வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

Vasippin Mukkiyathuvam In Tamil Katturai

இந்த பதிவில் வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை பதிவை காணலாம்.

பல தலைவர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் போன்றோரை உருவாக்கியது அவர்களுடைய வாசிப்பு பழக்கமே.

இன்றைய தலை முறையினருக்கு வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. வாசிப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • வாசிப்பின் முக்கியத்துவம்
  • Vasippin Mukkiyathuvam In Tamil Katturai
துரித உணவு துரித முடிவு கட்டுரை

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாசிப்பும் அறிவு வளர்ச்சியும்
  3. வாசிப்பும் அனுபவமும்
  4. வாசிப்பின் நன்மைகள்
  5. முடிவுரை

முன்னுரை

“வாளினுடைய கூர்மையும் நூலினுடைய கூர்மையுமே ஒரு நாட்டை ஆளும்” என்று கூறுவார்கள் இன்றைய கால கட்டத்தில் நூலின் உடைய கூர்மைதான் உலகத்தையே ஆழ்கிறது என்றால் அது மிகையல்ல.

அதாவது மனிதனை மனிதனாக்குவது இந்த கல்வியும் அதனோடிணைந்த வாசிப்பும் தான் இதனை “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என ஒளவையார் நாலடியார் எனும் நூலில் பாடுகிறார்.

இதன் மூலமாக ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு எந்த அளவுக்கு முக்கியத்துவமானது என்பதனை அறிய முடிகிறது. வாசிப்பதனால் மனிதனது சிந்தனை திறன் அதிகரிக்கும் நல்ல சிந்தனை ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

இக்கட்டுரையில் வாசிப்பும் அறிவு வளர்ச்சியும், வாசிப்பு அனுபவமும் மற்றும் வாசிப்பின் நன்மைகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

வாசிப்பும் அறிவு வளர்ச்சியும்

தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தற்கு குற்றனைதூறும் அறிவு” என்கிறார் பொய்யாமொழி புலவர் அதாவது மண்ணை எவ்வளவு ஆழமாக தோண்டினால் நீரானது சுரப்பதனை போல நல்ல நூல்களை கற்பதனால் மனிதர்களுக்கு நல்லறிவானது தோன்றும் என்பது பொருள்.

மனிதன் நிறைய நூல்களை படிக்க படிக்க அறிவானது வளர்கிறது. இதனை நான் சொல்ல காரணம் நஞ்சு கொடுக்கப்படும் வரை கிரேக்க நாட்டு நூல்களை படித்து கொண்டிருந்தவர் “சாக்ரட்டீஸ்” இறக்கும் தருவாயிலும் கூட படிப்பின் மீது ஆழமான பற்றுதலோடு கற்றிருந்தார்கள்.

“Leaders are Readers” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். படிப்பகங்களுக்கு அருகில் உறங்கும் இடத்தை கேட்டார் “அம்பேத்கர்”.

தான் படித்த புத்தகத்தை முடித்து விடவேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை தள்ளி போட சொன்னவர் “அறிஞர் அண்ணா”.

33 ஆண்டுகள் நூலகத்தில் மூழ்கி “மூலதனம்” எனும் கம்யூனிச சித்தாந்தத்தை கண்டு பிடித்தார் “கார்ல் மார்க்ஸ்”.

அது மாத்திரமன்றி “படிப்பால் மட்டுமே பாரதத்தால் பார் ஆழலாம்” என்று கூறியவர் “அப்துல் கலாம்“.

இவ்வாறு வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றிவிடும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது.

வாசிப்பும் அனுபவமும்

வாசிப்பு ஒரு மனிதனுக்கு பல்வேறான அனுபவங்களை கற்று தரவல்லது “ஒரு நல்ல நூலானது பல நல்ல நண்பர்களுக்கு ஒப்பானது” என்று கூறுவார்கள்.

பல அறிஞர்களும் வாசிப்பின் அவசியம் பற்றி ஏன் கூறவேண்டும். ஏனென்றால் வாசிப்பு அந்தளவிற்கு எமது வாழ்க்கைக்கு நிறைய பாடங்களை கற்று தருகின்றது.

கம்பனுடைய ஒரு செய்யுள், பாரதியினுடைய ஒரு பாட்டு, ஏன் கண்ணதாசனுடைய ஒரு வரி நம்முடைய வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். இதுவே வாசிப்பினுடைய மகத்துவம். ஒரு வரி பல அர்த்தங்களையும் அனுபவங்களையும் எமக்கு சொல்லும்.

வாசிப்பின் நன்மைகள்

வாசிப்பதனால் மனிதன் பூரணம் அடைகிறான் என்று கூறுவார்கள். வாசிப்பு எமக்கு அறிவினை மாத்திரமன்றி சிந்திக்கின்ற ஆற்றல், பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள், கற்பனை ஆற்றல், படைப்பாற்றல், பொறுமை, மன ஒருநிலைப்பாடு, மற்றும் சஞ்சலமற்ற மனநிலை போன்ற பல நல்ல குணங்களை எமக்கு தருகிறது.

“தாஸ்ராய்” இனுடைய புத்தகங்கள் தான் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது என்கிறார் மகாத்மாகாந்தியடிகள்.

மகாத்மாகாந்தியனுடைய சத்தியசோதனை புத்தகம் தான் “மார்ட்டின் லூதர் கிங்” இனை உருவாக்கியது.

“எட்டானல் வெலோசிற்றி” எனும் நூல் தான் “டாக்டர் அப்துல் கலாமை” அணு விஞ்ஞானியாக மாற்றியது என அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே வாசிப்பு மனிதனது வாழ்க்கையை எப்படிமாற்றியிருக்கிறது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.

முடிவுரை

இன்றைக்கு எமது சமூகத்திடமும் மாணவர்களிடத்திலும் வாசிப்பின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

இன்றைக்கு மாணவர்களின் ஆக்கத்திறனும் சிந்தனை திறனும் வெகுவாக குறைவதற்கு வாசிப்பு திறன் குறைவடைவதே காரணமாகும்.

இன்றைய சமுதாயம் அதிகம் சமூகவலைத்தளங்களை பாவிப்பதன் காரணமாக நூலகங்களையும் வாசிப்பு பழக்கவழக்கங்களையும் மறந்துவிட்டனர் எனலாம்.

வாசிப்பு என்றைக்கும் நன்மை தரும் பழக்கவழக்கம் ஆகையால் வாசிப்பை அதிகப்படுத்துவோம்.

You May Also Like:

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை