தமிழ் நாட்டு தலைவர்களில் முக்கியமான மக்கள் மனம் கவர்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் “காமராஜர் பொன்மொழிகள்”.
- காமராஜர் பொன்மொழிகள்
- காமராஜர் தத்துவம்
- Kamarajar Quotes In Tamil
காமராஜர் பொன்மொழிகள்
1.ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது
ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.!
2. எந்தவித அதிகார வர்க்கத்தில்
இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன்
செயல்பட வேண்டும்..
பொறுப்பு உணர்சி இல்லாத
அதிகாரம் நிலைக்காது.!
3. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு
உழைக்காத மனிதன்
பிணத்திற்கு சமனாவான்.!
4. அளவுக்கு அதிகமாக பேசுவது
எவ்வளவு தீமையான வழக்கமாக
இருக்கிறதோ.. அதே போல்
குறைவாக பேசுவதும் தீமையே.!
5. பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக
பயன்படுத்துவதே..
உலகின் மிகவும் கேவலமான
செயலாகும்.!
6. எல்லோருடைய வாழ்க்கையும்
வரலாறாவதில்லை..
வரலாறு ஆனவர்கள் யாரும்
தனக்காக வாழ்ந்ததில்லை.!
7. அனைத்து மக்களிடமும்
குறைகள் மட்டுமே இருப்பதில்லை..
ஏதேனும் சிறப்பு திறமைகளும்
இருக்கத்தான் செய்யும்.!
8. நேரம் தவறாமை எனும் கருவியை
பயன்படுத்துபவன் எப்போதும்
கதாநாயகன் தான்.!
9. உன் பிள்ளை முடமாக
பிறந்து இருந்தால்..
சொத்து சேமித்து வை..
சொத்து சேர்த்து வைத்து
பிள்ளையை முடம் ஆக்காதே.!
10. எல்லாம் போய்விட்டாலும்
வெல்ல முடியாத உள்ளம் இருந்தால்
உலகத்தையே கைப்பற்றலாம்..!
11. பணம் இருந்தால் தான்
நாலு பேர் நம்மை மதிப்பார்கள்
என்றால்..
அந்த மானங்கெட்ட மதிப்பு
எனக்கு தேவையே இல்லை..!
12. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே
உருவாக்கப்பட்டவை..
சட்டத்துக்காகவும்
விதி முறைகளுக்காகவும்
மக்கள் இல்லை.!
Kamarajar Quotes In Tamil
13. சமதர்ம சமுதாயம் மலர..
வன்முறை தேவையில்லை..
கல்வியும் உழைப்பும்
போதுமானது.!
14. நாடு உயர்ந்தால்
நாமும் உயர்வோம்.!
15. நூறு சிறந்த அறிவாளிகளுடன்
போட்டி போடுவதை விட..
ஒரு முட்டாளோடு போட்டி போடுவது
மிக கடினமானது.!
16. அப்பாவி ஏழை மக்களை
வசதி கொண்டவர்களும்..
கல்மனம் கொண்டவர்களும்..
கசக்கி பிழிந்து விடாதபடி
தடுக்க வேண்டியது மிக அவசியம்.!
17. தாய்மார் கற்று விட்டால் நாட்டில்
தொந்தரவே இருக்காது.!
18. அரசு என்பது எல்லா மக்களுக்குமே
சொந்தமானது.!
19. கற்ற ஜாதி, கற்காத ஜாதி என்றொரு
ஜாதி உண்டாகாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.!
20. மாணவர்கள் அரசியலில்
ஈடுபட வேண்டியதில்லை..
அரசியல் தான் நாட்டுக்கு அஸ்திவாரம்..
அரசியல் பற்றி மாணவர்கள் நன்கு
தெரிந்து கொள்ள வேண்டும்..
அரசியலை பற்றி சிந்திக்காமல்
இருப்பது ஆபத்தானது.!
21. ஜாதி என்ற நோயை முளையிலேயே
கிள்ளி ஏறிய வேண்டும்.!
22. நாடு வளர்ச்சி அடைய
வறுமையும் அறியாமையும்
அழிய வேண்டும்..
இவை இரண்டும் அழியாமல்
நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக
கூற முடியாது.!
23. நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதிலும்..
ஒற்றுமையோடு பாடுபடுவதிலும் தான்
நமது முன்னேற்றம் இருக்கிறது.!
24. இலட்சியத்தை அடைய அமைதியான
வழிகளை பின்பற்ற வேண்டும்..
பலாத்கார புரட்சி தேவையில்லை.!
25. நாம் எதைச் செய்தாலும்..
எதற்காக செய்கிறோம் என்பதை
மக்களுக்கு சொல்ல வேண்டும்.!
26. ஒன்றை செய்ய விரும்பும் போது
அதை செய்வதற்காகவே இருக்கிறோம்
என எண்ண வேண்டும்.!
27. துன்பத்தை அனுபவிக்காமல்
எந்த ஒரு மனிதனும்
அவரது இலட்சியத்தை
அடைய முடியாது.!