ஓஷோ கவிதைகள் வரிகள் – Osho Quotes in Tamil

Osho Quotes in Tamil

இந்த தொகுப்பு “ஓஷோ கவிதைகள் வரிகள் – Osho Quotes in Tamil” உள்ளடக்கியுள்ளது.

  • ஓஷோ கவிதைகள் வரிகள் – Osho Quotes in Tamil
  • ஓஷோ வரிகள்
  • தமிழ் ஓஷோ கவிதை
  • Osho Quotes in Tamil

ஓஷோ கவிதைகள் வரிகள் – Osho Quotes in Tamil

ஒருவர் உடல் துன்பத்தில்
இருக்கும் போது.. நீங்கள்
எதை போதித்தாலும் அது
அவர்களுக்கு
முட்டாள்தனமாகவே படும்..!

மனிதன் யாரும் சாக
விரும்புவதில்லை..
தற்கொலை செய்து
கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு
எதிரானவர்கள் அல்ல.. அடுத்த
பிறவியிலாவது நன்றாக
இருக்கலாம்.. என்று தான்
அவர்கள் நினைக்கிறார்கள்..!

கண்ணில் பட்ட சிறுமணல்
எப்படி இந்த அழகிய
உலகத்தைப் பார்க்க முடியாமல்
செய்து விடுகிறதோ..
அதைப்போல.. சிறிய
தயக்கம் அல்லது சந்தேகம்..
இந்த வாழ்வின் பெருமை..
அழகு.. உங்கள் பலம்
அனைத்தையும் மறைத்து விடும்..!

வெற்றி என்பதில் எந்தத்
தகுதியும் கிடையாது..
உண்மையைச் சொன்னால்
அது மிகவும் அருவருப்பானது..
ஒருவனைத் தோற்கடிப்பது
என்பது அர்த்தம் இல்லாதது..
ஆனால் அதைத் தான் மனம்
விரும்புகிறது.. வெற்றி என்பது
நம் பழைய மிருக வாழ்வின் மிச்சம்..!

கண்ணாடியில் கூட நாம் நாமாக
இருக்க விரும்புவதில்லை..
நம் கற்பனை போலவே நாமும்
இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோம்.. எனவே தான்
கண்ணாடியின் முன் முழு
அலங்காரத்துடன் நிற்கிறோம்..!

நரகத்தை பற்றி ஏன்
பேசிக் கொண்டிருக்கிறீர்கள்..?
இந்த பூமியில் நாம் இப்போது
அனுபவித்துக் கொண்டிருக்கும்
துன்பத்தைக் காட்டிலும் அந்த
நரகம் மோசமானதாகவா
இருக்கப் போகிறது..?

ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு
அர்த்தமுண்டா.. இல்லையா
என்று எப்படி நினைத்துப்
பார்க்க முடியும்..? ஒரு மலரின்
அழகைக் கூட அவனால்
ரசிக்க முடியாது.. பசி..!
இசையைப் பற்றியோ..
கவிதை பற்றியோ..
ஓவியம் பற்றியோ..
பசித்தவனிடம் பேச முடியாது..
அப்படிப் பேசினால் அவனை
அவமானப்படுத்துவது ஆகும்..!

கோடிக்கணக்கில் மக்கள்
ஒருவருக்கொருவர் தீர்ப்பு
சொல்லிக் கொண்டும்..
சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறார்கள்..!

சட்டம் என்பது தவறான
மனிதனுக்கு உரியது..
சரியான மனிதனுக்கு அல்ல..
ஏனென்றால் இந்த முழு
உலகமும் தவறான மனநிலையில்
செயல்படுகிறது.. எப்போதாவது
ஒரு சரியான மனிதன் வந்தால்..
அவனை ஒரு அயலவன்
போல தான் பார்க்கிறது..!

இன்னொருவரைப் போல
இருக்க நினைப்பது
இன்னொருவர் பொருளை
அபகரிப்பது போன்ற
திருட்டுத் தன்மை கொண்டதாகும்..
இன்னொருவரைப் போல நடப்பது
என்பதே ஒரு போலித்தனம்..!

ஏழைக்குத் துறவு மனப்பான்மை
வருவதில்லை.. ஆனால்
பணக்காரனுக்கோ தான்
இதுவரை சேர்த்ததெல்லாம்
வீண் என்பதும்.. உண்மையில்
இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை
என்பதும் புரிகிறது..!

இரக்கம் என்பது ஒரு வகை
ஏமாற்றுதல்.. பிறர் துயரத்தில்
துயரமும்.. பிறர் இன்பத்தில்
மகிழ்ச்சியும் கொண்டாடுதல்
தான் உண்மையான இரக்கம்..
ஆனால் பிறர் துயர் கண்டு
இரக்கம் கொள்ளும் நாம்
பிறர் மகிழ்ச்சி கண்டு
சந்தோசப்படுவதில்லை..!

மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க…