்லை நம் பெற்றோர்கள்..!

18. வறுமையை வரியாக்கி கவியாக்க
வார்த்தை உண்டோ?
வயிற்று பசியை மிஞ்சிய
வலிதான் எதிலுண்டோ?
இதயத்தை நொறுக்கிடும்
இறைவன் தந்த வேடம் இது..
வறுமையை கருவறுக்க
துணியாத உலகு இது.!

19. பொண்ணுக்கும் பொருளுக்கும்
போர் தொடுக்கும் மனித இனம்..
வறுமையில் மாண்டவரை என்றும்
எண்ணிப்பார இழிவான குணம்.!

20. வெறுமையோட வாழ்ந்தவனே..
வறுமையோட வாரிசானேன்..
என்னோட முடியட்டும்
எதிர்காலம் விடியட்டும்.!

21. நம்மிடம் இருப்பதை சற்றேனும்
கொடுப்போம்..
கண்ணீர் துடைப்போம்..
அவர்கள் எதிர்காலம் விடிய
எம்மால் முடிந்த தானம் செய்திடுவோம்.!

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

அன்பு கவிதைகள் வரிகள்

மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai