ஓஷோ தத்துவங்கள் – Osho Quotes in Tamil

Osho Quotes in Tamil

இந்த தொகுப்பு “ஓஷோ தத்துவங்கள் – Osho Quotes in Tamil” உள்ளடக்கியுள்ளது.

  • ஓஷோ தத்துவங்கள்
  • ஓஷோ தத்துவம்
  • Osho Quotes in Tamil
  • தமிழ் Quotes

ஓஷோ தத்துவங்கள் – Osho Quotes in Tamil

வாழ்க்கை விலை மிகுந்த
ஒரு வாய்ப்பு ஆனால் அதன்
மதிப்போ வாழ்வோரைப்
பொறுத்தது..!

அன்பு இல்லாதவன்
வாழ்க்கையில் புன்னகை..
உற்சாகம்.. போன்றவை
இருக்காது..!

வன்முறை என்பது
மனிதருக்கு வியாதி..
ஆனால் விலங்குகளுக்கு
அது அவற்றின் இயல்பு..!

வன்முறை உள்ள மனம்
சண்டையிடாமல் திருப்தி
அடையாது.. பிறரைத்
துன்புறுத்துவதிலேயே
மகிழ்ச்சி காணும்..
அத்தகைய மனம் எப்போதும்
நிரந்தர மகிழ்ச்சி
அடைய முடியாது..!

நம் உறவுகள் எல்லாம் உள்ளே
விஷத் தன்மை
கொண்டவர்களாகவும் வெளியே
இனிப்பு பூசப்பட்டவர்களாகவும்
இருக்கிறார்கள்..!

நெருப்பில் கை வைக்க அஞ்சும்
மனிதன் கோபம் எனும்
நெருப்பில் மட்டும் தைரியமாக
கை வைக்கிறான்..!

தேடு.. கண்டு பிடி..
பல தவறுகள் நிகழும்..
ஆனாலும் வேறு வழியில்லை..
பயிற்சியும் தவறுகளும்
தான் வழி.. மெல்ல.. மெல்ல..
தவறுகள் குறையும்.
மேலும்.. மேலும்..
தெளிவு பிறக்கும்..
இடையில் நிறுத்திவிடாதே..!

பேசும் போது பயப்படாதீர்கள்..
பயப்படும் போது பேசாதீர்கள்..!

அடுத்தவருக்கும் உனக்கும்
இருக்கும் உறவு கண்ணாடியைப்
போன்றது..!

வேலையை வெறுத்துச் செய்பவன்
அடிமை.. வேலையே
விரும்பிச் செய்பவன்
அரசன்..!

இந்த நிமிடம் தான் உண்மை..
மற்றவை அனைத்தும்
நினைவுகளும்
கற்பனையும் தான்..!

யாருடனும் போட்டி போட
வேண்டிய அவசியம் இல்லை..
நீங்கள் நீங்களே..
நீங்கள் சிறப்பாக
செயல்படுகிறீர்கள்.. உங்களை
நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்..!

எத்தனை தவறுகள்
வேண்டுமானாலும் செய்யுங்கள்..
ஆனால் ஒரே தவறை
திருப்ப செய்யாதீர்கள்..
நீங்கள் கற்றுக் கொள்ளுவீர்கள்..!

பயம் தொலைகிற இடத்தில்
வாழ்வு தொடங்குகிறது..!

உண்மை என்பது வெளியில்
இருக்கும் ஏதோ ஒன்றைக்
கண்டுபிடிப்பதல்ல..
உள்ளுக்குள் இருக்கும்
ஒன்றை உணர்வது..!

நிபந்தனையின்றி உன்னையே
கொடுப்பது தான்
உண்மையான அன்பு..!

உன்னை தவிர வேறு எவராலும்
உன்னை தடுக்க முடியாது..
உன் வழியில்
நீ குறுக்கே நிற்காதே..!

எதிலும் குதிப்பதற்கு முன்பு
இருமுறை யோசி என்று
மற்றவர்கள் கூறுவார்கள்..
முதலில் குதித்து விடு அதன்
பின்னர் நீ விரும்புகின்ற அளவு
யோசி என்று நான் கூறுகிறேன்..!

ஒருவர் தன்னிடமே சமாதானமாய்..,
சுகமாய்.., இருக்க முடியவில்லை
என்றால்.. யாரிடமும்
சமாதானமாய் அமைதியாய்
இருக்க முடியாது..!

மற்றவர்களுக்கு அறிவுரை
சொல்லுவதில் கிடைக்கும்
ஆனந்தம் மிகவும் நுட்பமானது..
கர்வம் கலந்த ஆனந்தம் அது.
உன் அறிவுரையைக் கேட்பவன்
அறியாதவன் ஆகிறான்.. நீயோ
அறிவாளி ஆகிவிடுகிறாய்..
இந்த உலகில் எல்லோருமே
கொடுக்க கூடிய.. யாருமே
பெற்றுக்கொள்ளாத ஒரே விஷயம்
அறிவுரை மட்டுமே.. யாருமே
அதைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதும்
நல்லது தான்..!

இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க…